சென்னையில் ஒரு நாள் (திரைப்படம்)
2013 தமிழ்த் திரைப்படம்
சென்னையில் ஒரு நாள் 2013ஆம் ஆண்டில் சகீத் காதர் இயக்கத்தில் உடன்பிறப்புக்களான பாபியும் சஞ்சயும் எழுதிய தமிழ் திகில் படமாகும். 2011ம் ஆண்டின் மலையாளத் திரைப்படமான டிராபிக்கின் மறுபதிப்பான இதனை இராதிகா சரத்குமாரும் லிஸ்டின் ஸ்டீபனும் தயாரித்து சன் படங்கள் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் திரைக்கதை மீயுரை வடிவத்தில் அமைந்துள்ளது. ஒரு நிகழ்வை ஒட்டி பல கதைகள் பிணையப்பட்டுள்ளன. சென்னையில் நிகழ்ந்த ஓர் உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு கதை புனையப்பட்டுள்ளது.[1] இதற்கு முன்னதாக நான்கு வழிச் சாலை எனப் பெயரிடப்பட்டிருந்தது.[2] இத்திரைப்படம் மார்ச்சு 29, 2013 அன்று வெளியானது.[3]
சென்னையில் ஒரு நாள் | |
---|---|
![]() | |
இயக்கம் | ஷஹீத் காதர் |
தயாரிப்பு | ராதிகா சரத்குமார் லிஸ்டின் ஸ்டீபன் |
திரைக்கதை | பாபி-சஞ்சய் அஜயன் பாலா |
இசை | மேஜொ ஜோசஃப் |
நடிப்பு | சரத்குமார் பிரகாஷ் ராஜ் சேரன் பிரசன்னா ராதிகா சரத்குமார் பார்வதி மேனன் இனியா |
ஒளிப்பதிவு | செஹ்னாத் ஜலால் |
படத்தொகுப்பு | மகேசு நாராயணன் |
கலையகம் | ஐ பிக்சர்சு மாஜிக் பிரேம்சு |
விநியோகம் | சன் படங்கள் |
வெளியீடு | மார்ச்சு 29, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாத்திரப் படைப்புதொகு
- சரத்குமார் - சௌந்தர பாண்டியன், சென்னை மாநகர போக்குவரத்து ஆணையராக
- பிரகாஷ் ராஜ் - கௌதம் கிருஷ்ணா, திரைப்பட நடிகர்.
- சேரன் - சத்தியமூர்த்தி, போக்குவரத்துத்துறை காவலர்.
- பிரசன்னா - மருத்துவர் இராபின்.
- ராதிகா சரத்குமார் - கௌதமின் மனைவி.
- பார்வதி மேனன் -அதிதி
- இனியா - ஸ்வேதா
- மித்துன் - அஜ்மல்
- சச்சின் - கார்த்திக்
- ஐசுவர்யா தேவன்
- வைசாலி
- காப்ரீயல்லா சார்ல்டன் - ரியா
- ஜெயபிரகாஷ்
- லட்சுமி இராமகிருஷ்ணன்
- சுப்பு பஞ்சு அருணாசலம் - முருகன், கௌதமின் செயலாளர்.
- மல்லிகா - சத்தியமூர்த்தியின் மனைவி.
- மனோபாலா
- சந்தான பாரதி
- சூர்யா - கௌரவ வேடத்தில்
மேற்சான்றுகள்தொகு
- ↑ "Traffic Movie Review".
- ↑ "Etcetera: Stellar line-up". The Hindu. 15 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://m.ibnlive.com/news/tamil-review-chennaiyil-oru-naal-is-an-out-an-out-racy-thriller/382032-71-180.html