கடைக்குட்டி சிங்கம்

பாண்டிராஜ் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடைக்குட்டி சிங்கம் (Kadaikutty Singam), பாண்டிராஜ் இயக்கத்தில், 2டி என்டேர்டைன்மென்ட் சார்பில் சூர்யா தயாரிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். கார்த்திக், சாயிஷா, அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் டி. இமானின் இசையில் வேல்ராஜின் ஒளிப்பதிவில், உருவாகியுள்ளது.[2] இத்திரைப்படம் தெலுங்கில் சின்ன பாபு என்னும் பெயரில் வெளியாகியுள்ளது.[3] இத்திரைப்படமானது சூலை 13, 2018 அன்று வெளியானது.

கடைக்குட்டி சிங்கம்
சுவரொட்டி
இயக்கம்பாண்டிராஜ்
தயாரிப்புசூர்யா
கதைபாண்டிராஜ்
இசைடி. இமான்
நடிப்புகார்த்திக்
சாயிஷா
அர்த்தனா பினு
ஒளிப்பதிவுவேல்ராஜ்
வெளியீடுசூலை 13, 2018 (2018-07-13)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிப்பு

தொகு

படப்பணிகள்

தொகு

கார்த்திக் முன்னணிப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா 2017இல் இயக்குநர் பாண்டிராஜூடன் இத்திரைப்படத்திற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டனர்.[4] நவம்பர் 9, 2017இல் சென்னையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன் தொடங்கியது.[5] 2018 இன் தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் தென்காசிக்குச் சென்றனர்.[6] தியாகராய நகரிலுள்ள நடிகை மனோராமாவின் இல்லத்தில் இப்படத்திற்காக சில காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.[7]

சான்றுகள்

தொகு
  1. http://www.puthiyathalaimurai.com/news/cinema/40678-kadaikutty-singam-movie-karthi-photo-gallery.html
  2. http://cinema.dinamalar.com/tamil-news/66064/cinema/Kollywood/Hydro-corbon-issue-in-Kadakutty-Singam.htm
  3. "தெலுங்கில் மாஸ் ஓபனிங் கொடுத்து, தெலுங்கு நடிகர்களையே கதிகலங்க வைத்த கார்த்தி!!". தமிழ் சமயம்
  4. http://www.sify.com/movies/suriya-to-produce-karthi-is-the-hero-news-tamil-rgkl4kgabciih.html
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2018-02-27.
  6. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/arthanas-next-in-kollywood-is-with-karthi-and-pandiraj/articleshow/62366569.cms
  7. https://tamil.filmibeat.com/news/kadaikkutty-singam-shoot-aachi-manorama-s-home/articlecontent-pf73207-052021.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடைக்குட்டி_சிங்கம்&oldid=3685686" இலிருந்து மீள்விக்கப்பட்டது