கேப்ரியெல்லா சார்ல்டன்

நடிகை

கேப்ரியெல்லா நடாலி சார்ல்டன் (Gabriella Natalie Charlton[1]) என்பவர் தமிழ் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றிய முன்னாள் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஒரு நடன நிகழ்ச்சியில் முதல் முறையாக தோன்றினார். ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 இல் வெற்றியாளராக ஆனார்.

கேப்ரியெல்லா
பிறப்பு2000
செயற்பாட்டுக்
காலம்
2012–தற்போதுவரை

தொழில்

தொகு

தொலைக்காட்சி வாழ்க்கை

தொகு

கேப்ரியெல்லா தனது ஒன்பதாவது வயதில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டார். [2] இந்த நிகழச்சியில் வெற்றியாளர் பட்டத்தை வென்ற பிறகு திரைத்துறையில் வாய்ப்புகளை பெற்றார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் இவர் தோன்றினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜோடி நம்பர் ஒன், பருவம் 6 என்ற ஒரு நடன ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் தோன்றினார். ஜோடி நம்பர் ஒன்னின் ஆறாவது பருவத்தில் வென்றார். [3]

திரைப்பட வாழ்க்கை

தொகு

கேப்ரியெல்லா காதல் - உளவியல் த்ரில்லர் தமிழ்த் திரைப்படமான 3 படத்தில், ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற வேடத்தில் நடித்தார். [4]

திரைப்படவியல்

தொகு
  • குறிப்புகள் இல்லாத, எல்லா படங்களும் தமிழ்ப் படங்காளாகும்.
ஆண்டு படம் பாத்திரம் Ref.
2012 3 சுமி [2]
2013 சென்னைல் ஓரு நாள் ரியா [4]
2016 அப்பா ரஷிதா பானு

தொலைக்காட்சி

தொகு
ஆண்டு தொடர் / காட்சிகள் பாத்திரம் அலைவரிசை குறிப்புகள் Ref.
2009 ஜோடி நம்பர் ஒன் ஜூனியர்ஸ் பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி வெற்றியாளர் [4]
2012 - 13 7 சி காபி விஜய் தொலைக்காட்சி [2]
2013 ஜோடி நம்பர் ஒன் பருவம் 6 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி வெற்றியாளர்
2020 பிக் பாஸ் தமிழ் 4 பங்கேற்பாளர் விஜய் தொலைக்காட்சி [5]

குறிப்புகள்

தொகு
  1. "All you want to know about Gabriella Charlton". பார்க்கப்பட்ட நாள் 2016-07-17.
  2. 2.0 2.1 2.2 "விஜய் டிவி ஜூனியர்ஸ் எல்லோரும் இப்ப சீனியர்ஸ்.. இவங்க யார் தெரியுதா?". 19 August 2020.
  3. Lakshmi, K.; Hamid, Zubeda (30 March 2014). "Reality shows change lives" – via www.thehindu.com.
  4. 4.0 4.1 4.2 Kumayaa, Harshitha D. (12 May 2016). "Gabriella's going places" – via www.thehindu.com.
  5. "Bigg Boss Tamil Season 4: Check out the list of contestants". The New Indian Express.

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேப்ரியெல்லா_சார்ல்டன்&oldid=3773013" இலிருந்து மீள்விக்கப்பட்டது