டூயட் (திரைப்படம்)

கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

டூயட் (Duet) 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.

டூயட்
சுவரிதழ்
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரபு
ரமேஷ் அரவிந்த்
பிரகாஷ் ராஜ்
மீனாட்சி சேஷாத்ரி
சரத்பாபு
சுதாகர்
கசான் கான்
ரூபஸ்ரீ
சத்யா
சத்யப்ரியா
சுதா
சந்திரிகா
சார்லி
செந்தில்
அரவிந்த்சாமி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

படத்தின் குறிப்புகள்

தொகு

இத்திரைப்படத்தில் முதலில் பிரபுவிற்கு இணையாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் பெப்சி உமாவை தீர்மானித்தார். அப்போது பெப்சி உமா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியை தவிர வேறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யாவை கதாநாயகியாக நடிக்க வைத்தர். சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவரின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திரியின் முகம் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தார் கே.பாலசந்தர். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திரி மூன்றாவது முறை கதாநாயகியாக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தார்.

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[1][2].

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "என் காதலே (ஆண் குரல்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
2. "வெண்ணிலாவின் தேரில் ஏறி"  கே. ஜே. யேசுதாஸ் 4:08
3. "மெட்டுப்போடு மெட்டுப்போடு"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா 5:58
4. "அஞ்சலி அஞ்சலி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 6:16
5. "குளிச்சா குத்தால‌ம்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், டி. கே. கலா 4:48
6. "கத்திரிக்கா. குண்டு"  சுஜாதா மோகன், வி. வி. பிரசன்னா 5:27
7. "என் காதலே (பெண் குரல்)"  கே. எஸ். சித்ரா 0:56
8. "நான் பாடும்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 3:53
9. "கவிதைக்குப் பொருள் (கவிதை)"  பிரபு, ஸ்ரீஜா 1:20
10. "சத்தத்தினால் வந்த (கவிதை)"  பிரபு 0:54
11. "லவ் இஸ் டார்ச்சர் (கவிதை)"  நோயல் ஜேம்ஸ் 0:47
12. "சேக்ஸ் (சேக்சாபோன் இசை)"  இசைக்கருவி 1:43
13. "தலைப்பு இசை"  இசைக்கருவி 3:13
14. "நான் பார்த்ததிலே (சேக்சாபோன் இசை)"  இசைக்கருவி 0:55
15. "தபேலா இசை"  இசைக்கருவி 0:23

மேற்கோள்கள்

தொகு
  1. Rahman, A. R. "Duet". MusicBrainz. Archived from the original on 1 August 2020. பார்க்கப்பட்ட நாள் 1 August 2020.
  2. Trilok, Krishna (18 September 2018). Notes of a Dream: The Authorized Biography of A.R. Rahman. India: Penguin Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9353051969. The soundtrack featured fourteen songs, including poems, multiple versions of songs and instrumental tracks.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டூயட்_(திரைப்படம்)&oldid=3732762" இலிருந்து மீள்விக்கப்பட்டது