பாலகிருஷ்ண ரெட்டி

தமிழக அரசியல்வாதி

பாலகிருஷ்ண ரெட்டி (P. Balakrishna Reddy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதியாவார். 2001 முதல் அதிமுக உறுப்பினராக உள்ளார். கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரைச் சேர்ந்த இவர் பன்னிரெண்டாம் வகுப்பு வரைப் படித்தவர். இவரது தொழில் வேளாண்மை, செங்கல் தொழிற்சாலை போன்றவை ஆகும். 2011 ஆண்டு ஒசூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது ஒசூர் ஒன்றிய செயலாளராக இருந்தார். 2016 ஆண்டு ஒசூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] இவருக்கு தமிழில் எழுதப்படிக்கத் தெரியாது என்ற விமர்சனம் உள்ளது.[3] 2017 ஆகத்து 21 இல் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது அதன்படி பாலகிருஷ்ண ரெட்டி இளைஞர் நலன் மேம்பாடு, விளையாட்டுத் துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும், சட்டத்துறை அமைச்சராகவும் செயல்பட்டார்.[4]

பாலகிருஷ்ணா ரெட்டி

நீதிமன்ற வழக்குகள் தொகு

இவர் பாஜகவில் இருந்தபோது 1998 ஆம் ஆண்டு சொந்த ஊரில் உள்ள ஒரு ஏழைப் [5] பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்ததால் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து பேருந்து மீது கல் வீசிய வழக்கில் 2019 சனவரி ஏழு அன்று சிறப்பு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இதனால் இவர் 7 சனவரி 2019 அன்று சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை விட்டு விலகினார்.[6] ஏற்கனவே இவர் மீதான நில அபகரிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.[7]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.tn.gov.in/government/cabinetministers
  2. "அமைச்சரானார் பாலகிருஷ்ணா ரெட்டி". தினமணி. 24 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  3. "தமிழில் எழுத படிக்க தெரியாத பாலகிருஷ்ணா ரெட்டிக்கு அமைச்சர் பதவி". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 29 மே 2016.
  4. "அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன: ஓபிஎஸ் துணை முதல்வராகிறார்; சசிகலாவை நீக்க நடவடிக்கை". செய்தி. தி இந்து. 22 ஆகத்து 2017. பார்க்கப்பட்ட நாள் 23 ஆகத்து 2017.
  5. 20 ஆண்டு கடந்து அமைச்சர் பதவியை பறித்த தலித் பெண்ணின் கண்ணீர்: பாலகிருஷ்ண ரெட்டி வழக்கின் தொடக்கப் புள்ளி தி இந்து திசை - 09 Jan 2019
  6. "சிறைத் தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா!". என்.டி.டி.வி. https://www.ndtv.com/tamil/minister-balakrishna-reddy-resigns-1974082. பார்த்த நாள்: 7 January 2019. 
  7. "Plea in Madras HC against minister over land-grabbing". Deccanchronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/290918/plea-in-madras-hc-against-minister-over-land-grabbing.html. பார்த்த நாள்: 7 January 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகிருஷ்ண_ரெட்டி&oldid=3851250" இலிருந்து மீள்விக்கப்பட்டது