கொம்பன்

கொம்பன் 2015ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கார்த்தி நடித்த இத்திரைப்படத்தை எம். முத்தையா இயக்கியிருந்தார். இப்படத்தில் லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.[3] இப்படத்துக்கு மத்திய தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இத்திரைப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 1, 2015 என அறிவிக்கப்பட்டு நீதிமன்ற வழக்கின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.[4]

கொம்பன்
கொம்பன் திரைப்படத்தின் முதற்காட்சி சுவரொட்டி
இயக்கம்எம். முத்தையா
தயாரிப்புகே. இ. ஞானவேல்ராஜா
எஸ். ஆர். பிரகாஷ் பாபு
எஸ். ஆர். பிரபு
கதைஎம். முத்தையா
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புகார்த்திக் சிவகுமார்
லட்சுமி மேனன்
ராஜ்கிரண்
ஒளிப்பதிவுவேல்ராஜ்
படத்தொகுப்புபிரவீன் கே. எல்.
கலையகம்ஸ்டுடியோ கிரீன்
வெளியீடுஏப்ரல் 1, 2015 (2015-04-01) [1]
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு15 கோடி[2]

நடிகர்கள்தொகு

ஒலிப்பதிவுதொகு

கொம்பன்
ஒலிப்பதிவு
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்கிரீன் ஆடியோ
Divo
இசைத் தயாரிப்பாளர்ஜி. வி. பிரகாஷ் குமார்
ஜி. வி. பிரகாஷ் குமார் காலவரிசை
'பென்சில் (2015) கொம்பன்

இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஜி. வி. பிரகாஷ் குமார் நடிகர் கார்த்தியுடன் இணையும் மூன்றாவது திரைப்படமாகும். இதற்கு முன்னர், ஆயிரத்தில் ஒருவன் (2010) மற்றும் சகுனி (2012) திரைப்படங்களில் இருவரும் இணைந்திருந்தனர்.[5] சிரேயா கோசல் இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்..[6]. இப்படத்தின் பாடல்களை ரா. தனிக்கொடி, மற்றும் மகாலிங்கம் ஆகியோர் எழுதியுள்ளனர்.[7]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கம்பிக்கரை வேட்டி"  ஆனந்து, வி. எம். மகாலிங்கம்  
2. "அப்பப்பா"  ஸ்ரேயா கோசல், ஜி. வி. பிரகாஷ் குமார்  
3. "கருப்பு நிறத்தழகி"  வேல்முருகன், மாளவிகா சுந்தர்  
4. "மெல்ல வளஞ்சது"  மது பாலகிருஷ்ணன்  
5. "செலபரேசன் (கொம்பன் தீம்)"  ஜி. வி. பிரகாஷ் குமார்  
மொத்த நீளம்:
22.56

மேற்கோள்கள்தொகு

  1. "Komban release Date". webgalatta. 2015-02-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-15 அன்று பார்க்கப்பட்டது.
  2. Pillai, Sreedhar (12 December 2014). "The king returns: Lingaa is the most important movie of Rajinikanth's career". 18 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Karthi's 'Komban' - a start-to-finish affair". Behindwoods. 11 June 2014. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  4. Prakash Upadhyaya. "Komban release date advanced". The International Business Times. 1 April 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "'Komban' gets his Music director". Indiaglitz. 24 July 2014. 24 August 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. "GV-Shreya Ghoshal reunite after 4 years". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 September 2014. 17 September 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Komban movie songs lyrics". tamilsonglyrics. 2015-04-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-31 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொம்பன்&oldid=3659906" இருந்து மீள்விக்கப்பட்டது