அன்பாலயா பிலிம்ஸ்
அன்பாலயா பிலிம்ஸ் (Anbalaya Films) என்பது கே. பிரபாகரன் தலைமையிலான ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் 1990 களில் தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருந்தது, ஆனால் திரைப்படத் துறை எண்ணியல் திரைப்பட தயாரிப்பிற்கு மாறியதைத் தொடர்ந்து நிறுவனம் ஆட்டம் கண்டது. [1]
வரலாறுதொகு
நிறுவனத்தை கே. பிரபாகரன் வழிநடத்துகிறார், பின்னர் அவர் அன்பாலயா பிரபாகரன் என்ற திரைப் பெயரைத் தழுவினார். [2] 1990 களில், இந்த நிறுவனமானது புதிய இயக்குனர்களைக் கொண்டு குறைந்த செலவிலான தமிழ் திரைப்படங்களை தயாரிப்பதற்கான சிறப்பான நிபுணத்துவத்தைப் பெற்றது. இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய சில இயக்குனர்களில் அகதியன், பிரபு சாலமன் ஆகியோர் அடங்குவர். [3] படத் தயாரிப்பு மட்டுமல்லாமல், பிரபாகரன் தனது தயாரிப்புகளில் வரும் படங்களில் பெரும்பாலும் எதிர்மறை வேடங்களில் நடித்தார்.
2000 களின் முற்பகுதியில், தன் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க அர்ஜுனுடன் பிரபாகரன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இருவரும் ஆரம்பத்தில் சாஜி கைலாஸ் இயக்கும் சாணக்யா என்ற படத்திற்காக அணிசேர திட்டமிட்டனர். ஆனால் பின்னர் அந்த படத்தை கைவிட்டு, அர்ஜுன் இயக்கி நடித்த பரசுராம் (2003) என்ற படத்தை தயாரித்தார். [4]
2004 ஆம் ஆண்டில், நவீன் சந்திரா, மது ஷாலினி, அக்சயா ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த பழனியப்பா கல்லூரி (2007) என்ற குறைந்த செலவில் தயாரிக்கபட்ட கல்லூரி நாடக படத்தை தயாரிப்பதன் வழியாக நிறுவனம் மீண்டும் படத்தாரிப்புக்கு வந்தது. [5] [6] தயாரிப்பு சிக்கல்களை எதிர்கொண்ட படமானது வெளியீட்டின்போது வந்தவழி தெரியாமல் போய்விட்டது. [7] [8]
படத்தயாரிப்பில் நிறுவனம் மந்தமானதைத் தொடர்ந்து, பிரபாகரன் நடிகராக பணியாற்றத் தொடங்கினார் மற்றும் சிறிய துணை வேடங்களில் தோன்றினார். அவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். [9]
திரைப்படவியல்தொகு
படம் | ஆண்டு | மொழி | இயக்குநர் | நடிகர்கள் | சுருக்கம் | Ref. |
---|---|---|---|---|---|---|
பட்டிக்காட்டு தம்பி | 1988 | தமிழ் | செந்தில்நாதன் | அர்ஜுன், நிரோஷா, சபிதா ஆனந்த் | A naive, innocent guy learns about his father's death in the hands of a cruel landlord decides to avenge his death. | |
யோகம் ராஜயோகம் | 1989 | தமிழ் | டி. எஸ். கிருஷ்ணகுமார் | ராம்கி, சீதா, எஸ். வி. சேகர் | ||
தங்கத்தின் தங்கம் | 1990 | தமிழ் | சிராஜ் | ராமராஜன், இராகசுதா | ||
வைகாசி பொறந்தாச்சு | 1990 | தமிழ் | இராதா பாரதி | பிரசாந்த், காவேரி | வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த ஒரு பையனும் பெண்ணும் காதலிக்க எதிர்ப்பை எதிர்கொள்கின்றனர். | |
ஆத்தா உன் கோயிலிலே | 1991 | தமிழ் | கஸ்தூரி ராஜா | செல்வா, கஸ்தூரி | மருதுவை நேசித்ததற்காக தனது ஒரு மகளை ஆணவக் கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு எதிராக சாதி தாண்டிய காதலர்களை சேர்த்துவைக்க மருது முடிவு செய்கிறான். | |
தூது போ செல்லக் கிளியே | 1991 | தமிழ் | கஸ்தூரி ராஜா | Varunraj, கஸ்தூரி, செண்பகா | கிராமத்திற்கு வரும் ஒரு மருத்துவர் இரண்டு பெண்களின் நேசத்துக்கு இடையில் அல்லாடுகிறார். | |
தெற்கு தெரு மச்சான் | 1992 | தமிழ் | மணிவண்ணன் | சத்யராஜ், பானுப்ரியா | சுப்பிரமணியம் பரிமாளாவை காதலிக்கிறார், இருவரும் வெவ்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களுக்குள் போட்டாபோட்டி ஏற்படுகிறது. | |
பொண்டாட்டி ராஜ்ஜியம் | 1992 | தமிழ் | கே. எஸ். இரவிக்குமார் | சரவணன், ரஞ்சிதா, இராஜா ரவீந்த்ரா | ஒரு மனிதன் தனது இறந்த நண்பனின் காதலியை கவனிக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறான், அது மனைவியின் மனதில் சந்தேக விதைகளை விதைக்கிறது. | |
மதுமதி | 1993 | தமிழ் | அகத்தியன் | இரவி ராகுல், மதுமிதா | ||
