ஆரி (நடிகர்)
இந்திய நடிகர்
ஆரி என்று அழைக்கப்படும் ஆரி அர்ஜுனா என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் வெளியான ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து நெடுஞ்சாலை (2014), மாயா (2015) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
ஆரி அர்ஜுனா | |
---|---|
பிறப்பு | ஆரி பெப்ரவரி 12, 1986 பழனி, திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
பணி | நடிகர், உடல் பயிற்சியாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2010 – தற்போதும் |
வாழ்க்கைத் துணை | நதியா (2015 - தற்போதும்) |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான நதியாவை காதலித்து வந்தார். இருவரும் நவம்பர் 18, 2015 அன்று சென்னையின் பாரிஸில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் மணம் முடித்தார். நிச்சயதார்த்தமும் வரவேற்பும் 17 நவம்பர் 2015 அன்று தாஜ் கொன்னேமராவில் நடைபெற்றது. இவர்களுக்கு பிப்ரவரி 5, 2017 அன்று முதல் குழந்தையை பிறந்தது.[2]
திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2005 | ஆடும் கூத்து | முத்து | |
2010 | ரெட்டச்சுழி | மூர்த்தி | |
2012 | மாலைப்பொழுதின் மயக்கத்திலே | அஜய் | |
2014 | நெடுஞ்சாலை | முருகன் | |
2015 | தரணி | சேகர் | |
மாயா | வசந்த்/அர்ஜுன் | ||
2016 | உன்னோடு கா | சிவா | |
2017 | முப்பரிமாணம் | சிறப்பு தோற்றம் | |
2018 | நாகேஷ் திரையரங்கம் | நாகேஷ் | |
2020 | எல்லாம் மேல இருக்குறவரன் பாத்துப்பான | தயாரிப்பில் | |
மௌனவலை | |||
அலேக்கா |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | நிகழ்ச்சி | கதாப்பாத்திரம் | அலைவரிசை | குறிப்புகள் |
---|---|---|---|---|
2020 - ஒளிபரப்பில் | பிக் பாஸ் தமிழ் 4 | போட்டியாளராக | விஜய் தொலைக்காட்சி | *வெற்றியாளர் |
பெற்ற விருதுகள்
தொகுஆண்டு | திரைப்படம் | பெற்ற விருது | குறிப்புகள் |
---|---|---|---|
2015 | நெடுஞ்சாலை | வி4 விருதுகள் | சிறந்த நடிகர் |
2014 | திரைப்பட ரசிகர்கள் கூட்டமைப்பின் 62ஆவது ஆண்டு விருது | சிறந்த நடிகர் |