தமிழ்நாடு வருவாய் வட்டங்கள்

(தமிழக வருவாய் வட்டங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்நாட்டில் தற்போது உள்ள 38 மாவட்டங்களில் 317 வருவாய் வட்டங்கள் உள்ளது. அவைகளின் மாவட்ட வாரியான பட்டியல்[1] :

தமிழக மாவட்டங்களின் வரைபடம்

திருவள்ளூர் மாவட்டம்

தொகு

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பொன்னேரி, திருவள்ளூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 48 உள்வட்டங்களும் மற்றும் 792 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

  1. கும்மிடிப்பூண்டி வட்டம்
  2. திருவள்ளூர் வட்டம்
  3. பொன்னேரி வட்டம்
  4. பூந்தமல்லி வட்டம்
  5. திருத்தணி வட்டம்
  6. பள்ளிப்பட்டு வட்டம்
  7. ஊத்துக்கோட்டை வட்டம்
  8. ஆவடி வட்டம்
  9. ஆர். கே. பேட்டை வட்டம் (இராமகிருஷ்ணராஜா பேட்டை வட்டம்)

சென்னை மாவட்டம்

தொகு
 
சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்கள்

சென்னை மாவட்டம், அம்பத்தூர், கிண்டி, தண்டையார்பேட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 16 வருவாய் வட்டங்களும், 40 உள்வட்டங்களும் மற்றும் 68 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3] தற்போது சென்னை மாவட்டத்தின் பரப்பளவு 178 சகிமீ ஆகவுள்ளது. இதனை 426 சகிமீ ஆக உயர்த்த, வருவாய் வட்டங்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.[4] [5]மேலும் பெருநகர சென்னை மாநகராட்சியும் கொண்டது.

  1. தண்டையார்பேட்டை வட்டம்
  2. அமைந்தக்கரை வட்டம்
  3. அயனாவரம் வட்டம்
  4. கொளத்தூர் வட்டம்
  5. எழும்பூர் வட்டம்
  6. கிண்டி வட்டம்
  7. மாம்பலம் வட்டம்
  8. மயிலாப்பூர் வட்டம்
  9. பெரம்பூர் வட்டம்
  10. புரசைவாக்கம் வட்டம்
  11. வேளச்சேரி வட்டம்
  12. மதுரவாயல் வட்டம்
  13. திருவொற்றியூர் வட்டம்
  14. சோழிங்கநல்லூர் வட்டம்
  15. ஆலந்தூர் வட்டம்
  16. மாதவரம் வட்டம்
  17. அம்பத்தூர் வட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம்

தொகு

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும் கொண்டது.

  1. காஞ்சிபுரம் வட்டம்
  2. உத்திரமேரூர் வட்டம்
  3. ஸ்ரீபெரும்புதூர் வட்டம்
  4. வாலாஜாபாத் வட்டம்
  5. குன்றத்தூர் வட்டம்[6]

செங்கல்பட்டு மாவட்டம்

தொகு

நவம்பர் 2019இல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு நிறுவப்பட்டது.[7]செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு, தாம்பரம், மதுராந்தகம் என 3 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 40 குறு வட்டங்களும், 636 வருவாய் கிராமங்களும் கொண்டது.[8]

  1. செங்கல்பட்டு வட்டம்
  2. மதுராந்தகம் வட்டம்
  3. தாம்பரம் வட்டம்
  4. திருக்கழுகுன்றம் வட்டம்
  5. செய்யூர் வட்டம்
  6. பல்லாவரம் வட்டம்
  7. திருப்போரூர் வட்டம்
  8. வண்டலூர் வட்டம்

வேலூர் மாவட்டம்

தொகு

வேலூர் மாவட்டம், வேலூர், குடியாத்தம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது. இம்மாவட்டப் பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019-இல் இராணிப்பேட்டை மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் நிறுவப்பட்டது.

