அப்பா (திரைப்படம்)
சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அப்பா (Appa) என்பது 2016 இல் வெளியான இந்தியத் தமிழ் சுதந்திரத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கினார். இது சாட்டை (2012) திரைப்படத்தின் ஒரு தொடர்ச்சியாக வெளிவந்தது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதைப்பாத்திரத்திலும், தம்பி ராமையா துணை கதைப்பாத்திரத்திலும் நடித்தனர். இந்த திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இதன் தயாரிப்புப் பணிகள் 2015இல் ஆரம்பமாகி, 2016இல் திரைப்படம் வெளியிடப்பட்டது.[1][2]
அப்பா | |
---|---|
இயக்கம் | சமுத்திரக்கனி |
தயாரிப்பு | சமுத்திரக்கனி |
கதை | சமுத்திரக்கனி |
மூலக்கதை | கதாப்பாத்திரங்கள் படைத்தவர் அன்பழகன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சமுத்திரக்கனி தம்பி ராமையா நமோ நாராயணா |
ஒளிப்பதிவு | எம். நாதன் |
படத்தொகுப்பு | ஏ. எல். ரமேஷ் |
கலையகம் | நாடோடிகள் புரொடக்சன் |
விநியோகம் | எட்செட்ரா எண்டெர்டெயின்மெண்ட் |
வெளியீடு | சூலை 1, 2016 |
ஓட்டம் | 122 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகு- சமுத்திரக்கனி - தயாளன்
- தம்பி ராமையா - சிங்கப்பெருமாள்
- நமோ நாராயணா - நடுநிலயன்
- வினோதினி - சிங்கப்பெருமாளின் மனைவி
- ஜே. விக்னேஷ் - வெற்றி ஈஸ்வரன்
- ராகவ் - சக்கரவர்த்தி
- நசாத் - மயில்வாகனம்
- கப்ரிஎல்லோ சார்ல்டன் - சஜிதா பானு
- யுவா லக்ஸ்மி - நீலநந்தினி
- சசிகுமார் (இயக்குநர்) - டாக்டர் குமரன் (சிறப்புத் தோற்றம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ "Samuthirakani is a producer with 'Saattai 2'". TamilPlex.com. Archived from the original on 2016-08-06. பார்க்கப்பட்ட நாள் 2016-08-03.
- ↑ "Samuthirakani's Life Becomes A Story!". nettv4u.