சந்தோசம் (1998 திரைப்படம்)

1998 திரைப்படம்

சந்தோசம் (santhosam) 1998 இல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். கார்த்திக் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் சரவணன் மற்றும் சுவலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த் பாபு, பிரகாஷ் ராஜ், ஆர். சுந்தரராஜ், தலைவாசல் விஜய் ஆகியோர் இணைந்தும் நடித்துள்ளனர். வே. வாபு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் 1998/ஏப்ரல்/03 ம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.[1]

சந்தோசம்
இயக்கம்கார்த்திக்
தயாரிப்புவே. வாபு
கதைஅகத்தியன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுராம்சிங்
படத்தொகுப்புஜி. கோபிநாத்
கலையகம்ஜானகி அம்மல் மூவிஸ்
வெளியீடுஏப்ரல் 3, 1998 (1998-04-03)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம்

தொகு

இந்திரன் (சரவணன்) வேலையற்ற இளைஞன். ஆனால் அவன் பட்டடப்பிப்பில் தங்கப்பதக்கம் வென்றிருந்தான். வருமானமும் அற்றிருந்தான். அவனுடைய துரதிஷ்டத்தினால் அவனுடன் நெருங்கி பழக பலரும் தயங்கினார்கள். ஆனால் பவானி (சுவலட்சுமி) மட்டும் அவனுடன் நல்ல நட்பை பேணிவந்தாள். இந்திரனின் கல்லூரி நண்பன் அரசியலில் ஓர் நல்ல வேலை பெற்றுத்தருவதாக உறுதியளித்தான். ஆனால் நேர்முக தேர்வில் அவனின் துரதிஷ்டம் பின்சென்றது. பிறகு பவானியின் உதவியால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனராக மாறுகிறான். வேலையின் போது கற்பிணி பெண் ஒருவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனையில் சேர்த்தமையால் அவரது தந்தை இந்திரனுக்கு நேர்மையான வேலை ஒன்றை பெற்று தருகிறார். பின்னர் இந்திரன் பவானியிடம் தனது காதலை சொல்ல பவானியும் இந்திரனை திருமணம் செய்ய சம்மதிக்கிறாள். இதன் பின்னர் அவனுடைய துரதிர்ஷ்டம் என்ன செய்கிறது என்பதுதான் மீதிக்கதை.

நடிகர்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். 1998 இல் இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகளை அகத்தியன் எழுதியுள்ளார்.

விளைவு

தொகு

இத்திரைப்படம் நல்ல வசூல் பெற்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Santhosham (1998) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10.
  2. G. Prasad (2008-03-08). "The Hindu : Back with a bang". hindu.com. Archived from the original on 2014-07-07. பார்க்கப்பட்ட நாள் 2014-07-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தோசம்_(1998_திரைப்படம்)&oldid=3923534" இலிருந்து மீள்விக்கப்பட்டது