ஆத்தா உன் கோயிலிலே

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆத்தா உன் கோயிலிலே 1991 ஆம் ஆண்டு செல்வா மற்றும் கஸ்தூரி நடிப்பில், கஸ்தூரி ராஜா இயக்கத்தில், தேவா இசையில் கே. பிரபாகரன் தயாரிப்பில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4]

ஆத்தா உன் கோயிலிலே
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புகே. பிரபாகரன்
கதைகஸ்தூரி ராஜா
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. பி. அஹமது
படத்தொகுப்புஎல். கேசவன்
கலையகம்அன்பாலயா பிலிம்ஸ்
வெளியீடுமே 10, 1991 (1991-05-10)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

பணக்காரரான அழகர்சாமியின் (கே. பிரபாகரன்) மகன் பாண்டி (ரவி ராகுல்). பாண்டி ஏழைப்பெண்ணான ஈஸ்வரியைக் (வினோதினி) காதலிக்கிறான். மருதுவிற்கு (செல்வா) பாண்டியின் காதல் பற்றி தெரியவருகிறது. அழகர்சாமிக்கு இந்த காதல் பற்றி தெரிந்தால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பாண்டியிடம் எச்சரிக்கிறான் மருது.

கடந்தகால நிகழ்வு: கஸ்தூரி (கஸ்தூரி) தன் பெற்றோர்கள் (எம். என். ராஜம் மற்றும் டி. கே. எஸ். சந்திரன்) மற்றும் ராமையா (வினு சக்ரவர்த்தி) ஆகியோரோடு வசிக்கிறாள். அவள் வீட்டில் வேலை செய்பவன் மருது. கஸ்தூரியை மணக்கும் விருப்பத்துடன் அங்கு வரும் துரைராசுவால் (கே. எஸ். செல்வராஜ்) பிரச்சனை துவங்குகிறது. துரைராசுவின் மோசமான நடத்தையைப் பற்றி அறிந்திருந்தும் கஸ்தூரியின் தந்தை வேறுவழியின்றி அந்தத் திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். கஸ்தூரி தனக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லை என்றும் மருதுவை சாதி மறுப்புத் திருமணம் செய்யவே விரும்புவதாகவும் கூறுகிறாள். கஸ்தூரி குடும்பத்தினர் சம்மதத்தோடு மருது-கஸ்தூரி திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பஞ்சாயத்துத் தலைவர் அழகர்சாமி, கிராமத்தின் கவுரவத்தைக் காக்க கஸ்தூரியைக் கொன்றுவிடுமாறு (ஆணவக்கொலை) அவள் தந்தையைக் கட்டாயப்படுத்துகிறார். வேறுவழியின்றி அதற்கு ஒத்துக்கொள்ளும் கஸ்தூரியின் தந்தை இரவு உணவில் நஞ்சு கலந்து கஸ்தூரிக்குக் கொடுக்கிறார். அதைத் தடுத்து கஸ்தூரியைக் காப்பாற்ற முயலும் மருதுவை துரைராசுவும் அவனது ஆட்களும் தடுக்கிறார்கள். கஸ்தூரி, மருதுவின் மடியிலேயே இறக்கிறாள்.

தன் தந்தை பற்றி அறிந்துகொண்ட பாண்டி, ஈஸ்வரியைத் திருமணம் செய்ய தன் தந்தை ஒத்துக்கொள்ளமாட்டார் என்பதால் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கின்றனர். அவர்கள் தற்கொலையைத் தடுப்பதற்காக அவர்கள் திருமணத்திற்கு சம்மதிப்பதாக பொய் கூறுகிறார் அழகர்சாமி. ஈஸ்வரியின் தந்தையிடம் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டயப்படுத்துகிறார். சரியான நேரத்தில் வரும் மருது ஈஸ்வரியைக் காப்பாற்றுகிறான். அழகர்சாமியை அழிக்க அனைவரும் ஒன்றுசேர கோருகிறான். அனைவரும் பாண்டி மற்றும் ஈஸ்வரிக்குத் திருமணத்தை நடத்திவைக்கின்றனர். அதன்பிறகு மருது, ராமையா, காளியப்பன் மற்றும் கஸ்தூரியின் தந்தை அனைவரும் கட்டாயப்படுத்தி அழகர்சாமியை விசத்தைக் குடிக்கச் செய்கின்றனர்.

நடிகர்கள்

தொகு

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் காளிதாசன்.[5][6][7]

வ. எண் பாடல் பாடகர்(கள்) காலநீளம்
1 ஏலே இளங்குயிலே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 3:59
2 பொம்பளைய மதிக்கவேணும் கங்கை அமரன் 4:42
3 சின்னஞ்சிறு பூவே மனோ, எஸ். ஜானகி 4:26
4 ஒத்தையடி பாதையில (ஆண்குரல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:03
5 காதல் கிளிகளே கிருஷ்ணசந்தர் 4:40
6 தை மாசம் வந்துருச்சு தேவா 0:59
7 ஒத்தையடி பாதையில (பெண்குரல்) ஜிக்கி 5:03
8 வண்டி வருது சுவர்ணலதா 1:13
9 ஒத்தையடி பாதையில (ஆண்குரல்) மலேசியா வாசுதேவன் 0:34
10 தை மாசம் வந்துருச்சு சுவர்ணலதா 0:59
11 ஒத்தையடி பாதையில (டூயட்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் உமா ரமணன் 5:04
12 மாரி முத்துமாரி சுவர்ணலதா 5:13

மேற்கோள்கள்

தொகு
  1. "ஆத்தா உன் கோயிலிலே". Archived from the original on 2017-02-02. Retrieved 2019-02-27.
  2. "ஆத்தா உன் கோயிலிலே".
  3. "ஆத்தா உன் கோயிலிலே". Archived from the original on 2004-02-29. Retrieved 2019-02-27.
  4. "ஆத்தா உன் கோயிலிலே". Archived from the original on 2010-02-19. Retrieved 2019-02-27.
  5. "பாடல்கள்".
  6. "ஆத்தா உன் கோயிலிலே".
  7. "பாடல்கள்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்தா_உன்_கோயிலிலே&oldid=3941447" இலிருந்து மீள்விக்கப்பட்டது