கடலூர் மாநகராட்சி

கடலூர் மாநகராட்சி (Cuddalore City Corporation) இந்தியாவின் முதல் நகராட்சியும் ஆங்கில ஆட்சியரின் தலைமையிடமாக இருந்தது. இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் செஞ்சியை ஆண்ட மன்னர்களிடம் இருந்து கடலூரில் இருந்த புனித டேவிட் கோட்டையை வாங்கினார்கள். சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை பிரெஞ்சுக்காரர்கள் கைப்பற்றிய போது புனித டேவிட் கோட்டைக்கு தங்கள் மாகாணத் தலைநகரை மாற்றி இந்தியாவின் தென் பிராந்தியத்தை இந்தக் கோட்டையில் இருந்து ஆண்டு வந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுடனான வாணிபத் தொடர்புகளுக்கு, கடலூர் துறைமுகத்தை அதிக அளவில் பயன்படுத்தியதாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன,

கடலூர் மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு22 அக்டோபர் 2021
தலைமை
மேயர்
சுந்தரி, திமுக
4 மார்ச் 2022 முதல்
துணை மேயர்
தாமரைச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சி
4 மார்ச் 2022 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்45
அரசியல் குழுக்கள்
திமுக கூட்டணி 34
அதிமுக 6
பாஜக 1
பாமக 1
சுயேச்சைகள் 3

கடலூரில், கடலூர் முதுநகர் மற்றும் கடலூர் புதுநகர் என இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. 1866 வரை நகராட்சி அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்கள் முதுநகர் பகுதியிலேயே இருந்தன. 1866க்கு பிறகு அவை புதுநகர் பகுதியில் உள்ள மஞ்சக்குப்பம் எனப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

சரித்திரக் குறிப்புகள் படி இவ்வூர் சோழர், பல்லவர், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. பாரம்பரியப்படி சைவ சமயக் கோட்பாடுகள் இங்கு பின்பற்றப்படுவதன் மூலம் சோழர்கள் இப்பகுதியை ஆட்சி செய்துள்ளது புலனாகிறது.

22 அக்டோபர் 2021 அன்று கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநகராட்சி செயல்படுவதற்கான மாநகராட்சி அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றி வெளியிட்டுள்ளது.[1][2]இந்த அவசர சட்டத்தில் ஊராட்சி அமைப்புகள் இணைந்து அரசாணை வெளியீடு இல்லை.

புதிதாக உருவாக்கப்பட்ட கடலூர் மாநகராட்சி பகுதியில்

கடலூர் நகரம், கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சி மன்றங்களின் பகுதிகள்;[3][4]

மாநகராட்சி தேர்தல், 2022 தொகு

2022-ஆம் ஆண்டில் கடலூர் மாநகராட்சியின் 45 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் முதன்முறையாக நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக கூட்டணி 34 வார்டுகளையும், அதிமுக 6வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டடையும், பாமக 1 வார்டையும், சுயேச்சைகள் 3 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், மேயராக திமுகவின் சுந்தரியும் , துணை மேயராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தாமரைச்செல்வனும் வெற்றி பெற்றனர்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. https://tamil.oneindia.com/kumbakonam-corporation-elections-449//ordinances-promulgated-for-establishing-four-corporations/article37131423.ece Ordinances promulgated for establishing four Corporations
  2. "கடலூர் மாநகராட்சி அவசர சட்டம் வெளியீடு :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-11-21.
  3. Village Panchayats of Cuddalore Block
  4. மாவட்டம் மற்றும் வட்டார (ஊராட்சி ஒன்றியம்) வாரியான ஊராட்சி மன்றங்களின் பட்டியல்
  5. Cuddalore Corporation Election Results 2022
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலூர்_மாநகராட்சி&oldid=3883898" இலிருந்து மீள்விக்கப்பட்டது