லோ. முருகன்

தமிழக அரசியல்வாதி, மத்திய அமைச்சர்
(எல். முருகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

லோ. முருகன் (L. Murugan, லோகநாதன் முருகன்) ஓர் வழக்கறிஞர் மற்றும் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஆவார். இவர் தற்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.[2][3]

லோ. முருகன்
எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்பு துறை மற்றும் மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர்[1]
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோடி
அமைச்சர்பர்சோத்தம் ரூபாலா
முன்னையவர்பிரதாப் சந்திர சாரங்கி
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 ஜூலை 2021
பிரதமர்நரேந்திர மோடி
அமைச்சர்அனுராக் சிங் தாக்கூர்
முன்னையவர்ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
முன்னையவர்தவார் சந்த் கெலாட்
தொகுதிமத்தியப் பிரதேசம்
மாநிலத் தலைவர் பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு
பதவியில்
11 மார்ச் 2020 – 07 ஜூலை 2021
முன்னையவர்தமிழிசை சவுந்தரராஜன்
பின்னவர்அண்ணாமலை குப்புசாமி
துணைத் தலைவர், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம்
பதவியில்
2017–2020
முன்னையவர்ராஜ் குமார் வேர்க்க
பின்னவர்அருண் ஹால்டர்
கலாச்சார பிரிவின் 2 வது மாநில தலைவர்
தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
குடியரசுத் தலைவர்ராம் நாத் கோவிந்த்
முன்னையவர்காயத்திரி ரகுராம்
பின்னவர்பதவியில்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமே 29, 1977 (1977-05-29) (அகவை 47)
கோனூர், பரமத்தி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்கலையரசி
பிள்ளைகள்தர்னேஷ்
இந்திரஜித்
பெற்றோர்லோகநாதன்
முன்னாள் கல்லூரிடாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை
சென்னைப் பல்கலைக்கழகம்
வேலைவழக்கறிஞர்அரசியல்வாதி

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இவர் 1977 ஆம் ஆண்டு, மே 29 அன்று தெலுங்கு பேசும் அருந்ததியர் குடும்பத்தில் பிறந்தார்.[4][5][6][7] 1977இல் பிறந்த இவர், தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூரைச் சேர்ந்தவர்.[8] இவருக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்.[9] 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், இளங்கலை பட்டத்தையும் அறிவுசார் சொத்துரிமை குறித்து பட்டயப் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்ட முதுகலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார்.

ஆரம்ப கால அரசியல்

தொகு

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அவர் இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தைப் பெற்றார். அவர் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக ஆனார். மேலும் 2017 முதல் 2019 வரை இவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.[10][11][12]

தமிழக பாஜக தலைவராக

தொகு

தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகவும் பதவி வகித்தார். இவர் தமிழக பாஜக தலைவராக, தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டாவால் 11 மார்ச், 2020 அன்று நியமிக்கப்பட்டார்.[13][14] 07 சூலை 2021 வரை அப்பதவியில் இருந்தார். அவர் அருந்ததியர் சமூகத்தில் இருந்து இந்த பதவியை வகிக்கும் முதல் நபர் ஆவார்.[15]

அவர் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் சட்டமன்றத் தொகுயில் போட்டியிட்டு திமுகவின் என். கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.[16][17]

மத்திய இணை அமைச்சராக

தொகு

07 சூலை 2021 அன்று மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.[18][19] சுதந்திரத்துக்குப் பிறகு அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முதல் இந்திய அமைச்சரவை உறுப்பினர் இவர்.[20][21][22]

அவர் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.[23][24]

மேற்கோள்கள்

தொகு
  1. மத்திய அமைச்சா்களின் துறைகள் விவரம். தினமணி. 8 சூலை 2021.
  2. "L Murugan: Age, Biography, Education, Wife, Caste, Net Worth & More - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  3. "Dr. L. Murugan| National Portal of India". www.india.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  4. சே. பாலாஜி (7 சூலை 2021). மத்திய அமைச்சர் எல். முருகன்: சட்டக்கல்லூரி முதல் டெல்லி அரசியல் வரை! - கடந்து வந்த பாதை. விகடன். 1977 மே 29 -ம் தேதி நாமக்கல் மாவட்டத்தின் கோனூர் கிராமத்தில் பிறந்த எல்.முருகன், சுந்தர தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
  5. 5 things to know about L Murugan, TN's BJP leader who is part of Modi's cabinet. DTNext. 7 july 2021. Archived from the original on 9 அக்டோபர் 2021. பார்க்கப்பட்ட நாள் 8 ஜூலை 2021. He was born in Paramathi in the Namakkal district of Tamil Nadu into a Telugu speaking family {{cite book}}: Check date values in: |access-date= and |date= (help)
  6. L Murugan’s motive is to touch every voter with a hint of saffron. The Indian Express. 26 March 2021.
  7. "தாய்மொழி தெலுங்கில் பேசி பரப்புரை மேற்கொண்ட எல்.முருகன்!". 21 மார்ச் 2021. https://news7tamil.live/bjp-tamilnadu-leader-l-murugan-campaign.html. 
  8. "யார் இந்த எல். முருகன்? பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டதின் பின்னணி என்ன?". நியூஸ் 18
  9. "தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்: ஜே.பி.நட்டா அறிவிப்பு- முருகனுக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளும் நன்றாகத் தெரியும்". இந்து தமிழ்
  10. "L Murugan - NCSC". NCSC. http://ncsc.nic.in/files/profile-murugan%20l.-latest.pdf/. 
  11. "National Commission for Scheduled Castes". www.ncsc.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  12. "Who's Who Who's Who". ncsc.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  13. "L Murugan wins race to become Tamil Nadu BJP state president". The News Minute
  14. "தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமனம்!". நக்கீரன்
  15. Nathan, Keerthi. "The Meteoric Rise of L. Murugan, the new BJP Chief of Tamil Nadu". Round Table India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  16. "BJP's L Murugan loses to DMK's Kayalvizhi in Dharapuram by 1393 votes". Business Insider. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  17. Desk, India com News (2021-05-02). "Dharapuram Election Result: DMK's Kayalvizhi Defeats BJP's Murugan L". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  18. "மத்திய அமைச்சரவை விரிவாக்கம்: 43 பேர் பதவியேற்பு". Dinamalar. 2021-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
  19. Aparna Banerjea (08 Jul 2021). Modi Cabinet expansion: Portfolios of new ministers announced. Who gets what, full list here. livemint. {{cite book}}: Check date values in: |date= (help)
  20. "எல்.முருகனைத் தவிர 75 ஆண்டு காலத்தில் அருந்ததியர் சமுதாயத்திலிருந்து அமைச்சர் வரவில்லை - பா.ஜ.க தலைவர் அண்ணாமலை". News18 Tamil (in tm). 2021-08-21. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  21. "Yahoo Search - Web Search". in.search.yahoo.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  22. "Will BJP's UP Model of Mobilising Scheduled Castes Work in Tamil Nadu?". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
  23. BhopalSeptember 28, Press Trust of India; September 28, 2021UPDATED:; Ist, 2021 05:36. "Union minister L Murugan elected unopposed to Rajya Sabha from MP". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10. {{cite web}}: |first3= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  24. Sep 19, TNN / Updated:; 2021; Ist, 06:59. "L Murugan named BJP's RS candidate from MP | Bhopal News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோ._முருகன்&oldid=3944092" இலிருந்து மீள்விக்கப்பட்டது