பூம்பாறை

இந்தியாவின் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம்

பூம்பாறை என்பது இந்தியாவில், தமிழ் நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில்  இருந்து 18 கிமீ (11 மைல்) தொலைவில் உள்ள ஒரு மலை கிராமமாகும். இது  பழனி மலைகளின் இதயம் போன்று இக்கிராமம் அமைந்துள்ளது. இது 1,920 மீட்டர் (6,300 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[2]

பூம்பாறை
சிற்றூர்
பூம்பாறை சிற்றூர்
பூம்பாறை சிற்றூர்
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்Dindigul
வட்டம்கொடைக்கானல்
ஏற்றம்1,920 m (6,300 ft)
மக்கள்தொகை (2001)[1]
 • மொத்தம்4,456
Languages
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

மக்கள் தொகை தொகு

பூம்பாறை கிராமத்தில் 1,073 குடும்பங்கள் உள்ளன. இதில் 2,251 ஆண்கள் மற்றும் 2,205 பெண்கள் ஆவர்.[1]

பூம்பாறை குழந்தை வேலப்பருக்கு புகழ் பெற்றது. ஊரில் உள்ள 1533 தொழிலாளர்களில், வாழ்வாதாரத்திற்கான வழிமுறைகளில் சாதாரண தொழிலாளர்கள் 841, வேளாண் பணியாளர்கள் 279, கைவினைஞர் 392, மாத சம்பளம் வாங்குவோர் 10 பேர், பிறர் 11 பேர் என்றுள்ளனர்.[3]

கல்வி தொகு

பூம்பறை கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியும், ஒரு அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் டேனிஷ் நர்சரி மற்றும் துவக்கப்பள்ளி ஆகியவை உள்ளன.[4] ஊரில் உள்ள 5-14 வயதுடைய 1531 குழந்தைகளில், 891 பேர் பள்ளிக்குச் செல்லவிலாமல், வேலைக்குச் செல்கின்றனர், 136 பேர் பள்ளிக்கும் சென்று வேலைக்கும் செல்கின்றனர், 504 பேர் பள்ளிக்கு மட்டும் செல்கிறனர்.[5]

குழந்தை வேலப்பர் கோவில் தொகு

 
குழந்தை வேலப்பர் சுவாமி கோயில்

இங்கு உள்ள குழ்ந்தை வேலப்பர் கோவில் (குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவில்) [6] மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாசனத்தில் உருவாக்கப்பட்டது எனப்படுகிறது. இந்த கோயில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.[7] ஒவ்வொரு வருடமும் பூம்பாறை முருகனுக்கு தேர் திருவிழா  கொண்டாடப்படுகிறது. தைப் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. பொதுவாக தை அல்லது மாசி மாதத்தில் இவ்விழா நடைபெறும்

 
மேல் பழனி காப்புக் காட்டில் பூம்பாறையின் அமைவிடம்

வெளிப்புற ஆதாரங்கள் தொகு

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Census India: Tamil Nadu villages, Poombarai". Census of India 2001. இந்திய அரசு. 27 May 2002. p. 1. பார்க்கப்பட்ட நாள் 2008-10-15.
  2. Google Maps Terrain
  3. Government of Tamil Nadu, Rural Development and Panchayat Raj Department, DISTRICT - DINDIGUL, BLOCK - KODAIKANAL, Panchayat Name - Poombari, MEANS OF LIVELIHOOD[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Government of Tamil Nadu, Department of School Education, Tamil Nadu Schools, Kodaikanal block, Poombari[தொடர்பிழந்த இணைப்பு]
  5. STATUS OF CHILDREN[தொடர்பிழந்த இணைப்பு]
  6. Arulmigu Dandayudhapani Swami Temple, Palani associated temples:Kulandai Velayudha Swami Tirukkovil
  7. The Orange Properties, Tourist Attraction, Kuzhanthai Velappar Kovil[தொடர்பிழந்த இணைப்பு]
  8. kodaisriayyappastours.com POOMBARAI VILLAGE TOUR பரணிடப்பட்டது 2009-01-30 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்பாறை&oldid=3765979" இலிருந்து மீள்விக்கப்பட்டது