வேலூர் மாநகராட்சி

இந்தியாவின் தமிழ்நாட்டின் 21 மாநகராட்சிகளில், வேலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சி

வேலூர் மாநகராட்சி. இந்தியா துணைக் கண்டத்தின் தமிழ்நாடு மாநிலத்தின் மாவட்டமான வேலூர், மாநகராட்சி அமைப்பாக, 1866 இல் உருவாக்கப்பட்ட நகர மேம்பாட்டு சட்டம் 1865, இன்படி, ஆகஸ்டு 1,2008[1] முதல், வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இம்மாநகராட்சி, மேயர், துணை மேயர் உள்ளிட்ட 60 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. காட்பாடி பேரூராட்சி வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.இந்த மாநகராட்சியின் ஆண்டு வரி வருவாய் 100 கோடி ரூபாய் ஆகும்.

வேலூர் மாநகராட்சி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1 ஆகஸ்டு 2008
தலைமை
மேயர்
சுஜாதா ஆனந்தகுமார், திமுக
4 மார்ச் 2022 முதல்
துணை மேயர்
சுனில், திமுக
4 மார்ச் 2022 முதல்
மாநகராட்சி ஆணையாளர்
ரத்தினசாமி, இ.ஆ.ப
கட்டமைப்பு
உறுப்பினர்கள்60
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சி (45)

எதிர் கட்சியினர் (9)

மற்றவர்கள் (6)

வரலாறு

தொகு

வேலூர் நகராட்சி மன்றம், 1920[1] இல் எம்.டி.எம். சட்டம் 1920 -இன் படி அன்றைய காலகட்டத்திலேயே உருவாக்கப்பட்டது. அதன் பின் இரண்டாம் நிலை நகராட்சியாக 1947[1] யிலும், பின் முதல் நிலை நகராட்சியாக 1979[1] யிலும் உயர்த்தப்பட்டது. ஆரம்ப காலகட்டத்தில் இதன் நகராட்சி அமைப்புகளுக்குள் உள்ளடங்கிய நகரப் பகுதிகளாக கோட்டை, அடவாநந்தல், பெரிபேட்டை, வேலப்பாடி, சலவன்பேட்டை, தொட்டப்பாளையம், அருகந்தம்பூண்டி, கொசப்பேட்டை, கவரைப்பேட்டை, பொறுப்பங்காடி (கமிசரி பசார்) மற்றும் சங்கரன்பாளையம் போன்றவையிருந்தன. 2011-க்குப் பின்னர், காட்பாடி, வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

மாநகராட்சி தேர்தல், 2022

தொகு

2022-ஆம் ஆண்டில் வேலூர் மாநகராட்சியின் 60 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 45 வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டையும், பாமக 1 வார்டையும், சுயேச்சைகள் 6 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், திமுகவின் சுஜாதா ஆனந்தகுமார் மேயராகவும், துணை மேயராக சுனிலும் வெற்றி பெற்றனர்.[2]

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புக்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேலூர்_மாநகராட்சி&oldid=3855204" இலிருந்து மீள்விக்கப்பட்டது