லட்சுமி மேனன் (நடிகை)

நடிகை

லட்சுமி மேனன் (பிறப்பு: மே 26, 1996) கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா (2011) என்ற திரைப்படத்தில் நடித்தார். வணிகரீதியான வெற்றியைத் தேடித்தந்த, சுந்தர பாண்டியன் மற்றும் கும்கி திரைப்படங்களின் மூலமாக தமிழ்த் திரைப்படவுலகில் பெயர் பெற்றார்.[1]

லட்சுமி மேனன்
2013ம் ஆண்டுக்கான 60வது தென்னிந்திய பிலிம் பேர் பரிசு பெறுகிறார்.
பிறப்புமே 26, 1996 (1996-05-26) (அகவை 27)
எர்ணாகுளம், கேரளா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை, நடனக் கலைஞர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2011 – தற்போதுவரை
பெற்றோர்ராமகிருஷ்ணன்,
உசா மேனன்

வாழ்க்கை தொகு

லட்சுமி மேனன் துபாய் கலைஞரான 'ராமகிருஷ்ணன்' மற்றும் நடன ஆசிரியர் 'உஷா' ஆகியோரின் மகள் ஆவார். [2] இவர் தயார் மல்லாங்கிணறு என்ற ஊரில் இருக்கும் பெண்கள் உயர்நிலை பள்ளியில் நடன ஆசிரியர் ஆவர், இங்கு தான் லட்சுமி மேனன் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் கேராளவில் இருக்கும் தூய நெஞ்சக் கல்லூரியில் இலக்கியத்துக்கான இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[3]

தொழில் தொகு

2011ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்த மலையாள இயக்குநர் வினையன், ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற மலையாளப் படத்தில் வாய்ப்பு கொடுத்தார். பின்னர் அலி அக்பர் இயக்கிய திரைப்படத்தில் வினித்துடன் நடித்தார். தமிழில் சசிக்குமாரின் சுந்தர பாண்டியனில் அறிமுகமான இவர், பின்னர் பிரபு சாலமனின் படமான கும்கி யில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்தார். 2014ஆம் ஆண்டு வெளியான நான் சிகப்பு மனிதன் படத்தில் நடிகர் விஷாலுடன் உதட்டு முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை கூட்டினார். திறமையான இளம் நடிகையாக வலம் வருகிறார்.

திரைப்பட விபரம் தொகு

நடித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2011 ரகுவிண்டெ சுவந்தம் ரசியா மலையாளம்
2012 ஐடியல் கப்பிள் மலையாளம்
சுந்தர பாண்டியன் அர்ச்சனா தமிழ் வெற்றி : சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது
சிறந்த அறிமுக நடிகைக்கான விகடன் விருது
கும்கி அல்லி தமிழ் பரிந்துரை: சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
2013 குட்டிப் புலி பாரதி தமிழ்
மஞ்சப்பை கார்த்திகா தமிழ்
சிப்பி தமிழ் படப்பிடிப்பில் [4]
பாண்டிய நாடு மலர்விழி சிதம்பரம் தமிழ் [5]
வசந்த குமாரன் தமிழ் முன் தயாரிப்பு
2014 நான் சிகப்பு மனிதன் [6] மீரா தமிழ்
ஜிகர்தண்டா கயல்விழி தமிழ்
சிப்பாய் தமிழ் படப்பிடிப்பில்
அவதாரம் மணிமேகலா மலையாளம்
2015 கொம்பன் தமிழ் முன் தயாரிப்பு
2016 றெக்க (திரைப்படம்) பாரதி தமிழ்
2021 புலிக்குத்தி பாண்டி பேச்சி

பாடிய பாடல்கள் தொகு

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் குறிப்புகள்
2014 ஒரு ஊருல ரெண்டு ராஜா "குக்குரு குக்குரு" டி. இமான் [7]

மேற்கோள்கள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_மேனன்_(நடிகை)&oldid=3776969" இருந்து மீள்விக்கப்பட்டது