குழந்தை வேலப்பர் கோயில்

கொடைக்கானல், பூம்பாறையில் உள்ள முருகன் கோவில்

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில் என்பது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மேற்கே 18 கி.மீ தொலைவில் உள்ள பூம்பாறை சிற்றூரில் ஊரின் நடுவில் உள்ள ஒரு முருகன் கோயிலாகும்.[1]

பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயில்
குழந்தை வேலப்பர் கோயில் is located in தமிழ் நாடு
குழந்தை வேலப்பர் கோயில்
Location in Tamil Nadu, India
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவு:கொடைக்கானல்
ஆள்கூறுகள்:10°15′23″N 77°24′26″E / 10.25639°N 77.40722°E / 10.25639; 77.40722
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:www.poombaraimurugan.org

இக்கோவில் மூன்றாயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டதாக கூறப்படுகிறது[2]. இக்கோயிலில் உள்ள சிலையானது போகர் என்னும் சித்தரால் நவபாசனத்தில் உருவாக்கப்பட்டது எனப்படுகிறது. இந்த கோயில் பழனி தேவஸ்தானத்தின் கீழ் வருகிறது.[3] ஒவ்வொரு வருடமும் பூம்பாறை முருகனுக்கு தேர் திருவிழா  கொண்டாடப்படுகிறது. தைப் பூசத்திற்குப் பிறகு வரும் கேட்டை நட்சத்திரத்தன்று விழா நடைபெறுகிறது. பொதுவாக தை அல்லது மாசி மாதத்தில் இவ்விழா நடைபெறும்

அமைப்பு

தொகு

குழந்தை வேலப்பர் கோயிலானது முகமண்டபம், மகாமண்டபம், இடைநாழிகை, கருவறை ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளது. கோயில் கருவறைக்கு எதிரில் பிரகாரத்தில் மயில், பலிபீடம், கொடிமரம், விளக்குத் தூண் போன்றவை அமைந்துள்ளன. கருங்கல்லால் கட்டபட்ட கருவறையின் மேலே சுதையால் ஒற்றை நிலை விமாணம் அமைக்கபட்டுள்ளது. விமாணதானது நாற்கர வடிவிலான சிகரத்துடன் உச்சியில் உலோக கவசத்துடன் அமைந்துள்ளது. கருவறையில் போகரால் நவபாசாணத்தால் அமைக்கபட்ட குழந்தை வேலர் நிலை அமைந்துள்ளது. குழந்தை வேலப்பரின் உருவமானது பழனி தண்டாயுதபாணியை ஒத்த உருவத்தில் உள்ளார். இரு கைகளுடன் உள்ள அவர் வலக் கையில் தண்டத்தையும், இடக் கையை தொடையின் முன்புறம் வைத்த வலதம்பி முத்திரையுடன் நின்ற கோலத்தில் உள்ளார். இந்த குழந்தை வேலப்பர் சம்பாத நிலையிலும் பழனி தண்டாயுதபாணி திரிபங்க நிலையிலும் காணப்படுகிறார். கருவறையின் வடக்கில் கிழக்கு நோக்கி சிவனுக்கு சிற்றாலயம் அமைந்துள்ளது. முருகன் கோயில் பிரகாரத்தைச் சுற்றி விநாயகர், பைரவர், நவகிரகம், இடும்பன், நாகர், அருணகிரிநாதர், மள்ளர், பத்திரகாளியம்மன் ஆகியோருக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறைக்கு முன்புறம் இடைநாழிகையின் வெளிப்புறச் சுவரில் சிவகாமி உடனுறை நடராசர், பிரம்மன் ஆகியோரின் திருமேனிகள் நிறுவப்பட்டுள்ளன.[1]

தொன்மம்

தொகு
 
பூம்பரை கோவிலில் தமிழ் கல்வெட்டுகள்

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதரின் பாடலின் படி, முருகன் அருணகிரிநாதரை அரக்கனிடமிருந்து குழந்தை வடிவில் வந்து காப்பாற்றினார். எனவே இந்த கோவிலின் முக்கிய கடவுள் 'குழந்தை வேலப்பர்' என்று அழைக்கப்படுகிறார்.

10 ஆம் நூற்றாண்டில், போகர் சீனாவில் இருந்து திரும்பியபோது, பழனி மற்றும் பூம்பாறை (மேற்கு தொடர்ச்சி மலைகள்) நடுவில் மேலும் ஒரு நவபாசன சிலையை அமைத்தார். அந்த இடம் யானை கெஜம் (போகர் காடு) என்று அழைக்கப்படுகிறது. கோவிலில் உள்ள கல்வெட்டுகளின்படி, இந்த கோவில் சேர வம்சத்தின் அரசரால் கட்டப்பட்டது

சிறப்புகள்

தொகு

இக்கோயிலானது பழனி முருகன் கோயிலுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது எனப்படுகிறது. கோயிலின் தல மரமாக குறிஞ்சிச் செடி உள்ளது.[1]

விழாக்கள்

தொகு

ஒவ்வொரு ஆண்டும் தை அல்லது மாசி மாதத்தில் பத்துநாள் உற்சவமும், தேர்த் திருவிழாவும் சிறப்பாக நடத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குழந்தை_வேலப்பர்_கோயில்&oldid=3898580" இலிருந்து மீள்விக்கப்பட்டது