பிக் பாஸ் தமிழ் 1

பிக் பாஸ் தமிழ் 1 (Bigg Boss Tamil 1) என்பது 25 சூன் முதல் 30 செப்டம்பர் 2017 ஆம் ஆண்டு வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உண்மைநிலை விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டை சேர்ந்த உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் தமிழ் மறு ஆக்கம் ஆகும். இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் நடிகர் கமல் ஹாசன் என்பவர் தொகுப்புரை ஆற்றி நடத்தினார்.[1][2]

பிக் பாஸ் தமிழ் (பருவம் 1)
ஓடவும் முடியாது , ஒளியவும் முடியாது
வழங்கியவர்கமல்ஹாசன்
நாட்களின் எண்.98
இல்லர்களின் எண்.19
வெற்றியாளர்ஆரவ் நஃபீஸ்
இரண்டாம் இடம்சினேகன் சிவசெல்வம்
நாடுஇந்தியா
நிகழ்வுகளின் எண்.99
வெளியீடு
தொலைக்காட்சி நிறுவனம்விஜய் தொலைக்காட்சி
வெளியீடுசூன் 25, 2017 (2017-06-25) –
30 செப்டம்பர் 2017 (2017-09-30)
பருவ காலவரிசை
அடுத்தது →
பருவம் 2

இந்த பருவத்தில் வெற்றியாளராகவும் மற்றும் 50 லட்சம் ரொக்கப் பரிசைப் பெற்றவர் வடிவழகர் ஆரவ். பாடலாசிரியர் சினேகன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார், மற்ற இறுதிப் போட்டியாளராக நடிகர்கள் ஹரீஷ் கல்யாண் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் ஆகியோர் வந்தனர்.

ஒளிபரப்பு தொகு

ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

பருவங்கள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு
பருவம் 1 இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை

குடும்ப உறுப்பினர்கள் தொகு

அசல் நுழைவு தொகு

  1. ஸ்ரீ, நடிகர், வழக்கு எண் 18/9, மாநகரம் ஆகியபடங்களில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
  2. அனுயா, நடிகை, சிவா மனசுல சக்தி படத்தில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
  3. வையாபுரி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்.
  4. கயாத்ரி ரகுராம், நடன இயக்குனர், நடிகை, இயக்குநர் என தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
  5. பரணி, நடிகர், நாடோடிகள் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறப்பாக அறியப்படுகிறார்.
  6. ரைசா வில்சன், வடிவழகி, நடிகை, வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  7. சினேகன், கவிஞர், பாடலாசிரியர் மற்றும் நடிகர் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றியவர்.
  8. ஓவியா, நடிகை, இவர் களவாணி (2010), மெரினா (2012), கலகலப்பு (2012) போன்ற படங்களில் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார்.
  9. ஆர்த்தி கணேஷ்கர், நடிகை, பல தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்துள்ளார்.
  10. ஆரவ் வடிவழகன், நடிகர் இவர் சைத்தான், (2016) மற்றும் மீண்டும் வ அருகில் வா (2017) போன்ற படங்களில் நடித்துள்ளார்.
  11. கஞ்சா கறுப்பு, நடிகர், பல தமிழ்த்திரைப்படங்களில் முன்னணி நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
  12. மரியா ஜூலியானா, ஒரு முன்னாள் செவிலியர், இவர் 2017 ஆம் ஆண்டு நடந்த 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களில் ஊடக கவனத்தை பெற்றார்.
  13. கணேஷ் வெங்கட்ராமன், முன்னாள் வடிவழகர், நடிகர் இவர் அபியும் நானும் (2008), உன்னைப்போல் ஓருவன் (2009) மற்றும் தனி ஒருவன் (2015) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
  14. சக்தி வாசு, நடிகர், இவர் தொட்டால் பூ மலரும், (2007) சிவலிங்கா (திரைப்படம்) 2017 ஆகிய படங்களில் நடித்ததற்காக அறியப்படுகிறார்.
  15. நமிதா, நடிகை, இவர் ஏய் (2005), அழகிய தமிழ் மகன் (2007) மற்றும் பில்லா (2007) போன்ற படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

புதிய நுழைவு தொகு

  1. பிந்து மாதவி, நடிகை, தேசிங்கு ராஜா (2013), கேடி பில்லா கில்லாடி ரங்கா (2013) மற்றும் பசங்க 2 (2015) ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
  2. சுஜா வருணி. நடிகை, மிளகா (2010) மற்றும் பென்சில் (2016) உள்ளிட்ட படங்களில் துணை நடிகைகயாக நடித்துள்ளார்.
  3. ஹரீஷ் கல்யாண், நடிகர் சிந்து சமவெளி (2010) மற்றும் பொறியாளன் (2014) ஆகியவற்றில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தார்.
  4. காஜல் பசுபதி, நடிகை கோ (2011) மற்றும் மௌனகுரு (2011) உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