  1. வேலூர் வட்டம்
  2. குடியாத்தம் வட்டம்
  3. கீழ்வைத்தியனான் குப்பம் வட்டம் (கே. வி. குப்பம் வட்டம்)
  4. காட்பாடி வட்டம்
  5. பேரணாம்பட்டு வட்டம்
  6. அணைக்கட்டு வட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம்

தொகு

வேலூர் மாவட்டத்தின், பகுதிகளைக் கொண்டு நவம்பர் 2019 இல் நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டது.[9]

  1. அரக்கோணம் வட்டம்
  2. வாலாஜா வட்டம்
  3. நெமிலி வட்டம்
  4. ஆற்காடு வட்டம்
  5. சோளிங்கர் வட்டம்
  6. கலவை வட்டம்

திருப்பத்தூர் மாவட்டம்

தொகு

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும் கொண்டது.[10]

  1. ஆம்பூர் வட்டம்
  2. வாணியம்பாடி வட்டம்
  3. திருப்பத்தூர் வட்டம்
  4. நாட்டறம்பள்ளி வட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்

தொகு

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யார் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 54 உள்வட்டங்களும், 1064 வருவாய் கிராமங்களும் கொண்டது.[11]

  1. ஆரணி வட்டம்
  2. செங்கம் வட்டம்
  3. செய்யார் வட்டம்
  4. போளூர் வட்டம்
  5. தண்டராம்பட்டு வட்டம்
  6. திருவண்ணாமலை வட்டம்
  7. வந்தவாசி வட்டம்
  8. கலசப்பாக்கம் வட்டம்
  9. வெம்பாக்கம் வட்டம்
  10. சேத்துப்பட்டு வட்டம்
  11. கீழ்பெண்ணாத்தூர் வட்டம்
  12. சவ்வாது மலை வட்டம்

விழுப்புரம் மாவட்டம்

தொகு

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் முகையூர் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் கொண்டது.

  1. விழுப்புரம் வட்டம்
  2. செஞ்சி வட்டம்
  3. திண்டிவனம் வட்டம்
  4. வானூர் வட்டம்
  5. விக்கிரவாண்டி வட்டம்
  6. மரக்காணம் வட்டம்
  7. மேல்மலையனூர் வட்டம்
  8. கண்டாச்சிபுரம் வட்டம்
  9. திருவெண்ணெய்நல்லூர் வட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

தொகு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் கொண்டது.[12][13]

  1. கள்ளக்குறிச்சி வட்டம்
  2. திருக்கோவிலூர் வட்டம்
  3. உளுந்தூர்பேட்டை வட்டம்
  4. சங்கராபுரம் வட்டம்
  5. சின்னசேலம் வட்டம்
  6. கல்வராயன்மலை வட்டம்

கடலூர் மாவட்டம்

தொகு

கடலூர் மாவட்டம், கடலூர், விருத்தாச்சலம் மற்றும் சிதம்பரம் என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 905 வருவாய் கிராமங்களும் கொண்டது.[14]

  1. சிதம்பரம் வட்டம்
  2. கடலூர் வட்டம்
  3. காட்டுமன்னார்கோயில் வட்டம்
  4. குறிஞ்சிப்பாடி வட்டம்
  5. பண்ருட்டி வட்டம்
  6. திட்டக்குடி வட்டம்
  7. விருத்தாச்சலம் வட்டம்
  8. வேப்பூர் வட்டம்
  9. புவனகிரி வட்டம்
  10. ஸ்ரீமுஷ்ணம் வட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம்

தொகு

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 29 உள்வட்டங்களும் மற்றும் 661 வருவாய் கிராமங்களும் கொண்டது.[15]

  1. கிருஷ்ணகிரி வட்டம்
  2. ஓசூர் வட்டம்
  3. போச்சம்பள்ளி வட்டம்
  4. ஊத்தங்கரை வட்டம்
  5. தேன்கனிக்கோட்டை வட்டம்
  6. பர்கூர் வட்டம்
  7. சூளகிரி வட்டம்
  8. அஞ்செட்டி வட்டம்

தருமபுரி மாவட்டம்

தொகு

தருமபுரி மாவட்டம், தருமபுரி மற்றும் அரூர் என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 23 உள்வட்டங்களும் மற்றும் 470 வருவாய் கிராமங்களும் கொண்டது. [16]

  1. தருமபுரி வட்டம்
  2. அரூர் வட்டம்
  3. பாலக்கோடு வட்டம்
  4. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்
  5. பென்னாகரம் வட்டம்
  6. காரிமங்கலம் வட்டம்
  7. நல்லம்பள்ளி வட்டம்

சேலம் மாவட்டம்

தொகு

சேலம் மாவட்டம், சேலம், ஆத்தூர், மேட்டூர் மற்றும் சங்ககிரி என 4 வருவாய் கோட்டங்களும், 13 வருவாய் வட்டங்களும், 44 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[17]

