தீபா வெங்கட்
தீபா வெங்கட் (Deepa Venkat) என்பவர் தமிழ் நடிகையும், வானொலி தொகுப்பாளினியும் மற்றும் பின்னணி குரல் கொடுக்கும் நடிகையும் ஆவார். இவர் சித்தி, அண்ணாமலை, சாரதா, கோலங்கள் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாப்பாத்திரமாகவும், தில், உள்ளம் கொள்ளை போகுதே, கண்டேன் காதலை போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது சிறந்த நடிப்பிற்காக 2007ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்தது[1]
தீபா வெங்கட் | |
---|---|
பிறப்பு | 11 சூன் 1975 |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகை, குரல் நடிகை, வானொலி தொகுப்பாளினி |
செயற்பாட்டுக் காலம் | 1994 – இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ராஜகோபால் (இன்று வரை) |
இவர் 2000ஆம் ஆண்டிலிருந்து தேவயானி, சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா போன்ற பல தமிழ் திரைப்பட நடிகைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால வாழ்க்கைதொகு
தீபா வெங்கட் 11 சூன் 1975 ஆம் ஆண்டு மும்பை மகாராட்டினத்தில் தமிழ் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறு வயதில் இருக்கும் போது சென்னை தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார்.
திரைப்பட வாழ்கைதொகு
1994ஆம் ஆண்டில் பாச மலர்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை சுரேஷ் சந்திர மேனன் இயக்க அரவிந்த்சாமி, ரேவதி, அஜீத் குமார் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இதை தொடர்ந்து 1997இல் அஜித் குமார், விக்ரம் மற்றும் மகேஷ்வரி நடித்த உல்லாசம் என்ற திரைப்படத்தில் விக்கிரமின் தோழியாக அதிதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து 1998இல் தினம்தோறும் என்ற திரைப்படத்திலும் 2001இல் மாதவன், சிம்ரன், ஸ்னேகா நடித்த பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்திலும், விக்ரம், லைலா நடித்த தில் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தில் திரைப்படத்தில் விக்ரமின் தங்கையாக அமலா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதே ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் பிரபுதேவா, கார்த்திக் மற்றும் அஞ்சலா ஜவேரி நடித்த உள்ளம் கொள்ளை போகுதே என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
2002இல் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்திலும், 2003இல் ராமச்சந்திரா மற்றும் 2009இல் கண்டேன் காதலை உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் அல்லது துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
சின்னத்திரை வாழ்க்கைதொகு
இவர் 1997களில் கே.பாலசந்தர் இயக்கிய மின் மினி தொடர்கள் மற்றும் நாகாவின் ரமணி விஷ் ரமணி என்ற தொடர்களில் நடித்தார். இதை தொடர்ந்து இப்படிக்கு தென்றல் என்ற தொடரில் நடித்தார். 1999இல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சித்தி என்ற தொடரில் விஜி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதை தொடர்ந்து 2002இல் அண்ணாமலை என்ற தொடரிலும் 2003 இல் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் என்ற தொடரில் உஷா என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை தேவயானியுடன் நடித்துள்ளார். இந்த தொடர் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த தொடர் மே 26, 2003 முதல் டிசம்பர் 4, 2009 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து ரோஜா என்ற தொடரிலும் விஜய் தொலைக்காட்சியில் பயணம், ஜெயா தொலைக்காட்சியில் அக்னி பிரவேசம் தொடரிலும் நடித்துள்ளார்.
2005இல் சன் தொலைக்காட்சியில் சூர்யா என்ற தொடரில் நடித்தார். இதை தொடர்ந்து 2006இல் ராஜ் தொலைக்காட்சியில் சாரதா என்ற தொடரிலும் 2008இல் ஏவிஎம்இன் கீதாஞ்சலி என்ற தொடரிலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லட்சியம் என்ற தொடர் ஆகும். இந்த தொடர் 2008 முதல் 2010 வரை ஒளிபரப்பானது. இவர் இதுவரைக்கும் 70 இற்கும் மேற்பட்ட தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரல் நடிகைதொகு
இவர் மெயின் ஹூன் ரகவாலா என்ற இந்தி திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் குழந்தை நட்சத்திரமாக குரல் நடிகையாக அறிமுகமானார். இதை தொடர்ந்து பல சிறுவர் தொடர்களுக்கு குரல் கொடுத்து வந்தார்.
இவர் 2000 ஆண்டில் அப்பு என்ற திரைப்படத்திற்காக நடிகை தேவயானிக்கு குரல் கொடுத்தார். இதை தொடர்ந்து சினேகா, சிம்ரன், நயன்தாரா, சங்கீதா, தன்சிகா, அனுசுக்கா செட்டி, ஜோதிகா, காஜல் அகர்வால் போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். இவர் 2011இல் மயக்கம் என்ன என்ற திரைப்படத்திற்கு ரிச்சா கங்கோபாத்யாய் என்பவருக்கு குரல் கொடுத்ததற்காக நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவில் சிறந்த குரல் நடிகைக்கான விருதை வென்றுள்ளார்[2].