வைல்டு கார்ட் நுழைவு தொகு

  1. ஆர்த்தி கணேஷ்
  2. மரியா ஜூலியானா
  3. சக்தி வாசு

விருந்தினர்கள் தொகு

வாரம் விருந்தினர் (கள்) குறிப்புக்கள்
4 தமிழ் தலைவாஸ் 2017 புரோ கபடி லீக் பருவத்தில் தங்கள் ஈடுபாட்டை ஊக்குவிக்க
7 ஒரு திருடன் மற்றும் ஒரு கோமாளி தினசரி பணியின் ஒரு பகுதியாக அவர்கள் ஹவுஸ்மேட்களின் கவனத்தை பெற முயற்சிக்கிறார்கள்.
ஸ்ரீபிரியா மற்றும் சதீஸ் நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள
8 ஒரு இந்து பூசாரி ஆடம்பர பட்ஜெட் பணியின் ஒரு பகுதியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக ஒரு குறும்பு விளையாட்டின்படி, பூசாரி பிக்பாஸ் வீட்டுக்கு வந்து, பேயை விரட்டும் பணியை செய்தார்.
9 அடையாளம் தெரியாத நபர் முட்டைகளை திருடினார் ரைசா பகல் நேரத்தில் தூங்கியதால் ஹவுஸ்மேட்களுக்கான தண்டனை.
ஒரு நடுவர் மற்றும் இரண்டு மல்யுத்த வீரர்கள் (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) ஹவுஸ்மேட்க்காரர்களுடன் மல்யுத்தம் செய்ய.
10 மரியா ஜூலியானா, ஆர்த்தி முன்னாள் போட்டியாளர்களான அவர்கள் ஒரு வாரம் விருநிதினர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர்.[3]
11 மரியா ஜூலியானா மற்றும் ஆர்த்தி மேலும் இன்னொரு வாரம் கூடுதலாக வீட்டில் தங்கினர்.[4]
சக்தி வாசு முன்னாள் போட்டியாளரான சக்தி வாசு வீட்டுக்கு ஒரு வாரம் விருந்தினராக தங்குவதற்கு நுழைந்தார்.[4]
வையாபுரி குடும்பம், பிந்துவின் நன்பர்கள், ஹரீஷ் பெற்றோர் வையபுரி, பிந்து, ஹரிஷ் ஆகியவர்களுக்கு வேண்டியவர்களின் எதிர்பாரா வருகை வார ஆடம்பர பட்ஜெட் பணியில் ஒரு பகுதியாக ஆனது.[5]
சினேகனின் தந்தை மற்றும் கணேசின் மணைவி நிஷா கிருஷ்ணன் சினேகன் மற்றும் கணேஷ் ஆகியோருக்கு வேண்டியவர்களின் எதிர்பாரா வருகை வார ஆடம்பர பட்ஜெட் பணியில் ஒரு பகுதியாக ஆனது.[6]
ஆரவ்வின் நண்பர், சகோதரர் & சுஜாவின் தாயார் & சகோதரி மற்றும் மாமா ஆரவ் மற்றும் சுஜா ஆகியோருக்கு வேண்டியவர்களின் எதிர்பாரா வருகை வார ஆடம்பர பட்ஜெட் பணியில் ஒரு பகுதியாக ஆனது.[7]
விஷ்ணு மற்றும் காத்ரீன் திரீசா அவர்களது திரைப்படமான 'கதா நாயக்கன் திரைப்படத்தை விளம்பரப்படுத்த.[8]
12 கமல்ஹாசன் தங்க நுழைவுச்சீட்டு வெற்றியாளரை அறிவிக்க நுழைந்தார்.[9]
14 அஞ்சலி அவரது திரைப்படான பலூன் படத்தை விளம்பரப்படுத்த.[10]
ஒரு திருடன் (சிறீதர்) மற்றும் பறை இசைக்கலைஞர்கள் (அர்ஜுன் & சுமன்) தினசரி பணியின் ஒரு பகுதியாக வீட்டு உறுப்பினர்களின் கவனத்தைக் கவர.
வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் நடிகர் ஸ்ரீ மற்றும் நமீதா தவிர. பிக் பாஸ் தமிழ் கிராண்ட் ஃபினேலுக்கு அழைக்கப்பட்டனர்.
கணேசின் மனைவி நிஷா கிருஷ்ணா பிக் பாஸ் வீட்டிலிருந்து கணேஷை அழைத்துக் கொண்டு நான்காவது நபரை வெளியேற்ற.
ஓவியா பிக் பாஸ் வீட்டிலிருந்து ஹரீஷை அழைத்துக் கொண்டு மூன்றாவது நபரை வெளியேற்ற.
கமலகாசன் ஆரவ் மற்றும் சினேகனை பிக்பாஸ் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்துச் செல்ல.