வீட்டைப்பாரு நாட்டைப்பாரு | 1994 | தமிழ் | துளசிதாஸ் | சரவணன், ரஞ்சிதா | ஒரு ஓய்வுபெற்ற இராணுவ வீரருக்கும் அவரது மகன்களுக்கும் அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இது மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. | |
முறை மாப்பிள்ளை | 1995 | தமிழ் | சுந்தர் சி. | அருண் விஜய், கிருத்திகா, ராஜஸ்ரீ | பகைகொண்ட இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த பையனும், பெண்ணும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். | |
கண்ணோடு காண்பதெல்லாம் | 1999 | தமிழ் | பிரபு சாலமன் | அர்ஜுன், சோனாலி பேந்திரே, சுசிந்திரா | ஒரு பணக்கார இளைஞன் இளம் காதலர்களுக்கு சிக்கலை உருவாக்குகிறான், அவனின் குறும்பு அவனது காதலியால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அவனுடன் காதலை முறித்துக் கொள்கிறாள். | |
தை பொறந்தாச்சு | 2000 | தமிழ் | ஆர். கே. கலைமணி | பிரபு, கௌசல்யா | ஒரு வீட்டு தரகர் தனது காதலனைத் தேடிவரும் ஒரு பெண்ணுக்கு ஒரு வீட்டை வாடகைக்கு விடுகிறார், வீட்டு உரிமையாளரிடம் தரகர் அவரை தன் மனைவி என்று வீட்டு உரிமையாளரிடம் பொய் சொல்ல நிர்பந்திக்கப்படுகிறார். | [10] |
எங்களுக்கும் காலம் வரும் | 2001 | தமிழ் | பாலரூபன் | லிவிங்ஸ்டன், கௌசல்யா, வடிவேலு | குப்பன் தனது மாமா மண்ணாங்கட்டியின் வீட்டில் தங்கி உள்ளார். மண்ணாங்கட்டிக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளார். மண்ணாங்கட்டி தனது பிள்ளைகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்கிறார். அவரது மகள்களில் ஒருவர் குப்பனை ரகசியமாக திருமணம் செய்கிறார் | |
பரசுராம் | 2003 | தமிழ் | அர்ஜுன் | அர்ஜுன், கிரண் ராத்தோட், அப்பாஸ் | பரசுராம், ஒரு நேர்மையான காவல் அதிகாரி. அவர் ஒரு பயங்கரவாத அமைப்பின் தலைவரைத் தேடி வருகிறார், அந்த தலைவர் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுபவர். | [11] |
பழனியப்பா கல்லூரி | 2007 | தமிழ் | ஆர். பவன் | நவீன் சந்திரா, மது சாலினி, அக்சயா ராவ் |
குறிப்புகள்தொகு
- ↑ "South Indian Film Industry Strike: All You Need To Know About The Squabble Between Producers & DSPs". 1 March 2018. 21 ஜூலை 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 ஜூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Anbalaya Prabhakar's mother passes away – Behindwoods.com – producer tamil movie news images picture gallery images". www.behindwoods.com.
- ↑ "Welcome To Sify.com". www.sify.com. 2014-10-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி); Unknown parameter|https://web.archive.org/web/20141012180542/http://www.sify.com/movies/tamil/profile.php?id=
ignored (உதவி) - ↑ Mannath, Malini (25 September 2002). "New Launches in Tamil". ChennaiOnline. 5 August 2003 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 July 2020 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "tamil movie news kalluri balaji sakthivel anbalaya prabhakaran prasanth pazhaniappa kalluri pavan akshara s picture hot stills picture image gallery". www.behindwoods.com.
- ↑ "tamil movie news kalluri mayiladuthurai avc college arjuman mohal balaji sakthivel anbalaya prabhakaran prasanth pazhaniappa kalluri pavan akshara s picture hot stills picture image gallery". www.behindwoods.com.
- ↑ "tamil movie news shakeela sivakasi jayalakshmi palaniappa kalluri tamil movie actor malayalam actress shakeela hot stills picture image gallery". www.behindwoods.com.
- ↑ "13-09-04". 1 March 2005. 1 March 2005 அன்று மூலம் பரணிடப்பட்டது.
- ↑ "Crisis in TN Film producers council". Sify. 2019-07-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-07-02 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "Film Review: Thai Porandhachu". 25 February 2000 – www.thehindu.com வழியாக.
- ↑ "Parasuram". The Hindu. 2003-06-06.[தொடர்பிழந்த இணைப்பு]