சாதி மறுப்புத் திருமணம்

சாதி மறுப்பு/ஒழிப்புத் திருமணம் என்பது திராவிட இயக்கத்தின் தாக்கத்தினால் விளைந்த ஒரு முற்போக்கான நடைமுறை. திராவிட இயக்கத்தின் சகோதரத்துவக் கொள்கையினால் உந்தப்பட்ட ஏராளமான இளைஞர்கள் சாதி, சமயம் பாராமல் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்டனர். இந்தியாவின் தமிழகத்தில் ஈ. வெ. இராமசாமி அவர்களின் சமூகச் சீர்திருத்தப் போராட்டங்களின் விளைவாக ஏற்பட்ட மாறுதல்களுள் சாதி மறுப்புத் திருமணமும் ஒன்றாகும். மேலும் தமிழக அரசு சாதிமறுப்புத் திருமணத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சாதிமறுப்புத் திருமணம் செய்யும் தம்பதிகளுள் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கிறது.