வாராந்திர சுருக்கம் தொகு

வாரம் 1 நுழைவு
  • ஸ்ரீ, அனுயா பகவத், வையாபுரி, காயத்ரி ரகுராம், பரணி, ரைசா வில்சன், ஸ்னேகன், ஓவியா, ஆர்த்தி, ஆரவ், கஞ்சா கருப்பு, ஜூலியானா, கணேஷ் வெங்கட்ராம், சக்தி வாசுதேவன் மற்றும் நமிதா ஆகியோர் முதல் நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
  • ஸ்னேகன்
பரிந்துரைகள்
  • அனுயா, ஸ்ரீ & ஜூலியானா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • சக ஹவுஸ்மேட்களின் குழந்தைப் பருவ புகைப்படங்களை அடையாளம் காண்பது
வெளியேற்றம்
  • ஸ்ரீ தானாக 4-ம் நாள் வீட்டை விட்டு வெளியேறினார்.[11]
  • அனுயா 7-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[12]
வாரம் 2
வீட்டின் தலைவர்
  • காயத்ரி ரகுராம்
பரிந்துரைகள்
  • பரணி, கஞ்சா கருப்பு & ஓவியா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • மீண்டும் பள்ளிக்கு போகலாம் (பள்ளி அமைப்பில் தமிழ் கற்றல்)
வெளியேற்றம்
  • கஞ்சா கருப்பு 14-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[13]
  • பரணி சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயன்றதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நீக்கப்பட்டார்.[14]
வாரம் 3 வீட்டின் தலைவர்
  • கணேஷ் வெங்கட்ராம்
பரிந்துரைகள்
  • ஆர்த்தி, ஜூலியானா, ஓவியா & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • டான்ஸ் மராத்தான் (ஒரு தமிழ் திரைப்பட நட்சத்திரமாக உடை அணிந்து அவர்களின் பாட்டுக்கு நடனமாட வேண்டும். அவர்களின் பாடல் எந்த நேரத்திலும் ஒலிக்கும்)
வெளியேற்றம்
  • ஆர்த்தி 21-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[15]
வாரம் 4 வீட்டின் தலைவர்
  • சக்தி வாசு
பரிந்துரைகள்
  • கணேஷ் வெங்கட்ராம், நமிதா & ஓவியா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • திருடா திருடா (யார் வைரத்தைத் திருடினார்)
வெளியேற்றம்
  • நமிதா 28-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.[16]
வாரம் 5 வீட்டின் தலைவர்
  • ஸ்னேகன்
பரிந்துரைகள்
  • ஆரவ், ஜூலியானா, ஓவியா & ரைசா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • ஓட்டம் முடிந்தால் அட்டம் முடியும் (சமையலறை, படுக்கையறை மற்றும் குளியல் அறைகளை அணுக சைக்கிள் ஓட்டுதல்)
வெளியேற்றம்
  • வெளியேற்றம் எதுவும் இல்லை[17]
வாரம் 6 நுழைவு
  • பிந்து மாதவி பிக் பாஸ் வீட்டிற்கு நாள் 35 இல் நுழைந்தார்.
வீட்டின் தலைவர்
  • யாரும் இல்லை
பரிந்துரைகள்
  • ஜூலியானா, ஓவியா & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • பிக் பாஸ் ஆராய்ச்சி மையம் (மனநல மருத்துவமனை பணிகள்)
வெளியேற்றம்
  • மன அழுத்தத்தின் காரணமாக 41-வது நாள் வீட்டிலிருந்து ஓவிய வெளியேறினார்.[18]
  • ஜூலியானா 42 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[19]
வாரம் 7 வீட்டின் தலைவர்
  • ரைசா
பரிந்துரைகள்
  • ஆரவ், பிந்து, கணேஷ், காயத்ரி, சக்தி, ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • பிக்பாஸ் சலவை மையம் (பாரம்பரிய முறையில் துணிகளை கைகளால் துவைத்தல், கிழிசலை தைத்தல், பெட்டி போடுதல்)
வெளியேற்றம்
  • சக்தி 49 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[20]
வாரம் 8 நுழைவு
  • சுஜா வருணி, ஹரிஷ் கல்யாண் & காஜல் பசுபதி ஆகியோர் பிக் பாஸ் வீட்டில் 52, 53 & 54 நாட்களில் முறேயே நுழைந்தனர்.
வீட்டின் தலைவர்
  • பிந்து
பரிந்துரைகள்
