பப்லு பிரித்திவிராஜ்
பப்லு பிரித்திவிராஜ் (Babloo Prithiveeraj பிறப்பு 18 சூலை 1966) என்பவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் தோன்றியுள்ளார். மேலும் இவர் 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
பிரித்திவிராஜ் | |
---|---|
பிறப்பு | 18 சூலை 1966 இந்தியா, பெங்களூர் |
பணி | நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1988–தற்போதுவரை |
வாழ்க்கைத் துணை | பீனா (தி.1994–தற்போதுவரை) |
பிள்ளைகள் | அஹீத் (பி.1995) |
வாழ்க்கை
தொகுபிரித்திவிராஜ் முதன்முதலில் நான் வாழவைப்பேன் (1979) என்ற படத்தில் பப்லு என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கே. பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிப்பதற்கு முன்னர் 1980களில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட மலையாளப் படங்களில் நடித்துவந்தார். இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க வருவதற்கு முன் அவள் வருவாளா போன்ற படங்களில் எதிர்மறை பாத்திரங்களை ஏற்று நடித்தார். 2000களில் நாகா இயக்கிய நகைச்சுவை தொலைக்காட்சித் தொடரான ரமணி விசஸ் ரமணி மற்றும் அமானுசிய திகில் தொடரான மர்ம தேசம் ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரு தொடர்களும் இவரது வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தின. இதற்கிடையில் இவர் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சவால் என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கனார். பின்னர் இவர் ராதிகவின் தொலைக்காட்சித் தொடரான அரசியில் திருநங்கையாக நடித்தார். அதன்பிறகு தொலைக்காட்சித் தொடர்களான ராஜ ராஜேஸ்வரி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்தார்.[1]
பிரித்திவிராஜுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால் நடனத் திறமைக்கான போட்டி நிகழ்ச்சியாக விஜய் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன்னின் இரண்டாவது பருவத்தில் போட்டியிட்டார். நிகழ்ச்சியின் போது, நடிகரும் அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.[2] 2010இல் இருந்து இவர் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார். 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய வாணி ராணி தொலைக்காட்சித் தொடரில் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்தார். இவர் மலேசியா சென்றுவந்த பிறகு அதன் தாக்கத்தால் சென்னை, பெசண்ட் நகரில் சா ரிபப்ளிக், பப்லி டி ஷாப் என்ற தேனீர் கடையைத் துவக்கினார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1994இல் பீனா என்பவரை பப்லு திருமணம் செய்தார். இவர்களுக்கு 1994இல் அகீத் என்ற மகன் பிறந்தார்.[4]
- திரைப்படங்கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | Notes |
---|---|---|---|---|
1971 | நான்கு சுவர்கள் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1973 | பாரத விலாஸ் | குழந்தை சங்கர் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் |
1974 | அம்மா மனசு | தெலுங்கு | குழந்தை நட்சத்திரம் | |
1975 | டாக்டர் சிவா | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1975 | நாளை நமதே | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1976 | பாரத விலாஸ் | தமிழ் | குழந்தை நட்சத்திரம் | |
1979 | நான் வாழவைப்பேன் | Tamil | குழந்தை நட்சத்திரம் | |
1985 | நான் சிகப்பு மனிதன் | தமிழ் | ||
1987 | ஒரு தாயின் சபதம் | மது | தமிழ் | |
1989 | மலையாத்திப்பொண்ணு | மலையாளம் | ||
