கடலூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கடலூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
கடலூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கடலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 51 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கடலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 2,21,801 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 57,991 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,155 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுகடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3][4]
- விலங்கல்பட்டு
- வெள்ளப்பாக்கம்
- வெள்ளக்கரை
- வரக்கால்பட்டு
- வானமாதேவி
- உள்ளேரிப்பட்டு
- உச்சிமேடு
- தோட்டப்பட்டு
- தூக்கணாம்பாக்கம்
- திருவந்திபுரம்
- திருப்பனாம்பாக்கம்
- திருமாணிகுழி
- தென்னம்பாக்கம்
- சிங்கிரிகுடி
- செம்மங்குப்பம்
- சேடப்பாளையம்
- இராமாபுரம்
- புதுக்கடை
- பில்லாலி
- பெரியகங்கணாங்குப்பம்
- பாதிரிக்குப்பம்
- பள்ளிப்பட்டு
- பச்சையாங்குப்பம்
- நத்தப்பட்டு
- நாணமேடு
- நல்லாத்தூர்
- நடுவீரப்பட்டு
- மேல்அழிஞ்சிப்பட்டு
- மருதாடு
- மதலப்பட்டு
- மலையபெருமாள் அகரம்
- குமளங்குளம்
- குடிகாடு
- கோண்டூர்
- கொடுக்கன்பளையம்
- கிளிஞ்சிக்குப்பம்
- கீழ்குமாரமங்கலம்
- கீழ்அழஞ்சிப்பட்டு
- காரணப்பட்டு
- காராமணிக்குப்பம்
- கரையேரவிட்டகுப்பம்
- கரைமேடு
- காரைக்காடு
- குண்டுஉப்பலவாடி
- குணமங்கலம்
- கடலூர் ஓ. டி.
- செல்லஞ்சேரி
- சி. என். பாளையம்
- அழகியநத்தம்
- அரிசிபெரியாங்குப்பம்
- அன்னவல்லி