கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம் (KODAIKANAL PANCHAYAT UNION), இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இந்த ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கொடைக்கானலில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 70,018 ஆகும். அதில் ஆண்கள் 35,341; பெண்கள் 34,677 ஆக உள்ளனர். பட்டியல் சமூக மக்களின் தொகை 14,387 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 7,232; பெண்கள் 7,155 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,893 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 1,464; பெண்கள் 1429 ஆக உள்ளனர்.[2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]
- அடுக்கம்
- காமனூர்
- கிழக்குசெட்டிபட்டி
- கூக்கல்
- கும்பாரையூர்
- மானவனூர்
- பாச்சலூர்
- பேரியூர்
- பூலாத்தூர்
- பூம்பாறை
- பூண்டி
- தாண்டிக்குடி
- வடகவுஞ்சி
- வெள்ளக்காவி
- வில்பட்டி