தமிழக மாநகராட்சிகள்

தமிழகத்தில் உள்ள பெரிய மாநகரங்களும் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகும்

இக்கட்டுரை
தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல்
என்ற தொடரில் ஒரு பகுதி

TamilNadu Logo.svg

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 15 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம் மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 15 மாநகராட்சிகள் உள்ளன.

வ.எண் மாநகர் மக்கள்தொகை
கணக்கெடுப்பு
2011
மாநகராட்சி
ஆக்கப்பட்ட
ஆண்டு
மொத்த வார்டுகள்
1. சென்னை மாநகராட்சி 86,96,010 1688 200
2. மதுரை மாநகராட்சி 14,62,420 1971 100
3. கோவை மாநகராட்சி
(கோயம்புத்தூர்)
42,24,106 1981 148
4. திருச்சி மாநகராட்சி
(திருச்சிராப்பள்ளி)
1,021,717 1994 65
5. சேலம் மாநகராட்சி 10,13,388 1994 60
6. நெல்லை மாநகராட்சி
(திருநெல்வேலி)
4,74,838 1994 55
7. திருப்பூர் மாநகராட்சி 4,66,998 2008 60
8. ஈரோடு மாநகராட்சி 4,44,782 2008 60
9. வேலூர் மாநகராட்சி 4,21,327 2008 60
10. தூத்துக்குடி மாநகராட்சி 3,56,094 2008 51
11. திண்டுக்கல் மாநகராட்சி 2,07,225 2014 60
12. தஞ்சாவூர் மாநகராட்சி 2,22.943 2014 60
13. நாகர்கோயில் மாநகராட்சி 2,24,849 2019 52
14. ஓசூர் மாநகராட்சி 1,16,821 2019 55
15 ஆவடி மாநகராட்சி 3,44,701 2019 80
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழக_மாநகராட்சிகள்&oldid=2894136" இருந்து மீள்விக்கப்பட்டது