அய்யலூர் (ஆங்கிலம்:Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீ பரப்பும், 2011-இல் 17100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியி்ல் 52 உட்கடை கிராமங்கள் அடங்கியுள்ளது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

அய்யலூர்
—  பேரூராட்சி  —
அய்யலூர்
அமைவிடம்: அய்யலூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°28′51″N 78°09′23″E / 10.4807°N 78.1563°E / 10.4807; 78.1563
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் வேடசெந்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

17,100 (2011)

814/km2 (2,108/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21 சதுர கிலோமீட்டர்கள் (8.1 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ayyalur

அமைவிடம்

தொகு

திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, திண்டுகல்லிருந்துயிலிருந்து 25 கிமீ; வேடசந்தூரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

21 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 61.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர். [5]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. அய்யலூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Ayyalur Population Census 2011



"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யலூர்&oldid=2742077" இலிருந்து மீள்விக்கப்பட்டது