காட்பாடி

வேலூர் மாநகராட்சி


காட்பாடி (ஆங்கிலம்:Katpadi), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் வேலூர் மாநகராட்சியின் வடக்கு பகுதி ஆகும்.

வடக்கு வேலூர்
—  வேலூர் மாநகர பகுதி  —
வடக்கு வேலூர்
அமைவிடம்: வடக்கு வேலூர், வேலூர்
ஆள்கூறு 12°58′24″N 79°08′13″E / 12.973400°N 79.136900°E / 12.973400; 79.136900
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வி. ஆர். சுப்புலட்சுமி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.vellore.tn.nic.in
வேலூர் காட்பாடி ரயில் நிலையம்

வேலூர் மாநகராட்சியின் முக்கிய பகுதி காட்பாடி ஆகும். இங்கு தான் வேலூர் காட்பாடி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் வேலூர் தொழிற்நுட்ப கல்லூரி உள்ளது.

வேலூர் மாநகராட்சியுடன் இணைத்தல்

தொகு

காட்பாடி பேரூராட்சியை வேலூர் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது வேலூர் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. காட்பாடியின் விரிவாக்கப் பகுதியில் காந்தி நகர் உள்ளது.

மேலும் இங்கு வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இவ்வூரில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

இங்குள்ள காட்பாடி சந்திப்பு தொடருந்து நிலையம், சென்னை - பெங்களூரு, வேலூர் - திருப்பதி மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் செல்லும் இருப்புப் பாதைகள் சந்திக்கும் இடமாக உள்ளது.

புவியியல்

தொகு

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 79°08′E / 12.98°N 79.13°E / 12.98; 79.13 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "Katpadi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்பாடி&oldid=3928764" இலிருந்து மீள்விக்கப்பட்டது