வானொலி தொகுப்பாளினிதொகு
இவர் ஹலோ எப். எம் என்ற வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். இந்த பண்பலையில் மூன்றாம் பார்வை என்ற நிகழ்ச்சியை நிகழ்த்துகிறார்.
பின்குரல்தொகு
ஆண்டு | திரைப்படம் | இவருக்கு பின்குரல் |
---|---|---|
2000 | அப்பு | தேவயானி |
2001 | ஆனந்தம் | சினேகா |
2002 | கன்னத்தில் முத்தமிட்டால் | சிம்ரன் |
2002 | ஏழுமலை | சிம்ரன் |
2002 | 123 | ஜோதிகா |
2002 | ரமணா | சிம்ரன் |
2003 | ஒற்றன் | சிம்ரன் |
2007 | தவம் | வந்தனா |
2008 | சந்தோசு சுப்பிரமணியம் | கவுசல்யா |
2008 | பாண்டி | சினேகா |
2008 | வாரணம் ஆயிரம் | சிம்ரன் |
2008 | ராமன் தேடிய சீதை | நவ்யா நாயர் |
2009 | தநா 07 ஏ எல் 4777 | சிம்ரன் |
2011 | தெய்வத் திருமகள் | அனுசுக்கா செட்டி |
வெடி | பூனம் கவுர் | |
மயக்கம் என்ன | ரிச்சா கங்கோபத்தியாயா | |
2012 | நண்பன் | அனுயா பகவத் |
காதலில் சொதப்புவது எப்படி | அமலா பால் | |
ஒரு கல் ஒரு கண்ணாடி | சினேகா | |
தாண்டவம் | அனுசுக்கா செட்டி | |
நீர்ப்பறவை | சுனைனா | |
முரட்டுக்காளை | சிந்து துலானி | |
2013 | உதயம் என்.எச் 4 | மனோஜ் மேனனின் மனைவி |
சேட்டை | அஞ்சலி | |
ராஜா ராணி | நயன்தாரா | |
வணக்கம் சென்னை | சங்கீதா | |
க்ரிஷ் 3 | கங்கனா ரனாவத் (தமிழ் பதிப்பில்) | |
தூம் 3 | கத்ரீனா கைஃப் (தமிழ் பதிப்பிலும் தெலுங்கு பதிப்பிலும்) | |
டேவிட் | தபு | |
பரதேசி | தன்சிகா | |
கல்யாண சமையல் சாதம் | லேகா வாஷிங்டன் | |
2014 | ஆஹா கல்யாணம் | சிம்ரன் |
ஜில்லா | காஜல் அகர்வால் | |
நான் சிகப்பு மனிதன் | லட்சுமி மேனன் | |
தெனாலிராமன் | மீனாக்சி தீக்சித் |
நடிப்புதொகு
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1994 | பாச மலர்கள் | குழந்தை |
2001 | உள்ளம் கொள்ளை போகுதே | அன்புவின் அக்கா |
2001 | தில் | கனகவேலின் சகோதரி |
2001 | பார்த்தாலே பரவசம் | சிமியின் தோழி |
2002 | பாபா | மனிசாவின் தோழி |
2008 | சரோஜா | சரோஜா |
2008 | ஜெயங்கொண்டான் | அருணா |
2009 | கண்டேன் காதலை | அஞ்சலியின் அண்ணி |
நாடகங்கள்தொகு
- ரமணி விஷ் ரமணி
- பயணம்
- ரோஜா
- சித்தி
- அண்ணாமலை
- இப்படிக்கு தென்றல்
- அக்னி பிரவேசம்
- கோலங்கள்
- கீதாஞ்சலி
- சாரதா
- சூர்யா
- லட்சியம்
பெற்ற விருதுகள்தொகு
மேற்கோள்கள்தொகு
- ↑ "Kalaimamani awards announced". Chennai365. 11 May 2007. 23 October 2018 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Vishal, Sasikumar, Richa & VSV win at Norway Film Festival 2012". IndiaGlitz. 30 April 2012. 8 May 2012 அன்று பார்க்கப்பட்டது.
புற இணைப்புகள்தொகு
- Sreedhar Pillai (1 February 2007). "Miss Congeniality". தி இந்து. Archived from the original on 18 மார்ச் 2008. https://web.archive.org/web/20080318180046/http://www.hindu.com/mp/2007/02/01/stories/2007020100340200.htm.
- Geeta Padmanabhan (10 March 2003). "A huge hit on the small screen". The Hindu. Archived from the original on 10 அக்டோபர் 2010. https://web.archive.org/web/20101010134217/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/03/10/stories/2003031000880300.htm.
- Chitra Swaminathan (20 July 2005). "I just strayed into acting". The Hindu. Archived from the original on 19 பிப்ரவரி 2007. https://web.archive.org/web/20070219044322/http://www.hindu.com/mp/2005/07/30/stories/2005073000070200.htm.
- "Bad is beautiful". The Hindu. 16 September 2004. Archived from the original on 4 ஏப்ரல் 2007. https://web.archive.org/web/20070404153614/http://www.hinduonnet.com/thehindu/mp/2004/09/16/stories/2004091600850100.htm.