மெட்டி ஒலி

தமிழ் தொலைக்காட்சி நாடக தொடர்

மெட்டி ஒலி என்பது 8 ஏப்ரல் 2002 முதல் 14 அக்டோபர் 2005 ஆம் ஆண்டு வரை சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பான குடும்ப சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தொடர்களில் ஒன்றாகும்.

மெட்டி ஒலி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
எழுத்துதிருமுருகன்
திரைக்கதை
  • திரைக்கதை
  • சி. யூ. முத்துசெல்வன்
  • வசனம்
  • பாஸ்கர் சக்தி
இயக்கம்திருமுருகன்
படைப்பு இயக்குனர்திருமுருகன்
நடிப்பு
முகப்பு இசைதினா
முகப்பிசை"அம்மி அம்மி மிதிப்பு"
நித்யஸ்ரீ மகாதேவன் (பாடியவர்)
வைரமுத்து (பாடலாசிரியர் )
நாடுதமிழ்நாடு
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்811
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்எஸ். சித்தி
ராஜா காவேரி
மணி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ்நாடு
சென்னை
அழகன்குளம்
மலேசியா
சிங்கப்பூர்
நியூயார்க் நகரம்
உதகமண்டலம்
இராமேசுவரம்
கொச்சி
திருப்பதி
மைசூர்
பெங்களூர்
மும்பை
மதுரை
ராஜமன்றி
கொழும்பு
ஒளிப்பதிவுசெல்வராஜா
சரத் கே. சந்திரன்
தொகுப்புஎம். ஜெய் குமார்
படவி அமைப்புபல ஒளிப்படக்கருவி
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சினி டைம்ஸ் எண்டர்டெயின்மெண்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்8 ஏப்ரல் 2002 (2002-04-08) –
14 அக்டோபர் 2005 (2005-10-14)
Chronology
தொடர்புடைய தொடர்கள்
  • சுப் விவா (இந்தி)
  • மங்கல்யா (கன்னடம்)
  • மின்னுகேட்டு (மலையாளம்)
  • அக்ஷந்தலு (தெலுங்கு)

இந்த தொடரில் டெல்லி குமார், காவேரி, காயத்தி சாஸ்திரி, வனஜா, உமா மகேஸ்வரி, ரேவதி பிரியா, போஸ் வெங்கட், ராஜகாந்த், திருமுருகன் சேத்தன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சினி டைம்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் திருமுருகன் என்பவர் கதை எழுதி மற்றும் இயக்கியுள்ளார். தமிழ்நாடு அரசு மற்றும் கலைமாமணி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றது.

இந்த தொடர் 14 அக்டோபர் 2005 ஆம் அன்று 811 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.[1] இந்த தொடரின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு மற்றும் 20 ஏப்ரல் 2020 ஆம் ஆண்டு மறு ஒளிபரப்பு செய்யபப்பட்டது.

கதை சுருக்கம்

தொகு

இந்த தொடரின் கதை சிதம்பரம் என்ற தந்தை தாய் இல்லாத தனது ஐந்து மகள்களையும் நன்றாக வளர்த்து ஒரு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து வைக்கின்றார். புகுந்த வீடு சென்ற மகள்கள் அவர்களின் வாழ்க்கையில் மாமியார், கணவன், நாத்தனர், உற்வினர்கள் போன்றவர்களால் வரும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு வாழ்கின்றார்கள் என்பதை விளக்குகின்றது.

நடிகர்கள்

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு
  • டெல்லி குமார் - சிதம்பரம்
    • மிகவும் பொறுமையான மனிதர் மற்றும் பாசமான தந்தை.
  • காவேரி - தனலட்சுமி போஸ் 'தனம்'
    • சிதம்பரத்தின் மூத்த மகள் மற்றும் போஸ்சின் மனைவி.
  • காயத்தி சாஸ்திரி - சரோஜா மாணிக்கம் 'சரோ'
    • சிதம்பரத்தின் இரண்டாவது மகள் மற்றும் மாணிக்கத்தின் மனைவி.
  • வனஜா - லீலாவதி ரவி 'லீலா'
    • சிதம்பரத்தின் மூன்றாவது மகள் மற்றும் ரவியின் மனைவி.
  • உமா மகேஸ்வரி - விஜயலட்சுமி கோபிகிருஷ்ணன் 'விஜி'
    • சிதம்பரத்தின் நான்காவது மகள் மற்றும் கோபியின் மனைவி.
  • ரேவதி பிரியா - பவானி
    • சிதம்பரத்தின் ஐந்தாவது மகள், சிங்கப்பூரில் ஆசிரியராக இருக்கின்றார்.
  • போஸ் வெங்கட் - போஸ்
    • சிதரபரத்தின் மனைவியின் தம்பி, தனத்தின் கணவன், ஒரு சோடா கடை வைத்து தொழில் செய்கின்றார்.
  • சேத்தன் - மாணிக்கம்
    • சரோஜாவின் கணவன், தாய் ராஜம் சொல்லை தாண்டாதவன்.
  • ராஜகாந்த் - ரவி
    • லீலாவின் கணவன், சுமதியின் முன்னாள் கணவன், மனைவி மீது எப்போதும் சந்தேகம் பிடிக்கும் குணம் கொண்டவன்.
  • திருமுகன் - கோபிகிருஷ்ணன்
    • விஜின் கணவன்