  1. சேலம் வட்டம்
  2. சேலம் மேற்கு வட்டம்
  3. சேலம் தெற்கு வட்டம்
  4. ஆத்தூர் (சேலம்) வட்டம்
  5. எடப்பாடி வட்டம்
  6. கெங்கவல்லி வட்டம்
  7. மேட்டூர் வட்டம்
  8. ஓமலூர் வட்டம்
  9. சங்ககிரி வட்டம்
  10. வாழப்பாடி வட்டம்
  11. ஏற்காடு வட்டம்
  12. காடையாம்பட்டி வட்டம்
  13. பெத்தநாயக்கன்பாளையம் வட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

தொகு

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் என்ற ஒரு வருவாய் கோட்டமும், 4 வருவாய் வட்டங்களும், 11 உள்வட்டங்களும் மற்றும் 152 வருவாய் கிராமங்களும் கொண்டது. [18]

  1. குன்னம் வட்டம்
  2. பெரம்பலூர் வட்டம்
  3. வேப்பந்தட்டை வட்டம்
  4. ஆலத்தூர் வட்டம்

அரியலூர் மாவட்டம்

தொகு

அரியலூர் மாவட்டம், அரியலூர் மற்றும் உடையார்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 4 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 195 வருவாய் கிராமங்களும் கொண்டது.[19]

  1. அரியலூர் வட்டம்
  2. செந்துறை வட்டம்
  3. உடையார்பாளையம் வட்டம்
  4. ஆண்டிமடம் வட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம்

தொகு
  1. கீழ்வேலூர் வட்டம்
  2. நாகப்பட்டினம் வட்டம்
  3. திருக்குவளை வட்டம்
  4. வேதாரண்யம் வட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்

தொகு
  1. மயிலாடுதுறை வட்டம்
  2. சீர்காழி வட்டம்
  3. தரங்கம்பாடி வட்டம்
  4. குத்தாலம் வட்டம்

ஈரோடு மாவட்டம்

தொகு

ஈரோடு மாவட்டம், ஈரோடு மற்றும் கோபிச்செட்டிப்பாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 35 உள்வட்டங்களும் மற்றும் 375 வருவாய் கிராமங்களும் கொண்டது.[20]

  1. பவானி வட்டம்
  2. அந்தியூர் வட்டம்
  3. ஈரோடு வட்டம்
  4. கோபிசெட்டிப்பாளையம் வட்டம்
  5. பெருந்துறை வட்டம்
  6. சத்தியமங்கலம் வட்டம்
  7. நம்பியூர் வட்டம்
  8. கொடுமுடி வட்டம்
  9. மொடக்குறிச்சி வட்டம்
  10. தாளவாடி வட்டம்

நாமக்கல் மாவட்டம்

தொகு

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் மற்றும் 391 வருவாய் கிராமங்களும் கொண்டது.[21]

  1. நாமக்கல் வட்டம்
  2. திருச்செங்கோடு வட்டம்
  3. இராசிபுரம் வட்டம்
  4. பரமத்தி-வேலூர் வட்டம்
  5. கொல்லிமலை வட்டம்
  6. சேந்தமங்கலம் வட்டம்
  7. குமாரபாளையம் வட்டம்
  8. மோகனூர் வட்டம்[22]

திருச்சிராப்பள்ளி மாவட்டம்

தொகு

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், லால்குடி, முசிறி என 4 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும் மற்றும் 506 வருவாய் கிராமங்களும் கொண்டது.[23]

  1. மணப்பாறை வட்டம்
  2. மருங்காபுரி வட்டம்
  3. ஸ்ரீரங்கம் வட்டம்
  4. திருச்சிராப்பள்ளி (மேற்கு) வட்டம்
  5. திருச்சிராப்பள்ளி (கிழக்கு) வட்டம்
  6. இலால்குடி வட்டம்
  7. மண்ணச்சநல்லூர் வட்டம்
  8. துறையூர் வட்டம்
  9. முசிறி வட்டம்
  10. தொட்டியம் வட்டம்
  11. திருவெறும்பூர் வட்டம்

தஞ்சாவூர் மாவட்டம்

தொகு

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 50 உள்வட்டங்களும் மற்றும் 906 வருவாய் கிராமங்களும் கொண்டது.[24][25]

  1. கும்பகோணம் வட்டம்
  2. ஒரத்தநாடு வட்டம்
  3. பாபநாசம் வட்டம்
  4. பட்டுக்கோட்டை வட்டம்
  5. பூதலூர் வட்டம்
  6. பேராவூரணி வட்டம்
  7. தஞ்சாவூர் வட்டம்
  8. திருவையாறு வட்டம்
  9. திருவிடைமருதூர் வட்டம்