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் | ரவி | தமிழ் | |
1990 | சந்தனக் காற்று | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1990 | மனைவி ஒரு மாணிக்கம் | தமிழ் | ||
1991 | சிகரம் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1991 | கும்பக்கரை தங்கய்யா | தமிழ் | ||
1991 | அழகன் | குமரேசன் | தமிழ் | |
1991 | வசவடட்டா | மலையாளம் | ||
1992 | வானமே எல்லை | தமிழ் | ||
1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | தமிழ் | நட்புத் தோற்றம் | |
1994 | மணிரத்தினம் | நடராஜன் | தமிழ் | |
1994 | வீரமணி | கௌதம் | தமிழ் | |
1994 | தாய் மனசு | பெரிய மருது | தமிழ் | |
1995 | செல்லக்கண்ணு | ராஜவேல் | தமிழ் | |
1996 | முஸ்தபா | லட்சுமணன் | தமிழ் | |
1997 | பிள்ளை | பிரித்திவி | தெலுங்கு | சிறந்த எதிர்நாயகனுக்கான நந்தி விருது |
1997 | பிள்ளை பண்டிரி | பிரகாஷ் | தெலுங்கு | |
1998 | அவள் வருவாளா | பிரித்திவி | தமிழ் | |
1998 | சர்கிள் இன்ஸ்பெக்டர் | கன்னடம் | ||
1998 | பிள்ளாடி சூப்பிஸ்தா | தெலுங்கு | ||
1999 | சமரசிம்மா ரெட்டி | வாசு | தெலுங்கு | |
1999 | ஹலோ யமா | தெலுங்கு | ||
1999 | ஸ்ரீமதி வெல்லொஸ்தா | ராஜேந்ரா | தெலுங்கு | |
1999 | ராஜஸ்தான் | தெலுங்கு | ||
1999 | பச்சதரா சிலக்கா | தெலுங்கு | ||
1999 | பிரியசி ரவி | தெலுங்கு | ||
1999 | டைம் | திலிப் | தமிழ் | |
2000 | சுந்தரம் | சார்லி | தமிழ் | |
2000 | சம்மக்கா சரக்கா | தெலுங்கு | ||
2000 | மாதுரி | தெலுங்கு | ||
2000 | நகுலம்மா | தெலுங்கு | ||
2000 | நாகலிங்கம் | ராஜா | தமிழ் | |
2000 | கோபிநாத் அல்லுடு | பரமம்சா | தெலுங்கு | |
2000 | வியாஜந்தி | தெலுங்கு | ||
2000 | பவானி | தெலுங்கு | ||
2000 | தாதா | இந்தி | ||
2000 | தேவுல்லு | பிரசாந்த் | தெலுங்கு | |
2000 | பச்சி | பச்சி | தெலுங்கு | |
2000 | கண்டி கொத்தூருனே கண்ணு | தெலுங்கு | ||
2000 | சஞ்சலம் | தெலுங்கு | ||
2001 | நா மனசிஸ்தா ரா | தெலுங்கு | ||
2001 | நுவ்வு நாக்கு நச்சாவு | மோகன் | தெலுங்கு | |
2001 | நாகேஸ்வரி | தமிழ் | ||
2002 | லக்ணா பரிக்கா | சுபாஷ் | தெலுங்கு | |
2002 | சந்தோசம் | ஸ்ரீராம் | தெலுங்கு | |
2002 | சென்னக்கேசவ ரெட்டி | செச்சன்கேசவ ரெட்டியின் மைத்துனர் | தெலுங்கு | |
2003 | நாகா | தெலுங்கு | ||
2003 | பலனாட்டி பிரம்மநாயுடு | தெலுங்கு | ||
2004 | பகவான் | கன்னடம் | ||
2005 | கீலு குர்ரம் | தெலுங்கு | ||
2005 | கௌதம் எஸ்எஸ்சி | கொண்டல ராவ் | தெலுங்கு | |
2006 | சீதகோக்க சிலுக்கா | தெலுங்கு | ||
2006 | சின்னூது | தெலுங்கு | ||
2008 | வாரணம் ஆயிரம் | ஆசாத் | தமிழ் | |
2011 | ககனம்/பயணம் | சந்திரகாந்த் | தமிழ்/தெலுங்கு | |
2014 | சந்தமாமா கதலு | டிகே | தெலுங்கு | |
2014 | கோலாகாளா | கன்னடம் | ||
2018 | பரிச்சயம் (2018) | தெலுங்கு | ||
2018 | நன்னு டோச்சுக்குண்டுவாடே | தெலுங்கு |
- தொலைக்காட்சி
- கோகுலத்தில் சீதை
- அலைபாயுதே
- அரசி
- வாணி ராணி
- சவால்
- ரமணி விசஸ் ரமணி
- மர்மதேசம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Supporting Actor Babloo Prithviraj - Nettv4u". Archived from the original on 2016-08-18.
- ↑ "Simbu's fight with Babloo on TV fixed? - Times of India". Archived from the original on 2017-09-19.
- ↑ "Prithviraj has a new role brewing". Archived from the original on 29 November 2014.
- ↑ "Is autism a threat at airport?". 5 October 2006. Archived from the original on 15 July 2015.