  • காயத்ரி & ரைசா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • பிக் பாஸ் வீட்டில் பேய் நடமாட்டம் (வீட்டில் வசிப்பவர்களின் இரகசிய பணியாக பிக்பாஸ் வீட்டில் பேய் உள்ளதாக சொல்லி, பூசாரியை அழைத்து, பேயை விரட்டும் பணியை செய்தல்.)
வெளியேற்றம்
  • காயத்ரி 56 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[21]
வாரம் 9
வீட்டின் தலைவர்
  • ஹரீஷ்
பரிந்துரைகள்
  • ரைசா, ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • பரிந்துரைகள் சேஞ்சர் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்)
வெளியேற்றம்
  • ரைசா 63-ம் நாள் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 10
மறு நுழைவு
  • ஆர்த்தி & ஜூலியானா நாள் 64 இல் பிக் பாஸ் வீட்டில் மீண்டும் நுழைந்தனர்.
நிர்வாக ஆணையம்
  • என்ஆர்ஐ குடும்பம் (ஆரவ், பிந்து, கணேஷ், ஆர்த்தி, காஜல்)
வீட்டின் தலைவர்
  • யாரும் இல்லை
பரிந்துரைகள்
  • ஸ்னேகன், காஜல் & ஆரவ்
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • என்.ஆர்.ஐ. குடும்பம் மற்றும் மதுரை குடும்பம் (தினசரி பணிகளைச் செய்வதற்காக என்.ஆர்.ஐ. குடும்பம் மற்றும் மதுரை குடும்பம் - என 2 அணிகளாக பிரிந்து வாழ்கின்றனர் வாரத்தின் பிற்பகுதிக்கான பணிகளை செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்)
வெளியேற்றம்
  • காஜல் நாள் 70 இல் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 11
வீட்டின் தலைவர்
  • வையாபுரி
பரிந்துரைகள்
  • பிந்து, கணேஷ், ஹரீஷ் & சுஜா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • உறைதல் மற்றும் விடுபடுதல் (பிக் பாஸ் உறையச் சொன்னால் அவர் மிண்டும் விடுபட அறிவிக்கும் வரை குறிப்பிட்ட உறுப்பினர் அவர் எந்த நிலையில் உள்ளாரோ அதே நிலையில் அசையாமல் இருக்கவேண்டும், உறைதலில் இருந்து விடுபட்டால், வீட்டு உறுப்பினர் தண்டிக்கப்படுவார்)
வெளியேற்றம்
  • சுஜா 77 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார், ஆனால் அவர் ஒரு இரகசிய அறைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் வீட்டினுள் 78 ஆம் நாள் அவர் திரும்புவதற்கு இடைப்பட்ட ஒரு நாள் அங்கு தங்கியிருந்தார்.[22][23]
வாரம் 12
உள் நுழைவு
  • சுஜா வருணி ஒரு நாள் இரகசிய அறையில் தங்கி இருந்தபின் பிக் பாஸ் வீட்டினுள் மீண்டும் 78 ஆம் நாள் மீண்டும் நுழைந்தார்.
வீட்டின் தலைவர்
  • ஆரவ்
பரிந்துரைகள்
  • ஆரவ், ஹரீஷ், ஸ்னேகன் & வையாபுரி
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • இறுதிப் பகுதிக்கு நுழைய நுழைவுச் சீட்டு பாகம் 1 ( ஒரு வாரம் தொடர்ச்சியான பணிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்பவர் கோல்டன் டிக்க்டைப் பெறுவார், இது அவரை மீதமுள்ள வாரங்களில் இருந்து வெளியேற்றத்திலிருந்து காக்கும்.)
வெளியேற்றம்
  • வையாபுரி 94 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.
வாரம் 13
வீட்டின் தலைவர்
  • ஸ்னேகன்
பரிந்துரைகள்
  • ஆரவ், பிந்து, கணேஷ், ஹரீஷ் & சுஜா
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • இறுதிப் பகுதிக்கு நுழைய நுழைவுச் சீட்டு பாகம் 2 (வீட்டுவாசிகளுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பிக் பாஸ் வழங்கிய பணிகளைச் செய்ய வேண்டும்)
வெளியேற்றம்
  • சுஜா 91 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.[24]
வாரம் 14
வீட்டின் தலைவர்
  • யாரும் இல்லை
ஆடம்பர பட்ஜெட் பணிகள்
  • இல்லை
இறுதிப்பகுதி

