தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், இந்தியா

இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், (Ministry of Information and Broadcasting (India)), இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இணை அமைச்சர் எல். முருகன் ஆவார். இந்திய அரசின் ஒலி-ஒளிபரப்புப் பிரிவான பிரசார் பாரதி மற்றும் இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
துறை மேலோட்டம்
அமைப்பு15 ஆகஸ்டு 1947
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்புது தில்லி
பணியாட்கள்4,012 (2016)[1]
ஆண்டு நிதிரூபாய் 4071.23 கோடி(2021-22)[2]
அமைச்சர்
துணை அமைச்சர்
அமைப்பு தலைமை
வலைத்தளம்www.mib.gov.in

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகள்

தொகு
 • தூர்தர்ஷன் மற்றும் ஆகாஷ்வாணி மூலம் மக்களுக்கு செய்திச் சேவைகள் வழங்குதல்
 • திரைப்படங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி.
 • திரைப்படத் துறையின் வளர்ச்சி மற்றும் ஊக்குவிப்பு.
 • திரைப்பட விழாக்கள் மற்றும் கலாச்சார பரிமாற்றங்களின் அமைப்பு.
 • விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம்
 • இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளை முன்வைப்பதற்கும், அரசாங்கக் கொள்கைகள் பற்றிய கருத்துக்களைப் பெறுவதற்கும், பத்திரிகை உறவுகளைக் கையாள்வதற்கு பத்திரிகை தகவல் பணியகம் உதவுகிறது
 • பத்திரிகை நிர்வாகம் மற்றும் புத்தகங்கள் பதிவு சட்டம் மற்றும் 1867 செய்தித்தாள்கள் தொடர்பான சட்டங்களை நடைமுறைப்படுத்தல்
 • தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் வெளியீடுகள் மூலம் இந்தியாவைப் பற்றிய தகவல்களை நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பரப்புதல்.
 • அமைச்சின் ஊடகப் பிரிவுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உதவுவதற்கு ஆராய்ச்சி, குறிப்பு மற்றும் பயிற்சி.
 • பொது நலன் சார்ந்த பிரச்சனைகளில் தகவல் விளம்பர பிரச்சாரங்களுக்கு தனிப்பட்ட தொடர்பு மற்றும் பாரம்பரிய நாட்டுப்புற கலை வடிவங்களைப் பயன்படுத்துதல்.
 • தகவல் மற்றும் வெகுஜன ஊடகத் துறையில் சர்வதேச ஒத்துழைப்பு.

அமைப்புகள்

தொகு

தன்னாட்சி அமைப்புகள்

தொகு

பிற அமைப்புகள்

தொகு

பயிற்சி நிறுவனங்கள்

தொகு

தகவல் தொடர்பு மற்றும் விளம்பரம்

தொகு
 • விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகம் (DAVP)
 • மத்தியத் தகவல் பணியகம் (CBC)[5]
 • கள விளம்பர இயக்குனரகம்
 • புகைப்பட பிரிவு
 • வெளியீடுகள் பிரிவு
 • ஆராய்ச்சி குறிப்பு மற்றும் பயிற்சி பிரிவு
 • பாடல் மற்றும் நாடகப் பிரிவு
 • இந்தியச் செய்தித்தாள்களின் பதிவாளர் அலுவலகம் (RNI)[6]
 • இந்தியப் பத்திரிகையாளர் மன்றம்[7]
 • பத்திரிகை தகவல் பணியகம்
 • மக்கள் தொடர்பு நிறுவனம், இந்தியா (IIMC)

திரைப்படத் தணிக்கை, மேல்முறையீடு மற்றும் வளர்ச்சி

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
 1. "Central govt to hire 2.8 lakh more staff, police, I-T & customs to get lion's share - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 2. "Budget data" (PDF). www.indiabudget.gov.in. 2022.
 3. சத்யஜித் ரே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் அக்டோபர் முதல் திரிபுராவில் வளாகத்தைத் தொடங்க உள்ளது
 4. The Indian Institute of Mass Communication
 5. Central bureau of Communications
 6. Registrar of Newspapers
 7. Press Council of India

வெளி இணைப்புகள்

தொகு