தூத்துக்குடி மாநகராட்சி
தூத்துக்குடி மாநகராட்சி இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான தூத்துக்குடியை நிர்வகிக்கும் அமைப்பகும். இது மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மாநகராட்சியாகும். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரமாகும். தூத்துக்குடி மாநகராட்சி, தூத்துக்குடி அத்திமரப்பட்டி, குமரகிரி, மாப்பிள்ளை ஊரணி, மீளவிட்டான், முத்தையாபுரம் மற்றும் சங்கரப்பேரி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் ஆகும். தூத்துக்குடி சிறப்புநிலை நகராட்சியாக இருந்த இதை, 05 ஆகஸ்டு 2008 அன்று மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி 60 வார்டுகள் கொண்டது.
தூத்துக்குடி மாநகராட்சி | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 05 ஆகஸ்டு 2008 |
தலைமை | |
மேயர் | என். பி. ஜெகன், திமுக 4 மார்ச் 2022 முதல் |
துணை மேயர் | ஜெனிட்டா செல்வராஜ், திமுக 4 மார்ச் 2022 முதல் |
மாநகராட்சி ஆணையாளர் | தினேஷ் குமார், இ.ஆ.ப |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
அரசியல் குழுக்கள் | ஆளும் கட்சி (52)
|முஸ்லிம் லீக்]] (1) எதிர்கட்சிகள் (6)
மற்றவர்கள் (2)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 19 பெப்பிரவரி 2022 |
அடுத்த தேர்தல் | 2027 |
குறிக்கோளுரை | |
வையகம் வாழ வாழ்வோம் | |
கூடும் இடம் | |
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், 113, தமிழ் சாலை, தூத்துக்குடி - 628002. | |
வலைத்தளம் | |
thoothukudicorporation |
தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் சிறப்புமிக்க மாநகராட்சியாகவும், மக்கள் தொகையின் அடிப்படையில் ஆறாவது படி நிலையில் உள்ள மாநகராட்சியாகும். இங்குள்ள மூன்று முக்கியச் சாலைகள் மதுரையும், திருச்செந்தூர் மற்றும் திருநெல்வேலியை இணைக்கின்றது.
பரப்பளவு | |
---|---|
13.47 ச. கிமீ | |
மக்கள் தொகை | |
2011 கணக்கெடுப்பின்படி | 4,11,628 |
மாநகராட்சி அலுவலகம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து 8 கிமீ தொலைவில் மேற்கு கிரேட் காட்டன் சாலையில் அமைந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி
தொகுஆணையர் | மேயர் | துணை மேயர் | மாநகராட்சி உறுப்பினர்கள் |
---|---|---|---|
திரு. மதுபாலன், இ.ஆ.ப | என். பி. ஜெகன் | ஜெனிட்டா செல்வராஜ் | 60 |
மக்கள்தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 13.47 சகிமீ பரப்பும், 51 மாமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 4,11,628 ஆகும். அதில் 2,05,958 ஆண்களும், 2,05,670 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 91.57 % மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 970 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.மக்கள்தொகையில் இந்துக்கள் 64.97 %, இசுலாமியர்கள் 4.74 %, கிறித்தவர்கள் 30.14 % மற்றும் பிறர் 0.15% ஆகவுள்ளனர்.[1]
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022
தொகு2022-ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 50 வார்டுகளையும், அதிமுக 6 வார்டுகளையும், சுயேச்சைகள் 4 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்களில் திமுகவின் என். பி. ஜெகன் மற்றும் ஜெனிட்டா செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டனர்.[2]
மேயர்கள் பட்டியல்
தொகுஎண் | பெயர் | பதவிக்காலம் | அரசியல் கட்சி | |||
---|---|---|---|---|---|---|
பொறுப்பேற்ற நாள் | வெளியேறிய நாள் | மொத்த காலம் | ||||
1 | ஆர். கஸ்தூரி தங்கம் | 5 ஆகத்து 2008 | 24 அக்டோபர் 2011 | 3 ஆண்டுகள், 80 நாட்கள் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
2 | சசிகலா புஷ்பா | 25 அக்டோபர் 2011 | 23 சனவரி 2014 | 2 ஆண்டுகள், 90 நாட்கள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
3 | ஏ. பி. ஆர். ஆண்டனி கிரேஸ் | 24 செப்டம்பர் 2014 | 24 அக்டோபர் 2016 | 2 ஆண்டுகள், 30 நாட்கள் | ||
4 | பெ. ஜெகன் | 4 மார்ச் 2022 | பதவியில் | 2 ஆண்டுகள், 192 நாட்கள் | திராவிட முன்னேற்றக் கழகம் |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புக்கள்
தொகு- தூத்துக்குடி மாநகராட்சி இணையத் தளம் பரணிடப்பட்டது 2009-03-23 at the வந்தவழி இயந்திரம்