தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] இவ்வூராட்சி ஒன்றியத்தில் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. பழனி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தொப்பம்பட்டியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 1,08,541 தொகை ஆகும். அதில் ஆண்கள் 54,571; பெண்கள் 53,970 ஆக உள்ளனர். பட்டியல் சாதி மக்களின் தொகை 25,879 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 12,945; பெண்கள் 12,934 ஆக உள்ளனர். பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 33 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 21; பெண்கள் 12 ஆக உள்ளனர்.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. அக்கரைபட்டி
  2. கொலுமகொண்டான்
  3. கோரிகடவு
  4. கொட்டத்துறை
  5. கோவில் அம்மாபட்டி
  6. மானூர்
  7. மாரிசிலம்பு
  8. மேல்கரைபட்டி
  9. மேட்டுபட்டி
  10. மிடாபாடி
  11. மொல்லம்பட்டி
  12. முத்துநாயக்கன்பட்டி
  13. புளியம்பட்டி
  14. புஷ்பத்தூர்
  15. ராஜம்பட்டி
  16. தாளையூத்து
  17. தொப்பம்பட்டி
  18. தும்பலபட்டி
  19. வாகரை
  20. வேலம்பட்டி
  21. வில்வாதம்பட்டி
  22. ஆப்பனூத்து
  23. அப்பியம்பட்டி
  24. அப்பிபாளையம்
  25. பொதுவார்பட்டி
  26. தேவத்தூர்
  27. கள்ளிமந்தயம்
  28. காரியாம்பட்டி
  29. கூத்தம்பூண்டி
  30. கொத்தயம்
  31. மஞ்சநாயக்கன்பட்டி
  32. பாலப்பம்பட்டி
  33. பருத்தியூர்
  34. பூசாரிபட்டி
  35. பொருலூர்
  36. புதூர்
  37. புங்கமுத்தூர்
  38. சிக்கமநாயக்கன்பட்டி

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/25-Dindigul.pdf
  3. திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் கிராம ஊராட்சிகள்