திருவாரூர் மாவட்டம்

தொகு

திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மற்றும் மன்னார்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும், 28 உள்வட்டங்களும் மற்றும் 573 வருவாய் கிராமங்களும் கொண்டது.[26]

  1. குடவாசல் வட்டம்
  2. மன்னார்குடி வட்டம்
  3. நன்னிலம் வட்டம்
  4. நீடாமங்கலம் வட்டம்
  5. கூத்தாநல்லூர் வட்டம்
  6. திருத்துறைப்பூண்டி வட்டம்
  7. திருவாரூர் வட்டம்
  8. வலங்கைமான் வட்டம்

நீலகிரி மாவட்டம்

தொகு

நீலகிரி மாவட்டம், உதகை, குன்னூர் & கூடலூர் என 3 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 15 உள்வட்டங்களும் மற்றும் 88 வருவாய் கிராமங்களும் கொண்டது. [27]

  1. உதகமண்டலம் வட்டம்
  2. குந்தா வட்டம்
  3. பந்தலூர் வட்டம்
  4. குன்னூர் வட்டம்
  5. கூடலூர் வட்டம்
  6. கோத்தகிரி வட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம்

தொகு

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர் வடக்கு மற்றும் பொள்ளாட்சி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 295 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. [28]

  1. கோயம்புத்தூர் வடக்கு வட்டம்
  2. அன்னூர் வட்டம்
  3. கோயம்புத்தூர் தெற்கு வட்டம்
  4. மேட்டுப்பாளையம் வட்டம்
  5. பொள்ளாச்சி வட்டம்
  6. கிணத்துக்கடவு வட்டம்
  7. வால்பாறை வட்டம்
  8. சூலூர் வட்டம்
  9. பேரூர் வட்டம்
  10. மதுக்கரை வட்டம்
  11. ஆனைமலை வட்டம்

திருப்பூர் மாவட்டம்

தொகு

திருப்பூர் மாவட்டம், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் தாராபுரம் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 33 உள்வட்டங்களும் மற்றும் 350 வருவாய் கிராமங்களும் கொண்டது. [29]

  1. திருப்பூர் வடக்கு வட்டம்
  2. திருப்பூர் தெற்கு வட்டம்
  3. அவிநாசி வட்டம்
  4. பல்லடம் வட்டம்
  5. உடுமலைப்பேட்டை வட்டம்
  6. தாராபுரம் வட்டம்
  7. காங்கேயம் வட்டம்
  8. மடத்துக்குளம் வட்டம்
  9. ஊத்துக்குளி வட்டம்

கரூர் மாவட்டம்

தொகு

கரூர் மாவட்டம், கரூர் மற்றும் குளித்தலை என 2 வருவாய் கோட்டங்களும், 7 வருவாய் வட்டங்களும், 20 உள்வட்டங்களும் மற்றும் 203 வருவாய் கிராமங்களும் கொண்டது. [30]

  1. அரவக்குறிச்சி வட்டம்
  2. கரூர் வட்டம்
  3. கிருஷ்ணராயபுரம் வட்டம்
  4. குளித்தலை வட்டம்
  5. கடவூர் வட்டம்
  6. மண்மங்கலம் வட்டம்
  7. புகளூர் வட்டம்

புதுக்கோட்டை மாவட்டம்

தொகு

புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் என 3 வருவாய் கோட்டங்களும், 12 வருவாய் வட்டங்களும், 45 உள்வட்டங்களும் மற்றும் 763 வருவாய் கிராமங்களும் கொண்டது. [31]

  1. ஆலங்குடி வட்டம்
  2. அறந்தாங்கி வட்டம்
  3. ஆவுடையார்கோயில் வட்டம்
  4. கந்தர்வகோட்டை வட்டம்
  5. கறம்பக்குடி வட்டம்
  6. இலுப்பூர் வட்டம்
  7. குளத்தூர் வட்டம்
  8. மணமேல்குடி வட்டம்
  9. புதுக்கோட்டை வட்டம்
  10. பொன்னமராவதி வட்டம்
  11. திருமயம் வட்டம்
  12. விராலிமலை வட்டம்

தேனி மாவட்டம்

தொகு

தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் உத்தமபாளையம் என 2 வருவாய் கோட்டங்களும், 5 வருவாய் வட்டங்களும், 17 உள்வட்டங்களும் மற்றும் 113 வருவாய் கிராமங்களும் கொண்டது. [32]

  1. தேனி வட்டம்
  2. ஆண்டிப்பட்டி வட்டம்
  3. பெரியகுளம் வட்டம்
  4. போடிநாயக்கனூர் வட்டம்
  5. உத்தமபாளையம் வட்டம்

