ரத்தசரித்திரம் (திரைப்படம்)

2010 இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்

ரத்தசரித்திரம் (Raththa Sarithiram) என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இது இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் இதே பெயரில் வெளியானது. ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தில் சூர்யா, விவேக் ஒபரோய், சத்ருகன் பிரசாத் சின்கா, கோட்டா சீனிவாச ராவ், பிரியாமணி, சுதீப், ராதிகா ஆப்தே உட்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பரிதாலா ரவிந்திரன் மற்றும் மத்தலசெருவு சூரி என்பவர்களுக்கு இடையே நடந்த மோதல் சம்பவத்தைச் சித்தரிக்கும் உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தின் தொடர்ச்சியாக ரத்தசரித்திரம் 2 என்ற தலைப்பில் 2010இன் பிற்பகுதியில் வெளியிடப்பட்டது. இப்படத்தின் மூலம் விவேக் ஓபராய் தெலுங்கில் அறிமுகமானார்.[1] மேலும் இத்திரைப்படத்தில் நடித்ததற்காக விவேக் ஓபராய் 2011ஆம் ஆண்டின் ஸ்டார்டஸ்ட் விருதை வென்றார். படம் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது.[2][3][4] [5]

ரத்த சரித்திரம்
இயக்கம்ராம் கோபால் வர்மா
தயாரிப்புமது மந்தனா
சின்னா வாசுதேவ ரெட்டி
சீத்தல் வினோத் தல்வார்
திரைக்கதைபிரசாந்த் பான்டே
கதைசொல்லிசேத்தன் சகித்தால்
ராம் கோபால் வர்மா
இசைதரம்-சந்தீப்
நடிப்புவிவேக் ஒபரோய்
சுதீப்
ராதிகா ஆப்தே
சத்ருகன் பிரசாத் சின்கா
கோட்டா சீனிவாச ராவ்
அபிமன்யு சிங்
சுசாந்த் சிங்
ஒளிப்பதிவுஅமோல் ரத்தோட்
படத்தொகுப்புநிபுன் அசோக் குப்தா
விநியோகம்விஸ்டார்ரெலிகேர் பிலிம்சு ஃபன்ட்
வெளியீடுஅக்டோபர் 22, 2010 (2010-10-22)
ஓட்டம்123 நிமிடங்கள் (இந்தி)
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
இந்தி

மேற்கோள்கள்

தொகு
  1. "Review: Rakht Charitra is replete with violence, yet blows you away!". DNA. Archived from the original on 25 February 2011. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  2. "'Rakta Charitra' is bold and disturbing". IBN. Archived from the original on 25 October 2010. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  3. "Rakta Charitra: RGV's overkill". Rediff. Archived from the original on 30 April 2012. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  4. "Review: Rakta Charitra". NDTV. Archived from the original on 25 October 2010. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.
  5. "Rakta Charitra Indian Express Review". Indian Express. Archived from the original on 28 October 2010. பார்க்கப்பட்ட நாள் 20 March 2012.

வெளியிணைப்பு

தொகு