காயத்திரி ரகுராம்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

காயத்திரி ரகுராம் (Gayathri Raguram, பிறப்பு: 23 ஏப்ரல் 1984) தென்னிந்திய திரைப்படத் துறையில் பணிபுரிந்த ஒரு இந்திய நடனக் கலைஞரும், நடிகையும் ஆவார். இவர் பிரபலமான நடன இயக்குனரான ரகுராமின் மகள் ஆவார். காயத்ரி 2002 ஆம் ஆண்டு சார்லி சாப்ளின் திரைப்படத்தில் ஒரு நடிகையாக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், சில வருட இடைவெளிக்குப் பிறகு, அவர் 2008 இல் திரைப்படங்களில் நடன அமைப்பு செய்யத் தொடங்கினார். இவர் அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.

காயத்திரி ரகுராம்
பிறப்பு23 ஏப்ரல் 1984 (1984-04-23) (அகவை 39)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை, நடன அமைப்பாளர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
2002 – தற்பொழுது வரை
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கைத்
துணை
தீபக் சந்திரசேகர் (2006 - 2010)

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ரகுராம் மற்றும் கிரிஜா ரகுராம் ஆகிய நடன அமைப்பாளர் தம்பதிகளுக்கு இரண்டாவது மகளாக பிறந்தார் காயத்திரி.[1] அவரது மூத்த சகோதரி சுஜா ஒரு முன்னணி நடனக் கலைஞர் ஆவார். இவரது அக்காவும் முன்பு நடிகையாக பணிபுரிந்தார்.[2] இவர் இயக்குனர் கே. சுப்ரமணியனின் கொள்ளு பேத்தி ஆவார். இவரது தாயார் கிரிஜா அவர்களும் நடனக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அம்மாவில் தங்கைகளில் இருவர் புகழ் பெற்ற நடன அமைப்பாளர்கள் கலா மற்றும் பிருந்தா ஆகியோர் ஆவர்.[3] 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கலிபோர்னியாவில் அமெரிக்க மென்பொருள் பொறியாளர் தீபக் சந்திரசேகர் உடன் காயத்ரி திருமணம் செய்தார். பின்னர் திசம்பர் 2006இல் தமிழ்நாட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். அதில் பல தமிழகத்தைச் சேர்ந்த நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொண்டனர். 2008 இல், தீபக் மற்றும் அவரது பெற்றோர்கள் தன்னை கொடுமை செய்ததாக கூறி அதன் அடிப்படையில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். பின்னர் 2010இல் விவாகரத்து வழங்கப்பட்டது.[4]

அரசியல் வாழ்க்கை தொகு

பி.ஜே.பி தலைவர் அமித் ஷா முன்னிலையில் 2014 ஆம் ஆண்டில் கட்சியில் சேர்ந்தார். நவம்பர் 2015 இல், காயத்ரி தமிழ்நாட்டில் கலைகளுக்கான பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை குப்புசாமியின் தலைமையில் கட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனும் குற்றம்சாட்டி கட்சியில் இருந்து சனவரி 3, 2023இல் விலகினார்.[5] 19 ஜனவரி 2024 அன்று, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.[6] 2 மார்ச் 2024 அன்று, காயத்ரி ரகுராம் அதிமுகவின் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[7]

திரைப்பட வரலாறு தொகு

நடித்த திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2001 ராபலெல்லோ ராதா தெலுங்கு
2002 சார்லி சாப்ளின் சுசி தமிழ்
மனசெல்லா நீனே ரேணுகா கன்னடம்
நக்சத்ரக்கண்ணுல்ல ராஜகுமாரன் அவனுண்டோரு ராஜகுமாரி அஸ்வதி மலையாளம்
ஸ்டைல் விஜி தமிழ்
2003 மா பாபு பொம்மாகு பெல்லாண்டா மோகனா தெலுங்கு
பரசுராம் மீனா தமிழ்
விசில் அஞ்சலி தமிழ்
விகடன் கௌரி தமிழ்
2011 வானம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2012 காதலில் சொதப்புவது எப்படி உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் தமிழ் சிறப்புத் தோற்றம்
லவ் பெய்லியர் தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2015 வை ராஜா வை காயத்திரி தமிழ்
இது என்ன மாயம் தமிழ் சிறப்புத் தோற்றம்
2016 தாரை தப்பட்டை தமிழ் சிறப்புத் தோற்றம்
2019 அருவம் அறிவியலாளர் தமிழ்
தொலைக்காட்சி
  • ஓடி விளையாடு பாப்பா (2016)-நடுவர்
  • பிக் பாஸ் (2017)-பங்கேற்பாளர்
  • மிஸ்டர். சின்னத்திரை (2017)-நடுவர்
  • டிவைடட் (2018)-பங்கேற்பாளர்
  • பிக் பாஸ் (2018)-விருந்தினர்

குறிப்புகள் தொகு

  1. "Tamil Cinema News - Tamil Movie Reviews - Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
  2. "Suja Manoj - Film Connection Students". பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
  3. "Archived copy". பார்க்கப்பட்ட நாள் 30 November 2013.
  4. "Gayathri Ragurama's marriage on the rocks?". பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
  5. "Suspended TN BJP leader Gayathri Raghuram resigns from party". daijiworld.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 January 2023.
  6. "பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் இணைந்தார்...!". dailythanthi. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
  7. "அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமுக்கு பதவி : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு". news18tamil. 2 March 2024. பார்க்கப்பட்ட நாள் 2 March 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்திரி_ரகுராம்&oldid=3902647" இலிருந்து மீள்விக்கப்பட்டது