திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
India Tamil Nadu districts Dindigul.svg
திண்டுக்கல் மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம் திண்டுக்கல்
மிகப்பெரிய நகரம் திண்டுக்கல்
ஆட்சியர்
M Vijaya Lakshmi I.A.S
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ஏ. சரவணன் [1]
ஆக்கப்பட்ட நாள் 15.09.1985
பரப்பளவு 6266.64 கி.மீ² (303வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
19,23,014 (208வது)
317/கி.மீ²
வட்டங்கள் 9
ஊராட்சி ஒன்றியங்கள் 14
நகராட்சிகள் 3
பேரூராட்சிகள் 23
ஊராட்சிகள் 306
வருவாய் கோட்டங்கள் 3

திண்டுக்கல் மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் திண்டுக்கல் ஆகும். இம்மாவட்டம் பூட்டு மற்று தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு பெயர் பெற்றது.

வரலாறுதொகு

திண்டுக்கல் மாவட்டத்தில், பழனி, ஒட்டஞ்சத்திரம் ஆகிய வட்டங்கள் கொங்கு நாட்டையும், திண்டுக்கல், கொடைக்கானல், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் வட்டங்கள் பாண்டிய நாட்டையும் சேர்ந்தன. 1985 ஆம் ஆண்டில் மதுரை மாவட்டத்திலிருந்து, திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பலகாலம் மதுரை மாவட்டத்துடன் இணைந்திருந்தது. இதனால் மதுரை மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கும் பொருந்தும். திண்டுக்கல் தொன்று தொட்டு சேரர் மற்றும் பாண்டியர் ஆட்சியில் இருந்து வந்தது. குறிப்பாக விஜய நகர ஆட்சியில்தான் ஏற்றம் பெற்றது. வெவ்வேறு ஆட்சிகளில், படிப்படியாக இவ்வூர் சிறந்த ராணுவத்தளமாக முன்னேறியது. நாயக்க மன்னர்கள், ஆர்க்காட்டு நவாபுகள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆகியோரால் இங்குள்ள கோட்டை பலவாறாகப் பலப்படுத்தப்பட்டது. இக்கோட்டையை வெற்றி கொள்ள, இவர்கள் ஒவ்வொருவரும் மாறிமாறிப் போரிட்டதை வரலாற்றால் அறிகிறோம். பாண்டிய நாட்டை அதன் பல இன்னல்கள் இடையூறுகளிலிருந்து தடுத்துக் காப்பாற்றியது திண்டுக்கல். திண்டுக்கலில் உள்ள ஹைதர் அலியால் கட்டப்பட்ட கோட்டை[சான்று தேவை] குறிப்பிடத்தக்க ஒன்று

எல்லைகள்தொகு

வடக்கில் திருப்பூர், கரூர் மாவட்டங்களும், கிழக்கில் திருச்சிராப்பள்ளி மாவட்டமும், தெற்கு-தென்கிழக்கில் மதுரை, தென்மேற்கில் தேனி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 19,23,014 மக்கள் வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திண்டுக்கல் மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இம்மாவட்ட மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மாவட்ட நிர்வாகம்தொகு

இம்மாவட்டம் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களாகவும், 9 வருவாய் வட்டங்களாகவும்[3] மற்றும் 361 வருவாய் கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

வருவாய் வட்டங்கள்தொகு

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்தொகு

உள்ளாட்சி அமைப்புகள்தொகு

இம்மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி[5] மற்றும் பழனி [6], ஒட்டன்சத்திரம்[7] & கொடைக்கானல்[8] என 3 நகராட்சிகளும் மற்றும் 23 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது.[9]

ஊராட்சி அமைப்புகள்தொகு

இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.[10] கொண்டது. அவைகள்;

 1. திண்டுக்கல்
 2. நத்தம்
 3. ஆத்தூர்
 4. வத்தலகுண்டு
 5. குஜிலியம்பாறை
 6. ஒட்டன்சத்திரம்
 7. பழனி
 8. கொடைக்கானல்
 9. ரெட்டியார்சத்திரம்
 10. சானார்பட்டி
 11. நிலக்கோட்டை
 12. தொப்பம்பட்டி
 13. வடமதுரை
 14. வேடசந்தூர்

அரசியல்தொகு

இம்மாவட்டம் திண்டுக்கல் மக்களவைத் தொகுதி மற்றும் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[11]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

 1. திண்டுக்கல்
 2. பழநி
 3. ஒட்டன்சத்திரம்
 4. ஆத்தூர்
 5. நிலக்கோட்டை
 6. நத்தம்
 7. வேடசந்தூர்

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைதொகு

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒட்டன்சத்திரம் ஆகும். தமிழ்நாட்டிலேயே கோயம்பேடுக்கு அடுத்ததாக கருதப்படும் மிக பெரிய காய்கறி சந்தை இங்கு அமைந்துள்ளது. இந்த பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுமேயாகும். இந்த சந்தை பகுதியில் இருந்து கேரளா, கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பபடுகின்றன.

ஆன்மிக & சுற்றுலாத் தலங்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

 1. தினமணி செய்தி 7 மாவட்டங்களுக்கு புதிய காவல்துறைக் கண்காணிப்பாளர்கள்
 2. 2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு
 3. Revenue Division and Taluks of Dindigul District
 4. திண்டுக்கல் மாவட்ட வருவாய் கிராமங்கள்
 5. திண்டுக்கல் மாநகராட்சி
 6. பழனி நகராட்சி
 7. ஒட்டன்சத்திரம் நகராட்சி
 8. கொடைக்கானல் நகராட்சி
 9. Local Bodies of Dindigul District
 10. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்
 11. Assembly Constituencies & Parliamentary Constituency

வெளி இணைப்புகள்தொகு





"https://ta.wikipedia.org/w/index.php?title=திண்டுக்கல்_மாவட்டம்&oldid=2790719" இருந்து மீள்விக்கப்பட்டது