பிக் பாஸ் இறுதி வாரத்தில் யார் வெல்லவேண்டும் என பொது மக்கள் வாக்களிக்க, எஞ்சி இருந்த வீட்டுவாசிகள் பெயர்கள் பின்வறுமாறு:

ஆரவ்
பிந்து மாதவி
கணேஷ் வெங்கட்ராமன்
ஹரீஷ் கல்யாண்
ஸ்னேகன்
வெற்றியாளர் ஆரவ்
இரண்டாம் இடம் ஸ்னேகன்
மூன்றாம் இடம் ஹரீஷ் கல்யாண்
நான்காம் இடம் கணேஷ் வெங்கட்ராமன்
வெளியேற்றம்
  • பிந்து 96 ஆம் நாள் வெளியேற்றப்பட்டார்.

பரிந்துரை அட்டவணை தொகு

வாரம் 1 வாரம் 2 வாரம் 3 வாரம் 4 வாரம் 5 வாரம் 6 வாரம் 7 வாரம் 8 வாரம் 9 வாரம் 10 வாரம் 11 வாரம் 12 வாரம் 13 வாரம் 14
இறுதி
நாள் 96 நாள் 98
வீட்டின்
தலைவர்
சினேகன் காயத்ரி கணேஷ் சக்தி சினேகன் தலைவர்
இல்லை
ரைசா பிந்து ஹரீஷ் தலைவர்
இல்லை
வையாபுரி ஆரவ் சினேகன் தலைவர்
இல்லை
தலைவரின் பரிந்துரை ஜூலியானா
ஸ்ரீ
பரணி
கஞ்சா
ஓவியா
ஆர்த்தி
வையாபுரி
நமீதா
ஜூலியானா
ஓவியா
சக்தி
காயத்ரி
காயத்ரி
ஆரவ்
ரைசா
பிந்து
சுஜா
ஹரீஷ்
சினேகன்
ஹரீஷ்
பரிந்துரை
இல்லை
Vote to: காக்கப்பட்டனர் வெற்றி
ஆரவ் அனுயா
ரைசா
பரணி
கஞ்சா
ஆர்த்தி
ஜூலியானா
கணேஷ்
நமீதா
ஜூலியானா
காயத்ரி
சக்தி
ஓவியா
கணேஷ்
வையாபுரி
காயத்ரி
ரைசா
சினேகன்
பிந்து
சுஜா
வையாபுரி
சுஜா
கணேஷ்
வீட்டின்
தலைவர்
பரிந்துரை
இல்லை
பரிந்துரைக்கப்பட்டது வெற்றியாளர்
(நாள் 98)
சினேகன் வீட்டின்
தலைவர்
பரணி
ஓவியா
ஓவியா
வையாபுரி
வையாபுரி
ஓவியா
வீட்டின்
தலைவர்
ஜூலியானா
ஓவியா
கணேஷ்
வையாபுரி
கணேஷ்
ஆரவ்
ரைசா
கணேஷ்
ஆரவ்
காஜல்
ஆரவ்
கணேஷ்
ஆரவ்
ஹரீஷ்
வீட்டின்
தலைவர்
பரிந்துரைக்கப்பட்டது இரண்டாம் இடம்
(நாள் 98)
ஹரீஷ் வீட்டில்
இல்லை
விலக்கு வீட்டின்
தலைவர்
காஜல்
ஆரவ்
கணேஷ்
பிந்து
வையாபுரி
ஆரவ்
பரிந்துரை
இல்லை
பரிந்துரைக்கப்பட்டது மூன்றாம் இடம்
(நாள் 98)
கணேஷ் கஞ்சா
ஸ்ரீ
பரணி
கஞ்சா
வீட்டின்
தலைவர்
ஓவியா
நமீதா
ஓவியா
ஜூலியானா
ஓவியா
ஜூலியான
வையாபுரி
ரைசா
காயத்ரி
ரைசா
ரைசா
வையாபுரி
ஆரவ்
காஜல்
ஹரீஷ்
சுஜா
வையாபுரி
பிந்து
பரிந்துரை
இல்லை
பரிந்துரைக்கப்பட்டது நான்காம் இடம்
(நாள் 98)
பிந்து வீட்டில்
இல்லை
ஜூலியானா
காயத்ரி
சக்தி
கணேஷ்
வீட்டின்
தலைவர்
ரைசா
சினேகன்
காஜல்
ஆரவ்
சுஜா
ஹரீஷ்
Vaiyapuri
Snehan
பரிந்துரை
இல்லை
பரிந்துரைக்கப்பட்டது வெளியேற்றப்பட்டார்
(நாள் 96)
சுஜா வீட்டில்
இல்லை
விலக்கு வையாபுரி
ரைசா
ஆரவ்
காஜல்
பிந்து
சினேகன்
ஆரவ்
சினேகன்
பரிந்துரை
இல்லை
வெளியேற்றப்பட்டார்
(நாள் 91)
வையாபுரி ஸ்ரீ
அனுயா
பரணி
நமீதா
நமீதா
ஓவியா
கணேஷ்
நமீதா
காயத்ரி
ஜூலியானா
ஜூலியானா
ரைசா
சக்தி
கணேஷ்
காயத்ரி
ரைசா
ரைசா
கணேஷ்
காஜல்
சுஜா
வீட்டின்
தலைவர்
Harish
Bindu
வெளியேற்றப்பட்டார்
(நாள் 84)
காஜல் வீட்டில்
