இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு
இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு (ஆங்கிலம்: Central Board of Film Certification) (இந்தி: केन्द्रीय फिल्म प्रमाणन बोर्ड ) இந்தியாவில் விடுதலைக்குப் பின்பு ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதற்காக 1952 ஆம் ஆண்டில் திரைப்படத் தணிக்கைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்ல்படுகிறது.[1][2][3]
உருவாக்கம் | 1952 ஆம் ஆண்டு |
---|---|
வகை | அரசு முகவாண்மை |
நோக்கம் | திரைப்படம் |
தலைமையகம் | மும்பை |
சேவை பகுதி | இந்தியா |
தலைமையர் | லீலா சாம்சன் |
தாய் அமைப்பு | தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் |
வரவு செலவு திட்டம் | ₹6.9 கோடி (US$8,60,000) (2011) |
வலைத்தளம் | cbfcindia.gov.in |
திரைப்படத் தணிக்கைக் குழு அலுவலகங்கள்
தொகுதிரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைமை அலுவலகம் மும்பையில் உள்ளது. இந்தியாவில் வெளியாகும் பல்வேறு மொழிப் படங்களுக்கும் சான்றளிக்கும் இங்குதான் சான்றளிக்கப்படுகிறது. இதன் மண்டல அலுவலகங்கள் அந்தந்த வட்டாரங்களின் மொழிகளில் அல்லது பகுதிகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களைப் பரிசீலித்து சான்றுகள் அளிக்கின்றன. சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், ஹைதராபாத், கொல்கத்தா மற்றும் புதுடெல்லி ஆகிய இடங்கலில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
திரைப்படத் தணிக்கைக் குழு
தொகுஇந்த திரைப்படத் தணிக்கைக் குழுவில் இந்தியஅரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இவற்றின் நிரந்தர உறுப்பினர்களாகவும், இந்திய அரசு குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள இலக்கிய வல்லுனர்கள், கலைத்துறையின் முக்கியப் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் போன்றவர்களை அவ்வப்போது இதன் தற்காலிக உறுப்பினர்களாகவும் நியமிக்கிறது. இக்குழுவில் 12 முதல் 25 உறுப்பினர்கள் வரை இடம் பெறுகின்றனர்.
இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள் திரைப்படங்களைப் பார்த்து அவற்றை வெளியிட சான்று அளிக்கப் பரிந்துரைக்கின்றனர். இந்தக் குழுவினர் திரைப்படத்தில் இந்திய அரசின் இறையாண்மை, எல்லை, பண்பாடு, அரசியல் , சட்டம், நீதிமன்றம் ஆகியவற்றை மீறாத வகையில் உள்ளதா என்பதைக் கண்காணிப்பதுடன் வன்முறை, கொடுமை, ஆபாசம், பாலியல் குறைபாடு முதலியவை இல்லாதபடி அமைந்துள்ளதா என்று சரிபார்க்கப் படுகிறது. மேலும் தனிப்பட்ட அவதூறுகள், மத உணர்வுகளைத் தூண்டுதல், சடங்குகலின் பெயரால் நிகழும் தவறுகள் ஆகியன படங்களில் இடம் பெற்றுள்ளனவா என்றும் பார்வையிட்டு சான்றுக்குப் பரிந்துரைக்கிறது.
திரைப்பட தணிக்கைச் சான்றுகள்
தொகுஇந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒவ்வொரு திரைப்படத்தையும் பார்வையிட்டு, பொதுமக்கள் அனைவரும் பார்வையிடலாம் என்று கருதும் திரைபடங்களுக்கு "U " (Unrestricted Public Exhibition or Universal) எனும் முத்திரையும், வயது வந்தவர்கள் மட்டும் பார்வையிடலாம் எனக் கருதும் திரைப்படங்களுக்கு "A" (Adult) எனும் முத்திரையும், வயது வந்தவர்கள் மட்டும் பொதுவாகப் பார்வையிடலாம் என்பதாகக் கருதும் திரைபடங்களுக்கு "UA" (Unrestricted Public Exhibition with parental or Universal & Adult) எனும் முத்திரையும், சிறுவர்கள் பார்வையிடலாம் எனும் கருதும் படங்களுக்கு "C" (Children ) என்றும் முத்திரை அளிக்கின்றன. இந்த முத்திரை குறிப்பிட்ட திரைப்படம் குறித்த விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
வெளியிணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to CBFC". cbfcindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 February 2020.
- ↑ Jhinuk Sen (15 June 2011). "UA, S, X, R demystified: How films are rated". News18. Network18 Group. Archived from the original on 16 June 2019.
- ↑ Jha, Lata; Ahluwalia, Harveen (17 March 2017). "Censor board denied certification to 77 films in 2015–16". Livemint. பார்க்கப்பட்ட நாள் 14 May 2020.