கவுதமி வேம்புநாதன்
கௌதமி வேம்புநாதன் என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் 2010 இல் வெளிவந்த நகரம் மறுபக்கம் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை வேடத்தில் நடித்து புகழடைந்தார்.[1] ஸ்டைல் பாண்டியாக வருகின்ற வடிவேலுவின் வீட்டு முதலாளியாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் சுந்தர் சியும் கௌதமியும் சாடையில் பேசும் காட்சியில் 'இரண்டா மாமி' என வடிவேலு இவரைப் பார்த்து கேட்கும் கேள்வி பிரபலமாக இணையத்தில் வலம் வந்தது.
பிறப்பும் குடும்பமும்
தொகுதமிழ்நாட்டின் தஞ்சாவூரில் செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்தார்.
திரை வாழ்க்கை
தொகுகவுதமி ராஜீவ் பிரசாத் இயக்கிய அகல்யா என்ற தொலைக்காட்சி நாடகத்தில் அறிமுகமானார். இத்தொடரில் ஷியாம் கணேஷுடன் இணைந்து நடித்தார். ஜீ தமிழில் முரளியுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரில் எதிர் நாயகியாக நடித்து வருகிறார் .
திரைப்படங்களின் பட்டியல்
தொகு- ஸ்ரீ ராமானுஜர்,
- அமர,
- ஜம்புலிங்கம் 3டி,
- மருள் (குறும்படம்),
- மைனா குஞ்சு காணோம்,
- தந்தனை துறமில்லை,
- மாலினி 22 பாளையங்கோட்டை,
- விந்தை,
- ஆரம்பமே அட்டகாசம்
- கலகலப்பு
- நகரம்
ஆதாரங்கள்
தொகு- ↑ Correspondent, Vikatan. "சினிமா விமர்சனம் : நகரம் மறுபக்கம்". https://www.vikatan.com/.
{{cite web}}
: External link in
(help)|website=