பிக் பாஸ் என்பது இந்தியாவில் ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்தியாவில் இந்த நிகழ்ச்சியானது முதலில் கலர் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது நெதர்லாந்து நாட்டின் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செயல்பட்ட (பிக் பிரதர்) என்ற உண்மை நிகழ்வினை மாதிரியாகக் கொண்டு நடத்தபபடுகிற ஒரு நிகழ்ச்சியாகும். இது 13 ஆண்டுகளில் 13 பருவங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பிக்பாஸ் தற்போது மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது.

Bigg Boss
பிக் பாஸ்
வழங்கல்சல்மான் கான்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்10
அத்தியாயங்கள்100

இதே போன்ற பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியானது விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலகாசனின் தொகுப்புரையுடன் நடந்துவருகிறது.

கருத்து உருவாக்கம்

தொகு

ஜாக் டி மோல் உருவாக்கிய டச்சு பிக் பிரதர் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது இத்த பிப் பாஸ் நிகழ்ச்சி ஆகும். இது உண்மை நிகழ்வினை கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காகவே கட்டப்பட்ட ஒரு இல்லத்தில் இதன் உறுப்பினர்கள் வாழ்கின்றனர். இவர்கள் உலகின் பிற தொடர்புகளில் இருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு, அவர்களது தோழர்களில் இரண்டு பேரை ஒவ்வொருவரும் பரிந்துரைக்க வேண்டும். பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்படுபவர்கள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்வார்கள். இவற்றின் இறுதியில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இருப்பினும், பிப் பாஸ் ஆணையிட்டபடி இந்த செயல்முறைக்கு விதிவிலக்குகள் இருக்கும். பொது மக்கள் நிகழ்ச்சியில் தொடர விரும்பியவர்களுக்கு வாக்களிப்பர். இந்தியப் பதிப்பில் உள்ள விட்டு உறுப்பினர்கள் முக்கியமாக பொதுமக்களில் இருந்து தணிக்கை மூலம் தேர்வு செய்யப்படாத பிரபலமான நபராக இருக்கின்றனர். குடும்பத்தினர் பிப் பாஸ் என்று அறியப்படும் ஒரு மர்மமான நபரின் மேற்பார்வையில் உள்ளனர். அவரின் ஒரே பிரசன்னம் அவருடைய குரல் மூலம்தான்.[1]

இல்லம்

தொகு

ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு பிக் பாஸ் இல்லம் புதியதாக கட்டப்பட்டுகிறது. மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் லோனாவலாவின் சுற்றலா தளத்தில் இந்த வீடு முன்பு இருந்தது. ஆனால் ஐந்தாவது பருவத்திற்கான வீடு கர்ஜாட்டிலுள்ள என்டி படப்பிடிப்புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2][3] இந்த வீடு நல்ல அழகியலுடன் அமைக்கப்பட்டுள்ளது. வீடு அனைத்து வகையான நவீன வசதிகளைக் கொண்டதாக உள்ளது. ஆனால் ஒன்று அல்லது இரண்டு படுக்கையறைகள் மற்றம் நான்கு கழிப்பறை குளியல் அறைகள். ஒரு தோட்டம் மற்றம் நடைபயிற்சி பகுதி போன்றவை உள்ளன. பிப் பாஸ் வீட்டில் பல வசதிகள் உள்ளன என்றாலும். தொலைக்காட்சி இணைப்பு இல்லை. எந்த இணைய இணைப்பு, காடிகாரங்கள், பேனா அல்லது காகிதமும் கிடையாது.[1]

விதிமுறைகள்

தொகு

அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை என்றாலும், மிக முக்கியமானவை தெளிவாகக் காணப்படுகின்றன. இந்தியைத் தவிர வேறு எந்த மொழியிலும் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.. அனுமதிக்கப்படும் நேரம் தவிர எந்த நேரத்திலும் குடும்ப உறுப்பினர்கள் இல்ல வாளகத்தை விட்டு வெளியேற முடியாது. அவர்கள் யாருடனும் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்டவர்களின் பரிந்துரை குறித்து விவாதிக்கக் கூடாது.[4] யாரும் பகல் நேரத்தில் தூங்கக் கூடாது சில நேரங்களில் பிக்பாசால் சில வேலைகள் தரப்படும். விதிகளை மீறுபவர்கள் போட்டியிலிருந்து நேரடியாக வெளியேற்றப்படுவர்.

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Bigg Boss". Endemol. Archived from the original on 28 சூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 20 திசம்பர் 2010.
  2. "What the Bigg Boss house is going to be like this season". Rediff.com Movies. 30 September 2011. பார்க்கப்பட்ட நாள் 2014-09-03.
  3. "Shweta gets b'day suprise [sic] on Bigg Boss". MiD DAY. 5 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 2014-09-03.
  4. Malvika Nanda (9 அக்டோபர் 2010). "Lights or not, camera, action". Hindustan Times. Archived from the original on 30 November 2010. பார்க்கப்பட்ட நாள் 20 December 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்&oldid=3587564" இலிருந்து மீள்விக்கப்பட்டது