பிக் பாஸ் தமிழ்

பிக் பாஸ் தமிழ் என்பது 2017 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். இது நெதர்லாந் நாட்டால் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதுவரை ஒளிபரப்பான ஏழு பருவங்களையும் பிரபல நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார்.[1][2]

பிக் பாஸ் தமிழ்
வழங்கல்பருவம் 7 வரை கமல் ஹாசன், பருவம் 8 விஜய் சேதுபதி
குரல்நடிப்புநவீன் ஹால்டோராய்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்8
அத்தியாயங்கள்734 (20 அக்டோபர் 2024 நிலவரப்படி)
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஓட்டம்
  • 90 நிமிடங்கள் (பருவங்கள் 1 & 2 வார நாட்கள்)
  • 60 நிமிடங்கள் (பருவங்கள் 3 & 4 வார நாட்கள்)
  • 120 நிமிடங்கள் (பருவங்கள் 1 & 2 வார இறுதி நாட்கள்)
  • 90 நிமிடங்கள் (பருவங்கள் 3 & 4 வார இறுதி நாட்கள்)
தயாரிப்பு நிறுவனங்கள்எண்டெமால் இந்தியா
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்25 சூன் 2017 (2017-06-25) –
ஒளிபரப்பில்

இதன் நான்காவது பருவத்தை ஜூன் 2020 ஆம் ஆண்டில் தொடங்க திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக தாமதமாகி 4 அக்டோபர் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டது.[3] பின்னர் 5,6,7 பருவங்களை கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பருவம் 8ஐ பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

பருந்துப்பார்வை

தொகு

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி. இது ஜான் டி மோல் என்பவரால் உருவாக்கப்பட்டது. இது டச்சு மொழி பிக் பிரதர் வடிவத்தை முலமாகக் கொண்டது. இதில் போட்டியாளர்கள் ("ஹவுஸ்மேட்ஸ்" என்று அறியப்படுபவர்கள்) இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும். இறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.

வீடு

தொகு

இந்த வீடு அழகானதாக அமைக்கப்பட்டும், அனைத்து வகைகளிலும் நவீன வசதிகளைக் கொண்டதாகவும் உள்ளது, ஆனால் இரண்டு படுக்கையறைகள், நடுவீடு (வாழும் பகுதி), சமையலறை, சேமிப்பறை (ஸ்டோர் ரூம்), இரண்டு கழிப்பறை மற்றும் இரண்டு குளியல் அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வீடு அழகான அறைக்கலன்களைக் கொண்டும், வீட்டு வளாகத்தில் நீச்சல் குளம், ஒரு பூங்கா, உடற் பயிற்சி சாதனங்கள் போன்றவை உள்ளன. பிக் பாஸ் வீட்டு உறுப்பினர்களுடன் குரல் வழியில் பேச கம்யூன் அறை என்ற அறை உள்ளது, கம்யூன் அறைக்கு வீட்டில் இருப்பவர்களில் யாரை வேண்டுமானாலும் பிக்பாஸ் அழைத்து கலந்துரயாடுவார். வீட்டில் தொலைக்காட்சி, தொலைபேசி, இணைய இணைப்பு, பேனா, தாள், புத்தகம், செய்தித்தாள் போன்றவற்றிற்கு அனுமதி கிடையாது.

விதிகள்

தொகு

அனைத்து விதிகளும் பார்வையாளர்களிடம் கூறப்படவில்லை என்றாலும், மிக முக்கியமான விதிகள் தெளிவாக உள்ளன. பங்கேற்பாளர்கள் தமிழைத் தவிர வேறு மொழியில் பேசுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அனுமதிக்கப்படும்போது தவிர எந்த நேரத்திலும் இவர்கள் வீட்டு வளாகத்தை விட்டு வெளியேற முடியாது. பிக்பாசுடன் பேசிய விசயங்களில் அவர் யாருடனும் கலந்துரையாடக்கூடாது என்று கூறிய விசயங்களை யாருடனும் கலந்துரையாடக் கூடாது. பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. தங்களுக்கான உணவை தாங்களே சமைத்து உண்ணவேண்டும். வீட்டு சமையல், வீட்டை சுத்தப்படுத்துதல், கழிவறை, குளியலறை ஆகியவ வேலைகளை வீட்டிலிருப்பவர்கள் குழுவாக பிரிந்து செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு நுண்பேசி (மைக்ரோபோன்) வழங்கப்பட்டிருக்கும் அதை எப்பொதும் தங்கள் கழுத்தில் மாட்டி இருக்க வேண்டும். போட்டியின்போது போட்டியாளர்கள் ஒரே அறையில் போடப்பட்ட கட்டில்களிலில்தான் உறங்கவேண்டும். நீச்சல் குளத்தை ஒரு சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்துவேண்டும். ஏதாவது தீவிரமான சிக்கல் இருந்தால், போட்டியாளர் நேரடியாக வெளியேற்றப்படலாம்.