மாணிக்கம் குடும்பத்தினர்

தொகு
  • சாந்தி வில்லியம்ஸ் - ராஜம்
    • மாணிக்கம், செல்வம் மற்றும் நிர்மலாவின் தாய். மகனின் பாசத்தை வைத்து மருமகளை கொடுமை செய்யும் கதாபாத்திரம்.
  • விஷ்வா - செல்வம்
    • ராஜத்தின் இரண்டாவது மகன், மாணிக்கம் மற்றும் நிர்மலாவின் சகோதரன். நல்ல குணம் கொண்டவன்.
  • ரித்தியா அருணா தேவி - நிர்மலா
    • ராஜத்தின் ஒரே மகள் மற்றும் சந்தோஷின் முன்னாள் மனைவி.
  • சண்முகசுந்தரி - காமாட்சி
    • மாணிக்கத்தின் வீட்டு முதலாளி.
  • வி. திருசெல்வம் - கனகராஜ் (சந்தோஷ்)
    • நிர்மலாவின் முன்னாள் கணவர்
  • கிருத்திகா - அருந்ததி
    • செல்வத்தின் முன்னாள் மனைவி

ரவி குடும்பத்தினர்

தொகு
  • ஜெயமணி - (ரவியின் தந்தை)
  • காயத்ரி பிரியா - சுமதி
    • ரவியின் முன்னாள் மனைவி.
  • சுப்பிரமணியம் - (சுமதியின் தந்தை)

கோபி குடும்பத்தினர்

தொகு
  • வியட்நாம் வீடு சுந்தரம் - கதிரேசன் (கோபியின் தந்தை)
  • ரங்கதுரை - (கோபியின் சகோதரியின் கணவர்)
  • விஜய் ராஜ் (கோபியின் இளைய சகோதரியின் கணவர்)
  • லதா ராவ் - கவிதா (கோபியின் சகோதரி)
  • கர்ணா - குமார் (கோபியின் சகோதரன்)

துணைக் கதாபாத்திரங்கள்

தொகு
  • தீபா வெங்கட் - சீதா லட்சுமி
  • சாதனா - (சீதாலட்சுமியின் அத்தை)
  • சஞ்சீவ் - இளங்கோ
  • நீலிமா ராணி - சக்தி
  • சிந்து - சரளா ராமசந்திரன்
  • ராமசந்திரன் - ராமசந்திரன்
  • சாய் மாதவி - நர்மதா
  • தீபா சங்கர் - மீனா
  • வர்ஷினி - மல்லிகா
  • ராணி - ரம்யா

தயாரிப்பு

தொகு

படப்பிடிப்பு

தொகு

இந்தத் தொடர் தமிழ்நாட்டில் சென்னை, அழகன்குளத்தில் படமாக்கப்பட்டது. இருப்பினும், இது சிங்கப்பூர், மலேசியா மற்றும் நியூயார்க் நகரம் போன்ற வெளிநாட்டு இடங்களிலும் படமாக்கப்பட்டது.

ஒலிப்பதிவு

தொகு
Track listing
# பாடல்Singer(s) நீளம்
1. "அம்மி அம்மி அம்மி மிதித்து[2][3]"  நித்யஸ்ரீ மகாதேவன், டி.கிரண் 3:34
2. "மனசே மனசே (ஏக்நாத்)"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 6:13

மதிப்பீடுகள்

தொகு

இந்த தொடர் 23 முதல் 26 சதவீதமான இலக்கு அளவீட்டுப் புள்ளியை கொண்ட இந்திய மற்றும் தமிழ் தொடர்களில் ஒன்றாகும்.[4] இது அதன் ஒளிபரப்பான நேரத்தில் ஒட்டுமொத்தமாக 48.3 % இலக்கு அளவீட்டுப் புள்ளியின் உச்ச மதிப்பீட்டைப் பெற்றது[5]. இறுதி அத்தியாயம் சன் தொலைக்காட்சியில் 40 %இலக்கு அளவீட்டுப் புள்ளியை பெற்றது.[6]

மறு ஆக்கம்

தொகு

மொழி மாற்றம்

தொகு
  • இந்த தொடர் தெலுங்கு மொழியில் 'மெத்தலா சவ்வடி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி தொலைக்காட்ச்சியில் ஒளிபரப்பானது.

சர்வதேச ஒளிபரப்பு

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. "Choosy housewives and their favourite soaps". The New Indian Express.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Metti Oli Song Cine Times Thirumurugan Moon TV". You Tube. 31 July 2019. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  3. "Manase Manase Exclusive Song Metti Oli Serial Moon TV". You Tube. 2 December 2019. பார்க்கப்பட்ட நாள் 7 April 2020.
  4. "How Maran helped Sun beat rivals". Rediff.com. 4 May 2005. Archived from the original on 18 நவம்பர் 2020.
  5. "Metti Oli team has a reunion after 12 years". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "UTV gets aggressive". The Indian Express.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. "Far from the flashy crowd". India Today.{{cite web}}: CS1 maint: url-status (link)
  8. "Shows that launched, bombed and scrapped in 2012". The Times of India.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெட்டி_ஒலி&oldid=4045871" இலிருந்து மீள்விக்கப்பட்டது