இல்லை
விலக்கு வையாபுரி
சினேகன்
வையாபுரி
பிந்து
வெளியேற்றப்பட்டார்
(நாள் 70)
ரைசா காயத்ரி
ஜூலியானா
ஜூலியானா
ஓவியா
ஜூலியானா
ஓவியா
ஓவியா
ஜூலியானா
ஜூலியானா
ஓவியா
ஓவியா
Ganesh
வீட்டின்
தலைவர்
வையாபுரி
காயத்ரி
வையாபுரி
சினேகன்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 63)
காயத்ரி ரைசா
ஜூலியானா
வீட்டின்
தலைவர்
ஓவியா
ஜூலியானா
கணேஷ்
ஓவியா
ஓவியா
ஆரவ்
ஓவியா
ஆரவ்
வையாபுரி
கணேஷ்
ரைசா
வையாபுரி
வெளியேற்றப்பட்டார்
(நாள் 56)
சக்தி ஸ்ரீ
கஞ்சா
ரைசா
பரணி
ஆர்த்தி
ஓவியா
வீட்டின்
தலைவர்
ஓவியா
ஆரவ்
ஓவியா
ஜூலியானா
கணேஷ்
சினேகன்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 49)
சினேகன்
கணேஷ்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 49)
ஜூலியானா அனுயா
ரைசா
பரணி
கஞ்சா
ஆர்த்தி
வையாபுரி
ஓவியா
நமீதா
ஆரவ்
கணேஷ்
ஓவியா
கணேஷ்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 42)
விருந்தினர் சினேகன்
ஆரவ்
வெளியேற்றப்பட்டார்
(நாள் 42)
ஓவியா கஞ்சா
ஸ்ரீ
கஞ்சா
ரைசா
காயத்ரி
ரைசா
கணேஷ்
நமீதா
ஜூலியானா
கணேஷ்
ஆரவ்
ரைசா
வெளிநடப்பு
(நாள் 41)
நமீதா ஸ்ரீ
அனுயா
பரணி
ஓவியா
வையாபுரி
ஜூலியானா
கணேஷ்
ஓவியா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 28)
ஆர்த்தி ஜூலியானா
ஸ்ரீ
கணேஷ்
ஆரவ்
சக்தி
ஜூலியானா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 21)
விருந்தினர் சினேகன்
சுஜா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 21)
பரணி ஸ்ரீ
ரைசா
கஞ்சா
நமீதா
நீக்கப்பட்டார்
(நாள் 14)
கஞ்சா ஸ்ரீ
அனுயா
பரணி
ஓவியா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 14)
அனுயா ஆர்த்தி
ஜூலியானா
வெளியேற்றப்பட்டார்
(நாள் 7)
ஸ்ரீ காயத்ரி
சினேகன்
வெளிநடப்பு
(நாள் 4)
குறிப்பு 1 2 3, 4 5, 6, 7, 9 8, 10, 11, 12 13 13, 14 7, 15 16, 17, 18 19, 20 21 7, 22
மக்களின்
வாக்களிப்புக்கு விடப்பட்டவர்கள்
அனுயா
ஜூலியானா
ஸ்ரீ
பரணி
கஞ்சா
ஓவியா
ஆர்த்தி
ஜூலியானா
ஓவியா
வையாபுரி
கணேஷ்
நமீதா
ஓவியா
ஆரவ்
ஜூலியானா
ஓவியா
ரைசா
ஜூலியானா
ஓவியா
வையாபுரி
ஆரவ்
பிந்து
கணேஷ்
காயத்ரி
சக்தி
சினேகன்
வையாபுரி
காயத்ரி
ரைசா
ரைசா
சினேகன்
வையாபுரி
ஆரவ்
காஜல்
சினேகன்
பிந்து
கணேஷ்
ஹரீஷ்
சுஜா
ஆரவ்
ஹரீஷ்
சினேகன்
வையாபுரி
ஆரவ்
பிந்து
கணேஷ்
ஹரீஷ்
சுஜா
ஆரவ்
பிந்து
கணேஷ்
ஹரீஷ்
சினேகன்
வெளிநடப்பு ஸ்ரீ இல்லை ஓவியா இல்லை
நீக்கப்பட்டது இல்லை பரணி இல்லை
வெளியேற்றப்பட்டது அனுயா கஞ்சா ஆர்த்தி நமீதா வெளியேற்றம்
இல்லை
ஜூலியானா சக்தி காயத்ரி ரைசா காஜல் சுஜா வையாபுரி சுஜா பிந்து கணேஷ் ஹரீஷ்
சினேகன் ஆரவ்

