ஆணவக் கொலை
ஆணவக்கொலை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆணவக் கொலை என்பது ஒரு குடும்பத்தின் உறுப்பினரை அவர் குடும்பத்துக்கு இழிவு கொண்டு வந்தார் என்று கருதி அக்குடும்பத்தின் உறுப்பினர்கள் சிலர் கொலை செய்வதைக் குறிக்கிறது. பொதுவாகப் பெண்களையே இப்படிக் கொல்கின்றனர். காதல், மணவிலக்கு, கள்ள உறவு, கற்பழிக்கப்படல், முறைபிறழ் புணர்ச்சி, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை மறுத்தல், குடும்பக் கட்டுப்பாடுகளை மீறல் எனப் பல காரணங்களால் கெளரவக் கொலை நடக்கிறது. ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, 5000க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு ஆண்டுதோறும் கொல்லப்படுகிறார்கள்.