கஸ்தூரி ராஜா

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

கஸ்தூரி ராஜா ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் , மற்றும் இசையமைப்பாளர் ஆவார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரது மகன்களாவர்.[2][3] இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமக்கதையை பின்னணியாகக் கொண்டு அல்லது இளைஞர்களின் தடுமாற்றங்களைப் பற்றியே அமைந்துள்ளன.

கஸ்தூரி ராஜா
பிறப்புகிருஷ்ணமூர்த்தி
8 ஆகத்து 1946 (1946-08-08) (அகவை 78)
மல்லிகாபுரம், தேனி, தமிழ்நாடு
பணிதிரைப்பட இயக்குநர், திரைப்பட தயாரிப்பாளர் , இசையமைப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1991–2006,
2013
பெற்றோர்ராமசாமி நாயுடு[1]
ரங்கம்மா
வாழ்க்கைத்
துணை
விஜயலட்சுமி
பிள்ளைகள்

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

தேனி மாவட்டத்தில் மல்லிகாபுரம் என்ற குக்கிராமத்தில் ராமசாமி நாயுடுவிற்கும்[1] ரங்கம்மாவுக்கும் மகனாக பிறந்தவர். இவர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், விசு ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜ்கிரண் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் இயக்குநராகியவர். இவர் தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புறப் பாட்டு, வீரத்தாலாட்டு, எட்டுப்பட்டி ராசா, வீரம் விளைஞ்ச மண்ணு, என் ஆச ராசாவே உட்பட நிறைய படங்களை இயக்கியவர். இவரின் படங்கள் பெரும்பாலும் மண் மணம் வீசும் படங்களாக இருக்கும். இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோர் இவரின் மகன்கள் ஆவர்.

திரைப்படங்கள்

தொகு

இயக்குனராக

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1991 என் ராசாவின் மனசிலே
ஆத்தா உன் கோயிலிலே
தூது போ செல்லக்கிளியே
1992 சோலையம்மா
மௌன மொழி
1994 தாய் மனசு
1996 நாட்டுப்புறப் பாட்டு
1997 வாசுகி
எட்டுப்பட்டி ராசா
1998 வீரத்தாலாட்டு
என் ஆசை ராசவே
வீரம் விழைஞ்ச மண்ணு
1999 கும்மிப் பாட்டு
2000 கரிசக்காட்டுப் பூவே
2002 துள்ளுவதோ இளமை
2004 ட்ரீம்ஸ்
2006 இது காதல் வரும் பருவம் இசை அமைப்பாளரும் கூட

நடிகராக

தொகு
ஆண்டு திரைப்படம்
1985 அவள் சுமங்கலிதான்
1992 மௌன மொழி

பாடலாசிரியராக

தொகு
ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
1992 சோலையம்மா அனைத்து பாடல்களும்
2004 ட்ரீம்ஸ்
1994 தாய் மனசு
1999 கும்மி பாட்டு
1997 எட்டுப்பட்டி ராசா

தயாரிப்பாளராக

தொகு
ஆண்டு திரைப்படம்
2025 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்

அரசியல்

தொகு

2015 ஆம் ஆண்டு அமித் சா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது தமிழக பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்களாக உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 கஸ்தூரி ராஜா. https://www.youtube.com/watch?v=2xiZF9zAZrM?t=270. "அப்பா பெயர் ராம்சாமி நாயுடு". 
  2. தமிழிசை சவுந்தரராஜன் வீரத் தமிழச்சி - தனுஷ் தந்தை புகழாரம்!. நியூஸ் 18. 16 அக்டோபர் 2019.
  3. http://www.thehindu.com/news/national/tamil-nadu/hc-quashes-maintenance-case-filed-against-dhanush/article18179600.ece

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஸ்தூரி_ராஜா&oldid=4168984" இலிருந்து மீள்விக்கப்பட்டது