வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் (VEDASANDUR PANCHAYAT UNION), தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் 22 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. இதன் வட்டார வளர்ச்சி அலுவலகம் வேடசந்தூரில் உள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 96,379 ஆகும். அதில் ஆண்கள் 47,848; பெண்கள் 48.531 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 16,456 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 8,065; பெண்கள் 8,391 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 6 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 2; பெண்கள் 4 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சிகள்
தொகுவேடசந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 22 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது.[3]
- அம்மாபட்டி
- E. சிட்டூர்
- கல்வார்பட்டி
- கூவாக்கபட்டி
- கோவிலூர்
- குடப்பம்
- குட்டம்
- குளத்துபட்டி
- மல்வார்பட்டி
- மாரம்பாடி
- நாகம்பட்டி
- நாகையாகோட்டை
- நல்லமனார்கோட்டை
- நத்தப்பட்டி
- பாலபட்டி
- பூதிபுரம்
- வி. புதுக்கோட்டை
- சிறீராமபுரம்
- தட்டாரபட்டி
- உசிலம்பட்டி
- வெல்லம்பட்டி
- விருதலைபட்டி