குறிப்புகள் தொகு

     வீட்டின் தலைவரைக் குறிக்கிறது.
     வழக்கமான பரிந்துரைகள் இல்லாமல் ஹவுஸ்மேட் நேரடியாக பரிந்துரைக்கப்பட்டு வெளியேற்ற செயல்முறை தள்ளப்படபோவதைக் குறிக்கிறது.
     வெளியேற்ற பரிந்துரையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டடை குறிக்கிறது.
     வெளியேற்றப்பட்டவர் விருந்தினராக தற்காலிகமாக வந்ததைக் குறிக்கிறது.
     வீட்டுவாசி இகசிய அறைக்குச் சென்றதைக் குறிக்கிறது.
  • ^Note 1 : ஸ்ரீ அவரது உடல் நிலைமை காரணமாக பிக் பாஸ் வீட்டை விட்டுச் சென்றார்.[25]
  • ^Note 2 : பரணி சுவர் ஏறிக் குதித்து தப்பிக்க முயன்றதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து நீக்கப்பட்டார்.
  • ^Note 3 : ரைசா பிக் பாஸ் வீட்டில் வெளியேற்ற பரிந்துரைகளை பற்றி பேசு தடை இருந்தபோதிலும் 4-ம் வாரத்தில் அதை பற்றி பேசியதால் அதற்கு தண்டனையாக 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்கு நேரடியாக பரிந்துரைக்கப்பட்டார். இதன் விளைவாக, மற்ற ஹவுஸ்மேட் யாரும் 5-ம் வாரத்தில் வெளியேற்றப்படுவதற்குகாக அவரை பரிந்துரைக்க முடியாது.[26]
  • ^Note 4 : வாரம் 5 இல் வெளியேற்றம் எதுவும் இல்லை, ஆனால் இது தெரியாமல் ஹவுஸ்மேட் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் தங்கள் சக ஹவுஸ்மேட்டை பரிந்துரை செய்தனர்.
  • ^Note 5 : ஆரவ் மற்றும் காயத்ரி ஒரு நாள் சின்ன பிக் பாஸ் பாத்திரத்தில் இருந்தனர் அப்போது அவர்களுக்கு வீட்டை விட்டு வெளியேற்றாமல் இருக்க ஒரு நபரையும் மற்றும் வெளியேற்ற ஒரு நபரையும் பரிந்துரைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது வெளியேற்றாமல் இருக்க ஸ்னேகன்னும் மற்றும் 5-ம் வாரத்தின் வெளியேற்ற பரிந்துரையில் வையாபுரியும் சின்ன பிக் பாஸ் ஆராவ் மற்றும் காயத்ரியால் தேர்ந்யெடுக்கப்பட்டனர்.[27]
  • ^Note 6 : புதிய ஹவுஸ்மேட் பிந்து மாதவிக்கு வாரம் 6 பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • ^Note 7 : 6, 10, 14 ஆகிய வாரங்களுக்கு வீட்டின் தலைவர் இல்லை.
  • ^Note 8 : வாரம் 6 இல் ஒரு தினசரி பணியில் தோல்வியடைந்தால், வெற்றி பெற்ற குழுவில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் வாரம் 7 க்கு வெளியேறுவதற்குகான பரிந்துரையில் ஆரவ்வை பரிந்துரைத்தனர்.[28]
  • ^Note 9 : ஆரவ்வின் காதல் விவகாரம் மற்றும் மற்ற ஹவுஸ்மேட்களால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஓவிய அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.[18]
  • ^Note 10 : ரைசா (மற்றும் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டார் ஆராவ்வை தவிர) அனைத்து ஹவுஸ்மேட்களும் வாரம் 7 க்கு வெளியேற்றப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்டனர், ஏனெனில் வெளியேற்றத்திற்கான பரிந்துரையில் அவர்கள் சரியான காரணங்களை வழங்கவில்லை, இதன் விளைவாக ரைசா வாரம் 7 க்கு ஹவுஸ் கேப்டன் ஆனார்.[29]
  • ^Note 11 : வையாபுரி வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து மற்ற ஹவுஸ்மேட் மூலம் காப்பாற்றப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டார்.[30]
  • ^Note 12 : பிக் பாஸ் வீட்டைப் பற்றி ஹவுஸ்மேட்கள் ஐந்து கேள்விகு பதிலளிக்க வேண்டிய ஒரு பணியில் காயத்ரி வெற்றி பெற்ற பிறகு, வாரம் 7 வெளியேற்றத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்.[31]
  • ^Note 13 : திய ஹவுஸ்மேட்டுகள், சுஜா, ஹரீஷ் & காஜல் வாரங்கள் 8 மற்றும் 9 ஆகியவற்றிற்கான பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • ^Note 14 : வாரம் 8 இல் ஒரு தினசரி பணியை வெற்றி பெற்றதுகாக, ஆரவ் வாரம் 9 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.[32]
  • ^Note 15 : வாரம் 9 இல் இருந்த ஆடம்பர பட்ஜெட் பணிகளான பரிந்துரைகள் சேஞ்சர்யில் (ஹவுஸ்மேட்களுக்கு இடையில் வாரம் 10 வெளியேற்றத்திற்கான பரிந்துரையை மாற்றுதல்) 10-ம் வாரத்துக்காண பரிந்துரையாக ஸ்னேகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[33]
  • ^Note 16 : மறு நுழைவு வாயிலாக வந்த, ஆர்த்தி & ஜூலியானா வாரங்கள் 10 க்கு பரிந்துரையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
  • ^Note 17 : வாரம் 11 வெளியேற்றத்திற்கான பரிந்துரைக்கப்பட்டு சனிக்கிழமை சமமான வாக்குகளை சினேகன் பெற்றிருந்தால், கணேஷ் வாரம் 8 இல் தினசரி பணியை வென்றதற்காக வழங்கப்பட்ட ஜோக்கர் கார்ட்டின் உதவியுடன் கணேஷ் சினேகனை வெளியேற்ற பரிந்துரையில் இருந்து காப்பாற்றினார். காப்பாற்றப்பட்ட சினேகன் பிறகு, வாரம் 11 வெளியேற்றத்திற்கு தனக்கு பதிலாக பிந்துவை பரிந்துரைத்தார்.[34]
  • ^Note 18 : சுஜா வழக்கமான வெளியேற்ற நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்டார், ஆனால் ஒரு திருப்பமாக அவர் வெளியேற்றப்படாமல் ஒரு இரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டார். மறுநாளான 78 ஆம் நாள் வீட்டுக்குள் மீண்டும் நுழைந்தார். அவர் திரும்பியதைத் தொடர்ந்து, அவர் வாரம் 12 வெளியேற்றத்திற்கான பரிந்துரையிலிருந்து விலக்கு பெற்றார், இருப்பினும் அவர் மற்ற குடும்ப உறுப்பினர்களை வெளியேற்றத்துக்கு பரிந்துரைக்கலாம்.
  • ^Note 19 : ஆராவ் வாரம் 12 இல் வீட்டின் தலைவராக இருந்தபோதிலும், அவர் இன்னும் வாரம் 12 வெளியேற்றத்திற்கு பரிந்துரைக்கப்படுவதற்கு தகுதியுடையவராக இருந்தார்.
  • ^Note 20 : சினேகன் வாரம் 12 இல் கோல்டன் டிக்கெட்டை வென்றார். இது அவரை இறுதிவாரம்வரை வெளியேற்றத்தில் இருந்து பாதுகாக்கும்.
