கலகலப்பு (2012 திரைப்படம்)

கலகலப்பு (About this soundஒலிப்பு ) என்பது சுந்தர் சி இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதில் விமல், சிவா, ஓவியா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். கலகலப்பு, இயக்குனராக சுந்தர் சி யின் திரைப்பட வாழ்க்கையில் 25 வது படம். இந்தத் திரைப்படம் முதலில் மசாலா கஃபே என்றழைக்கப்பட்டது ஆனால் பின்னர் கலகலப்பு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஜெர்மன் திரைப்படமான சோல் கிட்சென் என்ற திரைப்படத்தைத் தழுவி உருவானதாகக் கூறப்படுகிறது.

கலகலப்பு
இயக்கம்சுந்தர் சி
தயாரிப்புகுஷ்பூ
இசைவிஜய் எபினேசர்
நடிப்புவிமல்
சிவா
ஓவியா
ஒளிப்பதிவுசெந்தில்
கலையகம்அவினி சினிமேக்ஸ்
விநியோகம்யுடிவி மோஷன் பிக்சர்ஸ்[1]
வெளியீடுமே 11 2012[2]
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

நடிப்புதொகு

  • விமல் - சீனு
  • ஓவியா - மாயா
  • சிவா - ரகு
  • சந்தானம் - வெட்டுப்புலி
  • அஞ்சலி - மாதவி
  • ஜான் விஜய் - தர்மராஜன்
  • இளவரசு - அஞ்சுவட்டி அழகேசன்
  • பங்சு அருணாச்சலம் - மாணிக்கம்
  • மனோபாலா - மருதமுத்து
  • தளபதி தினேஷ் - திமிங்கலம்

ஒலிப்பதிவுதொகு

இந்த திரைப்படத்திற்கு இசை விஜய் எபினேசரால் அமைக்கப்பட்டது. இவர் இதற்கு முன்பு கண்டேன் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப் படத்தின் அனைத்து பாடல்களையும் பா. விஜய் எழுதியுள்ளார்.

கலகலப்பு (2012) ஒலித்தட்டு
ஒலித்தட்டு
ஒலிப்பதிவு2011
மொழிதமிழ்
இசைத் தயாரிப்பாளர்விஜய் எபினேசர்
பாடல் பட்டியல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏஞ்சலீனா"  கிரிஷ், டாக்டர் பர்ன் & மிலி நாயர்  
2. "இவளுங்க இம்ச தாங்க முடியல"  அமிதாப் நாராயண்  
3. "மசாலா காஃபே"  ராகுல் நம்பியார், ஷீபா ட்ரூமன் & ஸ்டீவெவாட்ஸ்  
4. "மொக்கமனுசா"  ஸ்டீவெவாட்ஸ், சுசித்ரா  
5. "உன்னைப்பற்றி உன்னிடமே"  தேவன், ப்ரசான்தினி  
6. "அவ திரும்பிப்பார்த்து"  கார்த்திக், அனிதா  

வெளி இனைப்புகள்தொகு

  1. "UTV joins hands with Sundar C & Khushboo Sundar". IndiaGlitz. 17 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Kalakalappu release date". Behindwoods. 24 April 2012 அன்று பார்க்கப்பட்டது.