என் ராசாவின் மனசிலே

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

என் ராசாவின் மனசிலே, கஸ்தூரி ராசாவின் இயக்கத்தில் 1991-ம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்கிரண், மீனா, வடிவேலு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ராஜ்கிரண் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 13 ஏப்ரல் 1991 அன்று வெளியான இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் தான் நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகமானார். தெலுங்கில் மொரத்தொடு நா மொகுடு என்ற பெயரில் வெளியான இத்திரைப்படத்தின் மறுவாக்கத்தில் ராஜசேகர், மீனா ஆகியோர் நடித்திருந்தனர்.[1][2][3][4][5]

என் ராசாவின் மனசிலே
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புராஜ்கிரண்
கதைகஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகிச்சாஸ்
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
விநியோகம்ரெட் சன் ஆர்ட் கிரியேசன்ஸ்
வெளியீடுஏப்ரல் 13, 1991 (1991-04-13)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

தொகு
என் ராசாவின் மனசிலே
இசையமைப்பாளர்
வெளியீடு1991
ஒலிப்பதிவு1991
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்27:35
இசைத் தயாரிப்பாளர்இளையராஜா

இத்திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். 1991-இல் வெளியான இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 6 பாடல்களை இளையராஜா, பொன்னடியான், உஷா, பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7]

எண் பாடல் பாடியவர்(கள்) கால அளவு
1 'குயில் பாட்டு' (மகிழ்ச்சி) சுவர்ணலதா 4:54
2 'குயில் பாட்டு' (சோகம்) சுவர்ணலதா 3:35
3 'பாரிஜாத பூவே' எஸ். என். சுரேந்தர், சித்ரா 5:00
4 'பெண் மனசு ஆழம் என்று' இளையராஜா 3:50
5 'போடா போடா புண்ணாக்கு' கல்பனா, வடிவேலு, ராஜ்கிரண் 5:43
6 'சோலை பசுங்கிளியே' இளையராஜா 4:33

சான்றுகள்

தொகு
  1. "Filmography of en rasavin manasile". cinesouth.com. Archived from the original on 2011-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
  2. "En Raasavin Manasulle (1991)". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
  3. K. Vijian (1993-05-21), "It's more than a love story", New Straits Times, பார்க்கப்பட்ட நாள் 2013-04-21
  4. S.R. Ashok Kumar (2006-08-17). "A veteran star at a young age". hindu.com. Archived from the original on 2007-01-03. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Comedian's son takes the mantle". indiaglitz.com. 2006-11-07. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
  6. "Download En Raasavin Manasile by Ilaiyaraaja on Nokia Music". music.ovi.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
  7. "En Raasavin Manasula". hummaa.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்_ராசாவின்_மனசிலே&oldid=4007580" இலிருந்து மீள்விக்கப்பட்டது