சரவணன் (நடிகர்)
சரவணன் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.[1] இவர் 1991 முதல் 1998 வரை முன்னணி நடிகராக இருந்தார்.
சரவணன் Saravanan | |
---|---|
பிறப்பு | சரவணன் 10 அக்டோபர் 1966 இந்தியா, சேலம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1991–1998 (முன்னணி நடிகர்) 2001–தற்பொதுவரை (துணை நடிகர்) |
பிள்ளைகள் | 1 |
குடும்பம் மற்றும் துவக்ககால வாழ்க்கை
தொகுசரவணன் சேலத்தில் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தார். மொத்தம் ஐந்து குழந்தைகளில் இவர் இரண்டாவது பிள்ளையாவார். இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளராவார். இவரது தாய் ஒரு செவிலியராவார். சரவணன் சேலம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] கவிதைகள் எழுதுவதில் ஆர்வமுள்ள இவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். பின்னர் சென்னை சென்று அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கல்வி பயின்றர். இவர் 1996 இல் சூரியசாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
தொழில்
தொகு1990 களில் சரவணன் தொடர்ச்சியாக முன்னணி வேடங்களில் நடித்தார், ஆனால் தசாப்தத்தின் பிற்பகுதியில் இவரது திரைப்பட வாழ்க்கை நின்றுபோனது.[3] இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் .
சிறிது காலத்திற்கு பிறகு அமீரின் பருத்திவீரன் படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக நடித்துத்து, விமர்சன ரீதியான பாராட்டையும் , தமிழில் சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார் . இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் பெற்றார்.[4][5] பருதிவீரனின் வெற்றிக்குப் பின்னர் வெங்கடேச பண்ணையாரின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சஞ்சய் ராமால் எடுக்கப்பட்ட வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான வீரமும் ஈரமும் படத்தில் நடிப்பது உள்ளிட்ட பல வாய்ப்புகளைப் பெற்றார்.[6]
அண்மையில் இவர் பிக் பாஸ் தமிழ் 3 இல் 6 வது போட்டியாளராக நுழைந்தார்.
திரைப்பட வரலாறு
தொகுஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | வைதேகி வந்தாச்சு | ||
1992 | பொண்டாட்டி ராஜ்ஜியம் | கிருஷ்ணன் | |
1992 | அபிராமி | சரவணன் | |
1993 | மாமியார் வீடு | அரவிந்த் | |
1993 | சூரியன் சந்திரன் | மருது | |
1993 | பெற்றெடுத்த பிள்ளை | குமார் | |
1993 | நல்லதே நடக்கும் | பிரகாஷ் | |
1993 | பார்வதி என்னை பாரடி | சிவா | |
1993 | அக்கரைச் சீமையிலே | பிரகாஷ் | |
1993 | முத்துபாண்டி | ||
1994 | வீட்டைப் பாரு நாட்டைப் பாரு | ||
1994 | செவத்த பொண்ணு | செல்லப்பா | |
1994 | தாய் மனசு | சின்ன மருது | |
1996 | திரும்பிப்பார் | வீரையன் | |
1996 | விஸ்வநாத் | விஸ்வநாத் | |
1997 | தம்பி துரை | ||
1998 | சந்தோசம் | இந்திரன் | |
1998 | பொன்மானைத் தேடி | சுந்தரம் | |
2001 | நந்தா | துரை | |
2003 | தாயுமானவன் | இயக்குநராகவும் | |
2007 | பருத்திவீரன் | செவ்வாழை | பிளிம்பேரின், சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு தேர்வு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுகளுக்கு தேர்வு |
2007 | வீரமும் ஈரமும் | சர்கர் ஐயா | |
2009 | அழகர் மலை | சிறப்புத் தோற்றம் | |
2009 | பிஞ்சு மனசு | துளசி | |
2010 | விலை | டிசிபி சண்முகவேல் | |
2011 | தம்பி வெட்டோத்தி சுந்தரம் | சாலை | |
2012 | ஆரஞ்ச் | தேவர் | மலையாளத் திரைப்படம் |
2013 | அலெக்ஸ் பாண்டியன் | பார்த்திபன் | |
2013 | கீறிபுள்ள | நாகா | |
2014 | அரண்மனை | அய்யனார் | |
2016 | மீனாட்சி காதலன் இளங்கோவன் | ஏ. சாமி | |
2016 | சௌகார்பேட்டை | சீனியர் | |
2016 | எனக்கு இன்னொரு பெயர் இருக்கு | "நைனா" தாஸ் | |
2017 | பண்டிகை | முனி | |
2018 | கடைக்குட்டி சிங்கம்
தாமரை மணாள செண்டையார் |
||
2018 | கோலமாவு கோகிலா | காவல் ஆய்வாளர் குரு | |
2019 | 100 | கணேஷ் |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | நிரல் / காட்சி | பங்கு | அலைவரிசை | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|---|
2019 | பிக் பாஸ் தமிழ் 3 | பங்கேற்பாளர் | விஜய் தொலைக்காட்சி | தமிழ் | ரியாலிட்டி டிவி தொடர் |
குறிப்புகள்
தொகு- ↑ "Saravanan is back with 'Vilai' | CineBuzz - Movies". ChennaiOnline. 2010-01-01. Retrieved 2012-07-11.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-04-25. Retrieved 2019-07-02.
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article1409292.ece
- ↑ "Saravanan bounces back in style - Tamil Movie News". IndiaGlitz. 2007-03-09. Archived from the original on 2007-03-11. Retrieved 2012-07-11.
- ↑ "Saravanan on a high - Tamil Movie News". IndiaGlitz. 2007-03-31. Archived from the original on 2007-04-06. Retrieved 2012-07-11.
- ↑ "Tamil movie news paruthi veeran surya ameer karthik saravanan venkatesa pannaiyar moolakkaraipannaiyar swathy,adisaya dhanya gnanavelrajan sivakumar amir tamil cinema Picture Gallery Images". Behindwoods.com. Retrieved 2012-07-11.