ஒசூர் மாநகராட்சி
ஒசூர் மாநகராட்சி (Hosur City Municipal Corporation) இந்தியாவின் தெற்கில் உள்ள தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள மாநகராட்சி ஆகும். ஒசூர் நகராட்சி பிப்ரவரி 13,2019-ஆம் ஆண்டு 13-ஆவது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஒசூர் மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 144 கோடி ரூபாய் ஆகும். இம்மாநகராட்சி மத்திகிரி பேரூராட்சி, ஆவலப்பள்ளி, மூக்கண்டப்பள்ளி, சுசுவாடி ஆகிய ஊராட்சிகளையும் இணைத்து 45 வார்டுகளையும் நான்கு மண்டலங்களையும் கொண்டுள்ளது. ஒசூர் தனி மாவட்டமாக மாற்ற முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து வருகிறார். பிப்ரவரி 2022-இல் ஒசூர் மாநகராட்சிக்கான முதல் தேர்தல் நடைபெற்றது.[1]
ஒசூர் மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
மேயர் | |
துணை மேயர் | ஆனந்தய்யா, திமுக 4 மார்ச் 2022 |
மாவட்ட ஆட்சியர் | ஜெயா சந்திர பானு முதல் |
உறுப்பினர்கள் | 45 |
கூடும் இடம் | |
படிமம்:Hosurcorporation.jpg | |
Hosur municipal corporation building | |
வலைத்தளம் | |
www |
மாநகராட்சி வடிவமைப்புதொகு
மாநகராட்சி மன்றம் நேரிடையையாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மேலும் மேயர் மற்றும் வட்ட நகராட்சி உறுப்பினர்களால் நடத்தப்பெறுகின்றது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், மேயர் மற்றும் துணைமேயர்களால் மன்றம் குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படுகின்றது. இம்மன்றத்தில் ஆக்கப்பூர்வமான, மாநகருக்குத் தேவையான செயல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. ஒசூர் மாநகராட்சியானது தற்பொழுது 45 வார்டுகளைக் கொண்ட தமிழகத்தின் மாநகராட்சிகளுள் ஒன்றாகும்.
ஒசூர் மாநகராட்சிதொகு
பரப்பளவு | |||
---|---|---|---|
732 ச. கிமீ | |||
மக்கள் தொகை | |||
2011 கணக்கெடுப்பின்படி | 4,94,821 | ||
மாநகராட்சி மண்டலங்கள் | |||
கிழக்கு மண்டலம் | மேற்கு மண்டலம் | தெற்கு மண்டலம் | வடக்கு மண்டலம் |
மாநகராட்சி வட்டங்கள் | |||
45 வட்டங்கள் | |||
இம்மன்றத்திற்காக அமைக்கப்பெற்ற நிலைக்குழுக்கள் | |||
வரி மற்றும் நிதிக் குழு | |||
பணிக்குழு | |||
திட்டக் குழு | |||
நல்வாழ்வுக் குழு | |||
கல்விக் குழு | |||
கணக்கிடுதல் குழு |
மாநகராட்சி உறுப்பினர்கள்தொகு
ஆணையர் | மேயர் | துணை மேயர் | மாநகராட்சி உறுப்பினர்கள் |
---|---|---|---|
திரு . பாலசுப்பிரமணியம் | எஸ். ஏ. சத்யா | ஆனந்தையா | 45 |
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- [www.Hosurcorporation.gov.in ஓசூர் மாநகராட்சி இணையதளம்]