ஒளிபரப்பு

தொகு

பிக் பாஸ் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்படுகிறது. ஒவ்வொரு நாளின் அத்தியாயங்களும் முந்தைய நாளின் முக்கிய நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு சனி ஞாயிற்றுக்கிழமை அத்தியாயங்களில் அந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளரின் போட்டி குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

பருவங்கள் திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளிக்கிழமை சனிக்கிழமை ஞாயிறு
பருவம் 1 இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை
பருவம் 2 இரவு 9 மணி முதல் 10:30 மணி வரை
பருவம் 3 & பருவம் 4 இரவு 9:30 மணி முதல் 10:30 மணி வரை இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை
பருவம் 5 இரவு 10 மணி முதல் 11 மணி வரை இரவு 9:30 மணி முதல் 11 மணி வரை
பருவம் 6 & பருவம் 7 இரவு 09:30 மணி முதல் 10:30 மணி வரை இரவு 09:30 மணி முதல் 11:00 மணி வரை

நிகழ்ச்சியின் பருவங்கள்

தொகு
Seasonதொகுப்பாளர்போட்டியாளர்கள்நாட்கள்வெற்றியாளர்2வது வெற்றியாளர்பரிசு தொகைஅளவிட்டு புள்ளிEpisodesOriginally aired
First airedLast airedNetwork
1கமல் ஹாசன்1998ஆரவ்சினேகன்50 இலட்சம் (US$63,000)7.899சூன் 25, 2017 (2017-06-25)30 செப்டம்பர் 2017 (2017-09-30)விஜய் தொலைக்காட்சி
217105ரித்விகாஐஸ்வர்யா தத்தா8.2106சூன் 17, 2018 (2018-06-17)30 செப்டம்பர் 2018 (2018-09-30)
3முகென் ராவ்சாண்டி மாஸ்டர்8.8106சூன் 23, 2019 (2019-06-23)6 அக்டோபர் 2019 (2019-10-06)
4ஆரிபாலா105அக்டோபர் 4, 2020 (2020-10-04)17 சனவரி 2021 (2021-01-17)
518---105அக்டோபர் 3, 2021 (2021-10-03)16 சனவரி 2022 (2022-01-16)

போட்டியாளர்கள்

தொகு
Clique பருவம் 1 பருவம் 2 பருவம் 3 பருவம் 4
திரைப்பட

நடிகர்/நடிகை

அனுயா ஐஸ்வர்யா தத்தா பாத்திமா பாபு ஆரி
பரணி டேனியல் ஆன்னி போப் கஸ்தூரி
பிந்து மாதவி ஜனனி ரேஷ்மா பசுபுலேட்டி கேப்ரியெல்லா சார்ல்டன்
கணேஷ் வெங்கட்ராமன் மஹத் ராகவேந்திரா
ஹரீஷ் கல்யாண் மும்தாஜ் சாக்‌ஷி அகர்வால் ஜித்தன் ரமேஷ்
காஜல் பசுபதி பொன்னம்பலம்
நமிதா ரித்விகா சரவணன் ரம்யா பாண்டியன்
ஓவியா ஷரிக்
சக்தி வாசு விஜயலட்சுமி ஷெரின்
Sri யாஷிகா ஆனந்த் வனிதா விஜயகுமார் ரேகா
Suja Varunee
நகைச்சுவையாளர் ஆர்த்தி தாடி பாலாஜி ஜாங்கிரி மதுமிதா நிஷா
கஞ்சா கறுப்பு சென்றாயன்
வையாபுரி
நடன இயக்குநர் காயத்திரி ரகுராம் None சாண்டி None
வடிவழகர்/வடிவழகி ஆரவ் None மீரா மிதுன் பாலாஜி முருகதாஸ்
சம்யுக்தா கார்த்திக்
ரைசா வில்சன் தர்சன் தியாகராஜா சனம் ஷெட்டி
பொதுவானது மரியா ஜூலியானா நித்யா None None
பாடலாசிரியர் சினேகன் None None None
ரேடியோ ஜாக்கி None வைஷ்ணவி None None
குரல் பயிற்சியாளர் None அனந்த் வைத்தியநாதன் None None
பாடகர் None ரம்யா என்.எஸ்.கே. மோகன் வைத்தியா அஜீத் கலிக்
முகென் ராவ் வேல்முருகன்
தொலைக்காட்சி நடிகர் / நடிகை /
செய்தி வாசிப்பாளர் /
தொகுப்பாளர்
None மாமதி சாரி அபிராமி அனிதா சம்பத்
கவின் அர்ச்சனா சந்தோக்
லோஸ்லியா மரியனேசன் ரியோ ராஜ்
சிவானி நாராயணன்
திரைப்பட இயக்குநர் None None சேரன் None
தற்காப்பு கலைஞன் None None None சோமசேகர்
பிரபல சமையல் கலைஞர் None None None சுரேஷ் சக்ரவர்த்தி
வெற்றியாளர் ஆரவ் ரித்விகா முகென் ராவ் TBA
Runner-up சினேகன் ஐஸ்வர்யா தத்தா சாண்டி TBA

மேற்கோள்கள்

தொகு
  1. "Kamal Haasan all set to host Tamil Big Boss". http://www.thehindu.com/entertainment/movies/kamal-haasan-all-setto-host-tamil-big-boss/article18203914.ece. 
  2. "கமல் தொகுத்து வழங்கும், விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’". http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/86984-big-boss-reality-show-in-vijay-tv-anchor-by-kamal.html. 
  3. "Bigg Boss Tamil Season 4 - Coming Soon". YouTube. பார்க்கப்பட்ட நாள் 28 August 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பாஸ்_தமிழ்&oldid=4165531" இலிருந்து மீள்விக்கப்பட்டது