சாயிஷா
சாயிஷா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் தமிழ் படங்களில் தோன்றி, இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.[1][2] தெலுங்கு படமான அகில் (2015) படத்தில் நடித்த பிறகு, அஜய் தேவ்கானின் சிவாய் (2016) படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார்.[3][4] பிறகு வனமகன் (2017) படத்தில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சாயிஷா | |
---|---|
இந்தோரில் சிவாய் படத்தின் முன்னோட்ட அறிமுக விழாவில் சாயிஷா. | |
பிறப்பு | 12 ஆகத்து 1997 மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2015-தற்பொழுது வரை |
வாழ்க்கைத் துணை | ஆர்யா (தி. 2019) |
சொந்த வாழ்க்கை
தொகுநடிகர்களான சுமேத் சைகால் மற்றும் ஷாஹீன் பானு ஆகியோரின் மகள் இவர். இவர் நடிகர்களான சைரா பானு [5] மற்றும் திலிப் குமார் ஆகியோரின் பேத்தி முறை அதாவது இவரது அம்மாவின் (ஷாஹீன் பானு) அப்பா சைரா பானுவின் சகோதரர் .[6] 13 பிப்ரவரி 2019 அன்று சாயிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கும் ஆர்யாவிற்கும் மார்ச் மாதத்தில் திருமணம் என்று அறிவித்தார்.[7] இவர்களது திருமண விழா ஐதராபாத்தில் 8 மார்ச்சு 2019 இல் தொடங்கியது. இந்தி மற்றும் தமிழ்த் திரைப்படத்தை சேர்ந்த பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.[8][9]
தொழில்
தொகுதெலுங்கு திரைப்படமான அகில் (2015) திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் அறிமுகமானார் சாயிஷா. இரண்டாவது படமாக அஜய் தேவ்கானின் சிவாய் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.[10] அவரது திரைப்படமான வனமகன் ஜூன் மாதம் 2017 இல் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில்இவர் அறிமுகமானார்.[11][12][13] 2018 இல், கார்த்தியுடன் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம், விஜய் சேதுபதியுடன் ஜுங்கா, மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது காப்பான் என்ற படத்தில் சூர்யாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். .
திரைப்பட வரலாறு
தொகுஇன்னும் வெளியிடப்படாத படங்கள் குறிப்பிடுகின்றன |
ஆண்டு | தலைப்பு | பங்கு | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
2015 | அகில் | திவ்யா | தெலுங்கு | தெலுங்கு படம் |
2016 | சிவாய் | அனுஷ்கா | இந்தி | இந்தி ஹிந்தி படம் |
2017 | வனமகன் | காவியா | தமிழ் | அறிமுகமான தமிழ் படம் |
2018 | கடைக்குட்டி சிங்கம் | இனியா | ||
2018 | ஜுங்கா | யாழினி | ||
2018 | கஜினிகாந்த் | வந்தனா | ||
2019 | காப்பான் | அஞ்சலி | ||
2019 | யுவரத்தினா | அறிவிக்கப்படும் | கன்னடம் | கன்னடம் திரைப்படம்; படப்பிடிப்பு |
குறிப்புகள்
தொகு- ↑ "About Sayyeshaa". www.sayyeshaa.com (in ஆங்கிலம்). Archived from the original on 12 ஏப்பிரல் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2017.
- ↑ "I Didn't Get This Film For My Family Connections". mumbaimirror.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 June 2018.
- ↑ "Sayyeshaa goes on learning spree with Ajay Devgn starrer Shivaay". indianexpress.com. 30 மே 2016. Archived from the original on 12 சூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2018.
- ↑ "Ajay Devgn's discovery Sayyeshaa is turning heads - Times of India". Archived from the original on 27 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
- ↑ "SHIVAAY' ACTRESS SAYYESHAA IS THE GRAND NIECE OF SAIRA BANU". filmydost.in. Archived from the original on 9 ஜூலை 2018. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Saira Banu's grand niece Sayyeshaa Saigal All Set For Telugu Debut". www.news18.com. பார்க்கப்பட்ட நாள் 11 February 2015.
- ↑ "சாயிஷா ஆர்யா திருமண அறிவிப்பு". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Shruti Shiksha (9 மார்ச் 2019). "Inside Actors Sayyeshaa Saigal And Arya's Pre-Wedding Festivities With Sanjay Dutt And Other Stars". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Arya and Sayyeshaa wedding bash inside pics and videos: Shivaay actress sets the dance floor on fire". India today. 9 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "Sayyeshaa to debut in Ajay Devgn's Shivay". 24 அக்டோபர் 2014. Archived from the original on 19 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 நவம்பர் 2015.
- ↑ "Sayyeshaa upbeat about Vanamagan" (in en). www.deccanchronicle.com/. 2017-06-18 இம் மூலத்தில் இருந்து 19 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170619113116/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/180617/sayyeshaa-upbeat-about-vanamagan.html.
- ↑ "Vanamagan release postponed due to Kollywood strike" (in en-US). Top 10 Cinema. 2017-05-10 இம் மூலத்தில் இருந்து 21 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170821085015/https://www.top10cinema.com/article/42463/vanamagan-release-postponed-due-to-kollywood-strike.
- ↑ "Vanamagan Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers - Filmibeat". FilmiBeat. Archived from the original on 24 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2017.