ஒசூர் மாநகர மேயர்கள் பட்டியல்

ஒசூர் மேயர்கள் பட்டியல்

ஒசூர் மேயர் (Mayor of Hosur) என்பவர் தமிழ்நாட்டிலுள்ள ஒசூர் மாநகரின் முதல் குடிமகன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் என்ற பதவிக்குரியவரான இவர் ஓசூர் மாநகராட்சியின் 45 மாமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் நகரத்தின் தலைமை நிர்வாகியாக பொறுப்பு வகிக்கிறார்.

ஒசூர் மேயர்
Mayor of Hosur
தற்போது
எஸ். ஏ. சத்யா
Typeமாநகராட்சி ஆணையம்
பதவிபதவியில்
அலுவலகம்பாகலூர் சாலை, ஒசூர்
நியமிப்பவர்ஒசூர் மாமன்ற தேர்தல் பிரிவு
பதவிக் காலம்5 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்எஸ். ஏ. சத்யா
உருவாக்கம்2022

தமிழ்நாட்டில் 2006-ஆம் ஆண்டு மேயரை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் முறை நீக்கப்பட்டது. தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் 2011 ஆம் ஆண்டு நேரடித் தேர்தல் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.[1] ஆனால் 2022 ஆண்டு நடந்த மாநகராட்சித் தேர்தலில் மேயர்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கும் முறை மீண்டும் கொண்டுவரப்பட்டது.

நகராட்சியாக இருந்த ஒசூர் 2019 பெப்ரவரி மாதம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனாலும் தமிழ்நாட்டின் பிற மாநகரங்களைப் போலவே ஒசூர் மேயர் பதவியும் காலியாகவே இருந்தது. 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சேர்ந்த எஸ். ஏ. சத்யா, ஒசூரின் முதல் மேயராக 4 மார்ச் 2022 அன்று பதவியேற்றார்.[2]

ஒசூர் உள்ளாட்சி அமைப்பின் வரலாறு

தொகு

தேர்வு நிலை பேரூராட்சியாக இருந்த ஒசூர், 1992 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியானது. 2011 ஆண்டு மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டபள்ளி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[3] 2019 பெப்ரவரி மாதம் அச்செட்டிபள்ளி ஊராட்சி, பேகேபள்ளி ஊராட்சி, சென்னசந்திரம் ஊராட்சி, கொத்தகொண்டபள்ளி ஊராட்சி, ஒன்னல்வாடி ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, தொரபள்ளி அக்ரஹாரம் ஊராட்சி, பேரண்டப்பள்ளி ஊராட்சி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் ஒசூருடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைமூலம் ஒசூர் மாநகரின் பரப்பளவானது 200 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிவடைந்தது.[4]

ஊராட்சித் தலைவர்கள் பட்டியல்

தொகு
வ. எண் உருவப்படம் பெயர் பதவிக் காலம் ஊராட்சித் தேர்தல்
1   கே. அப்பாவு பிள்ளை 1943 1973 1ஆவது

(தொடர்ந்து 30 ஆண்டுகள்)

1ஆவது
2   கே. ஏ. மனோகரன் 1974 1979

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

( 1979 – 1986) காலக்கட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை

பேரூராட்சித் தலைவர்கள் பட்டியல்

தொகு
வ. எண் உருவப்படம் பெயர் தேர்வான வார்டு அரசியல் கட்சி பதவிக் காலம் பேரூராட்சித் தேர்தல்
1   கே. ஏ. மனோகரன் மக்களால் நேரடியாகத் தேர்வு சுயேட்சை 1986 1991 1ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

1ஆவது

நகராட்சித் தலைவர்கள் பட்டியல்

தொகு
வ. எண் உருவப்படம் பெயர் தேர்வான வார்டு அரசியல் கட்சி பதவிக் காலம் நகரமன்றத் தேர்தல்
( 1991 – 1996) காலக்கட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை
1   கி. குருசாமி மக்களால் நேரடியாகத் தேர்வு திராவிட முன்னேற்றக் கழகம் 1996 2001 1ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

1ஆவது
2 பி. எம். நஞ்சுண்டசாமி மக்களால் நேரடியாகத் தேர்வு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2001 2006 2ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

1ஆவது
3   எஸ். ஏ. சத்யா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2006 2011 3ஆவது

நான்கரை ஆண்டுகள்

5   பி. பாலகிருஷ்ணா ரெட்டி மக்களால் நேரடியாகத் தேர்வு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2011 24 அக்டோபர் 2016 4ஆவது

(5 ஆண்டுகள் 0 நாட்கள்)

4ஆவது
( 2016 – 2022) காலக்கட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை

மேயர்கள் பட்டியல்

தொகு
வ. எண் உருவப்படம் பெயர் தேர்வான கோட்டம் அரசியல் கட்சி பதவிக் காலம் மாமன்றத் தேர்தல்
1   எஸ். ஏ. சத்யா 23[5] திராவிட முன்னேற்றக் கழகம் 4 மார்ச் 2022 பதவியில் 1ஆவது

(2 ஆண்டுகள், 262 நாட்கள்)

1ஆவது

மேற்கோள்கள்

தொகு