பட்டிவீரன்பட்டி

பட்டிவீரன்பட்டி (ஆங்கிலம்:Pattiveeranpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இந்த பேருராட்சி பட்டிவீரன்பட்டி, அழகாபுரி, எம்.ஜி.ஆர்.நகர், ராமகிருஷ்ணாபுரம், அண்ணாநகர், அம்பேத்கர்நகர் ஆகிய உட்கிடை கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதியின் முக்கிய தொழில்கள் தென்னை விவசாயம் மற்றும் ஆடு வளர்த்தல் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8602 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 2.59 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]


பட்டிவீரன்பட்டி
பட்டிவீரன்பட்டி
அமைவிடம்: பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°22′02″N 77°58′49″E / 10.3673283°N 77.9802746°E / 10.3673283; 77.9802746
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் நிலக்கோட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[2]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[3]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [4]
மக்கள் தொகை 6,887 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் http://www.townpanchayat.in/pattiveeranpatti


மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,290 வீடுகளும், 8,602 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,059 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 1,064 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,060 மற்றும் 0 ஆகவுள்ளனர்.[5]


ஆதாரங்கள்

தொகு
  1. பட்டிவீரன்பட்டி பேரூராட்சியின் இணையதளம்
  2. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  5. Pattiveeranpatti Town Panchayat Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டிவீரன்பட்டி&oldid=3344289" இலிருந்து மீள்விக்கப்பட்டது