  • ^Note 21 : சின்கன் கோல்டன் டிக்கெட்டை பெற்றதால் இறுதிப் போட்டியாளராக இருந்ததால், வீட்டின் தலைவராக வாரம் 13 இல் நியமிக்கப்பட்டார். மேலும் எஞ்சியிருந்த வீட்டுவாசிகள் வெளியேற்றப்படுவதற்கு தானே பரிந்துரைக்கு ஆளாயினர்.[35]
  • ^Note 22 : இறுதிப் போட்டியில் இருந்த அனைவரும் வாரத்தின் நடுவில் வெளியேற்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பிக் பாசில் வெற்றி பெற குறைந்த பட்ச பொது வாக்குகளை பெற்றதால், பிந்து வார இறுதியில் வெளியேற்றப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Kamal Haasan all set to host Tamil Big Boss". http://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece. 
  2. "கமல் தொகுத்து வழங்கும், விஜய் தொலைக்காட்சியின் ‘பிக் பாஸ்’". http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/86984-big-boss-reality-show-in-vijay-tv-anchor-by-kamal.html. 
  3. Bigg Boss Tamil- 28 August 2017, Episode 65 Update: On day 64,Julie and Harathi re-enter the house
  4. 4.0 4.1 Bigg Boss Tamil Week 10 update: Kajal evicted; 'Trigger' Sakthi makes surprise re-entry
  5. Bigg Boss Tamil – 7th September 2017, Episode 74 Update: On Day 73, Friends and families visit housemates
  6. Bigg Boss Tamil – 7th September 2017, Episode 75 Update: On Day 74, Snehan’s father and Ganesh’s wife visit the house
  7. Bigg Boss Tamil – 8th September 2017, Episode 76 Update: On Day 75, Bindu loses her chocolates!
  8. Bigg Boss Tamil – 9th September 2017, Episode 77 Update: On Day 76, Vishnu and Catherine visit Bigg Boss house
  9. Bigg Boss Tamil – 17th September 2017, Episode 85 Update: On Day 84, Snehan wins ticket to finale, Vaiyapuri eliminated!
  10. Bigg Boss Tamil – 25th September 2017, Episode 93 update: On day 92, Actress Anjali visits the final five of the Bigg Boss house
  11. "Bigg Boss Tamil episode 5: Snehan, Oviya engage in verbal duel, Shree leaves the show" (in en-US). The Indian Express. 2017-06-30. http://indianexpress.com/article/entertainment/tamil/bigg-boss-tamil-4-snehan-oviya-engage-in-verbal-duel-shree-leaves-the-show-4729574/. 
  12. "Bigg Boss Tamil episode episode 8: Anuya gets evicted, Kamal Haasan asks contestants to keep it real" (in en-US). The Indian Express. 2017-07-03. http://indianexpress.com/article/entertainment/tamil/bigg-boss-tamil-episode-8-anuya-gets-evicted-kamal-haasan-asks-contestants-to-keep-it-real-4733352/. 
  13. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/bigg-boss-tamil-9th-july-2017-episode-15-update-on-day-14-ganja-karuppu-gets-evicted/articleshow/59527172.cms
  14. [1]
  15. Bigg Boss Tamil: Harathi Ganesh eliminated from Kamal Hassan's show
  16. Bigg Boss Tamil: Namitha eliminated from Kamal Haasan's show
  17. Bigg Boss Tamil Week 5: Gayathri and Oviya settle differences; Snehan elected leader again
  18. 18.0 18.1 Bigg Boss Tamil: Tamil Nadu’s darling Oviya walks out of the show, leaves her Army heartbroken
  19. Bigg Boss Tamil: After Oviya, THIS contestant leaves Kamal Haasan Show
  20. Bigg Boss Tamil: Shakti evicted and much like Oviya, Vaiyapuri too wants to quit
  21. Bigg Boss Tamil Week 8: Gayathri evicted; Harish Kalyan and Kaajal Pasupathi make wild card entry
  22. Bigg Boss Tamil – 10th September 2017, Episode 78 Update: On Day 77, Suja is kept in a secret room!
  23. Bigg Boss Tamil – 11th September 2017, Episode 79 Update: On Day 78, Housemates fight for ticket to finale!
  24. Bigg Boss Tamil week 13 updates: Suja Varunee evicted; Kamal Haasan announces mid-week elimination
  25. Bigg Boss Tamil episode 7 summary: Kamal Haasan discusses about the week gone by with Snehan, Juliana, Ganja Karupu and Bharani
  26. Bigg Boss Tamil week 4: Oviya's popularity grows, Namitha battles elimination
  27. Bigg Boss Tamil - 27th July 2017, Episode 33 Update: On Day 32, Bigg Boss selects Junior Bigg Boss
  28. Bigg Boss Tamil Day 40: Oviya Asked to Pack Bags in Episode 41
  29. Bigg Boss Tamil - 7th August 2017, Episode 44 Update: On Day 43, Except Raiza, everyone gets nominated!
  30. Bigg Boss Tamil - 10th August 2017, Episode 47 Update: On Day 46, rift between Gayathri and Raiza!
  31. Bigg Boss Tamil - 11th August 2017, Episode 48 Update: On Day 47, Gayathri saved from elimination!
  32. Bigg Boss Tamil Episode 54: Inmates Get Busy With a New Task
  33. Bigg Boss Tamil - 24 August 2017, Episode 61 Update: On Day 60, tasks get exciting!
  34. Bigg Boss Tamil: Ganesh, Suja, Harish, Bindu - THIS contestant to get ELIMINATED tonight from Kamal Haasan's show
  35. Bigg Boss Tamil – 18th September 2017, Episode 86 Update: On Day 85, Suja gets upset with Snehan's game!

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்_1&oldid=3831064" இலிருந்து மீள்விக்கப்பட்டது