காவேரி (தமிழ் நடிகை)

தென்னிந்திய முன்னாள் நடிகை

காவேரி என்பவர் ஒரு தென்னிந்திய முன்னாள் நடிகை ஆவார். இவர் முக்கியமாக திரைப்படங்களில் நடித்து, தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றினார்.[1]

காவேரி
பணிநடிகர், வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
1990–2013
வாழ்க்கைத்
துணை
ராகேஷ் (தி.2013–தற்போது வரை)

அறிமுகம்

தொகு

1990 ஆம் ஆண்டில் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் வழியாக தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமான காவேரி பின்னர் தொலைக்காட்சித் தொடர்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இவர் வம்சம் தொடரில் நடித்தார். இவரது தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, புற்றுநோயால் இறந்தார். இதன் பிறகு ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக இவரது உடல் எடையை குறைத்தது. 2013 ஆம் ஆண்டில், காவேரி விழுப்புரம் மாவட்டம், ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தொழிலதிபர் ராகேஷை மணந்தார்.[2] இவரது கணவர் சென்னையின் வேளச்சேரியில் ஒரு மருந்து நிறுவனத்தை நடத்திவருகிறார்.

திரைப்பட வாழ்க்கை

தொகு

1990 இல் வெளியான வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் திரைப்படத்தில் காவேரி அறிமுகமானார் [3] மெட்டி ஒலி மற்றும் தனம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததற்காக இவர் மிகவும் பிரபலமானவர்

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
1990 வைகாசி பொறந்தாச்சு ரஞ்சிதா தமிழ் அறிமுக படம்
1990 உன்னை நான் வாழ்த்துகிறேன் தமிழ்
1990 பந்தைய குதிரைகள் தமிழ்
1990 சின்னாரி முத்துல பாப்பா சுனிதா தெலுங்கு
1992 போக்கிரி தம்பி காவேரி தமிழ்
1992 சஹசம் உஷா தெலுங்கு
1993 செண்பகம் செண்பகம் தமிழ்
1993 நல்லதே நடக்கும் ஜீவா தமிழ்
1995 சேதுபதி ஐ.பி.எஸ் சரஸ்வதி தமிழ்
1995 படிக்கிற வயசுல செல்லத்தாயி தமிழ்

தொலைக்காட்சி தொடர்கள்

தொகு

குறிப்புகள்

தொகு

 

வெளி இணைப்புகள்

தொகு
  • "Kaveri's Personal Life". www.cinejosh.com. பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(தமிழ்_நடிகை)&oldid=4167167" இலிருந்து மீள்விக்கப்பட்டது