தாய் மனசு

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தாய் மனசு (Thaai Manasu) 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சரவணன் , சுவர்ணா, பப்லு பிருத்விராஜ், கவுண்டமணி, காந்திமதி, விஜயகுமார், செந்தில், மனோரமா, அனுஜா, இடிச்சபுளி செல்வராசு, சக்ரவர்த்தி, குமரிமுத்து , கரிகாலன் மற்றும் பலர் நடித்த இப்படத்தை கஸ்தூரிராஜா இயக்கினார். ஜோதி ராஜா, பாலன் தயாரிப்பில், 2 டிசம்பர் 1994 அன்று இப்படம் வெளியானது.[1][2][3]

தாய் மனசு
இயக்கம்கஸ்தூரிராஜா
தயாரிப்புஜோதி ராஜா, பாலன்
இசைதேவா
நடிப்புசரவணன்
சுவர்ணா
பப்லு பிருத்விராஜ்
கவுண்டமணி
காந்திமதி
விஜயகுமார்
செந்தில்
மனோரமா
அனுஜா
இடிச்சபுளி செல்வராசு
சக்ரவர்த்தி
குமரிமுத்து
கரிகாலன்
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

கதைச்சுருக்கம்

தொகு

சின்ன மருது (சரவணன்) தன் தாய் முத்தமாவிற்கு (மனோரமா) பால் கொடுக்கும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது.

கடந்த காலத்தில்: கிராம தலைவரான தங்கபாண்டி (விஜயகுமார்) மஹாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றுபவர். அவரின் மனைவி முத்தம்மா ஆவார். இந்த தம்பதியருக்கு பெரிய மருது (ப்ரித்திவிராஜ்), சின்ன மருது என்று இரு மகன்கள் உள்ளனர். சின்ன மருது அன்னலட்சுமியை (சுவர்ணா) காதல் செய்ய, பெரிய மருது ராசாத்தியை (மீரா) காதல் செய்கிறான். இந்த இரு காதல் ஜோடிகளுக்கும் தங்கபாண்டியே திருமணம் செய்து வைக்கிறார்.

தங்கபாண்டி தலைவராக இருக்கும் கிராமத்தில் மட்டும், மக்கள் தேர்தலில் வாக்களிப்பதை புறக்கணிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். தங்கபாண்டிக்கு அரசியல் வாதிகளின் மேல் நம்பிக்கை இல்லாததால், அந்தப் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்தது. மக்கள் தொகை அதிகம் இருக்கும் கிராமம் என்பதால், அரசியல்வாதிகள் தங்கபாண்டியை வாக்களிக்க வலியுறுத்தினர். ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் சாராய வியாபாரி காங்கேயனுக்கு (கரிகாலன்) மக்களை வாக்களிக்க ஒப்புகொள்ளவைக்கும் வேலை வழங்கப்பட்டது. தங்கபாண்டியை கொல்ல ஆள் அனுப்பினான் காங்கேயன். ஆனால் சின்ன மருதுவும் பெரிய மருதுவும் தன் தந்தையை காப்பாற்றினர். அந்த முயற்சியில் தோல்வி அடைந்த காங்கேயன், பெரிய மருதுவை தன்வசப்படுத்தி, தங்கபாண்டி குடுப்பத்திற்கு எதிராக நடந்துகொள்ள வைத்தான். பின்னர், பெரிய மருது என்ன செய்தான்? மக்கள் வாக்களிக்க ஒப்புக்கொண்டனரா? காங்கேயனுக்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடைக் காணுதலே மீதிக் கதையாகும்.

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். படத்தில் உள்ள 4 பாடல்களையும் எழுதியவர் படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜா ஆவார்.

  1. ஊரோரம் கம்மாக்கரை (04:31) - எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
  2. தாய் மனசு தங்கம் (02:56) - மலேசியா வாசுதேவன்.
  3. தாய் மனசு தங்கம் (04:45) - மலேசியா வாசுதேவன்.
  4. தூதுவலை (04:30) - மனோ, எஸ்.ஜானகி

விமர்சனம்

தொகு

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் மாலினி, "சோகமான முரண்பாடு" என்று இப்படத்தை பற்றி விமர்சனம் செய்தார்.[4]

மேற்கோள்கள்

தொகு


  1. "spicyonion.com".
  2. "www.cinesouth.com". Archived from the original on 2004-12-22. பார்க்கப்பட்ட நாள் 2019-02-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "www.jointscene.com". Archived from the original on 2010-12-21. பார்க்கப்பட்ட நாள் 2019-02-02.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "தி இந்தியன் எக்ஸ்பிரஸ்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்_மனசு&oldid=3879123" இலிருந்து மீள்விக்கப்பட்டது