திண்டுக்கல் மாவட்டம்

தொகு

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், பழனி மற்றும் கொடைக்கானல் என 3 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும் மற்றும் 361 வருவாய் கிராமங்களும் கொண்டது.[33]

  1. பழனி வட்டம்
  2. கொடைக்கானல் வட்டம்
  3. ஒட்டன்சத்திரம் வட்டம்
  4. வேடசந்தூர் வட்டம்
  5. நத்தம் வட்டம்
  6. நிலக்கோட்டை வட்டம்
  7. ஆத்தூர் வட்டம்
  8. திண்டுக்கல் கிழக்கு வட்டம்
  9. திண்டுக்கல் மேற்கு வட்டம்
  10. குஜிலியம்பாறை வட்டம்

மதுரை மாவட்டம்

தொகு

மதுரை மாவட்டம், மதுரை, மேலூர், உசிலம்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 11 வருவாய் வட்டங்களும், 57 உள்வட்டங்களும் மற்றும் 665 வருவாய் கிராமங்களும் கொண்டது.[34]

  1. மதுரை வடக்கு வட்டம்
  2. மதுரை தெற்கு வட்டம்
  3. மதுரை மேற்கு வட்டம்
  4. மதுரை கிழக்கு வட்டம்
  5. திருப்பரங்குன்றம் வட்டம்
  6. மேலூர் வட்டம்
  7. உசிலம்பட்டி வட்டம்
  8. வாடிப்பட்டி வட்டம்
  9. பேரையூர் வட்டம்
  10. திருமங்கலம் வட்டம்
  11. கள்ளிக்குடி வட்டம்

சிவகங்கை மாவட்டம்

தொகு

சிவகங்கை மாவட்டம், 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 529 வருவாய் கிராமங்களும் கொண்டது.[35]

  1. தேவகோட்டை வட்டம்
  2. இளையான்குடி வட்டம்
  3. காரைக்குடி வட்டம்
  4. மானாமதுரை வட்டம்
  5. சிவகங்கை வட்டம்
  6. காளையார்கோவில் வட்டம்
  7. திருப்பத்தூர் வட்டம்
  8. திருப்புவனம் வட்டம்
  9. சிங்கம்புணரி வட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

தொகு

இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம், பரமக்குடி என 2 வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 38 உள்வட்டங்களும் மற்றும் 400 வருவாய் கிராமங்களும் கொண்டது.[36]

  1. இராமநாதபுரம் வட்டம்
  2. பரமக்குடி வட்டம்
  3. கடலாடி வட்டம்
  4. கமுதி வட்டம்
  5. முதுகுளத்தூர் வட்டம்
  6. இராமேஸ்வரம் வட்டம்
  7. திருவாடானை வட்டம்
  8. இராஜசிங்கமங்கலம் வட்டம்
  9. கீழக்கரை வட்டம்

விருதுநகர் மாவட்டம்

தொகு

விருதுநகர் மாவட்டம், 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும், 39 உள்வட்டங்களும் மற்றும் 600 வருவாய் கிராமங்களும் கொண்டது.

  1. அருப்புக்கோட்டை வட்டம்
  2. காரியாபட்டி வட்டம்
  3. இராஜபாளையம் வட்டம்
  4. சாத்தூர் வட்டம்
  5. சிவகாசி வட்டம்
  6. ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம்
  7. வத்திராயிருப்பு வட்டம்
  8. திருச்சுழி வட்டம்
  9. விருதுநகர் வட்டம்
  10. வெம்பக்கோட்டை வட்டம்

திருநெல்வேலி மாவட்டம்

தொகு

இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதிகளைக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் நவம்பர் 2019 இல் நிறுவப்பட்டது. இம்மாவட்டம் திருநெல்வேலி மற்றும் சேரன்மாதேவி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[37]

  1. திருநெல்வேலி வட்டம்
  2. திசையன்விளை வட்டம்
  3. அம்பாசமுத்திரம் வட்டம்
  4. நாங்குநேரி வட்டம்
  5. பாளையங்கோட்டை வட்டம்
  6. ராதாபுரம் வட்டம்
  7. மானூர் வட்டம்
  8. சேரன்மாதேவி வட்டம்

தென்காசி மாவட்டம்

தொகு

திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து நவம்பர் 2019-இல் நிறுவப்பட்ட தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி என 2 வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களையும் கொண்டது.[38][39]

  1. சங்கரன்கோயில் வட்டம்
  2. சிவகிரி வட்டம்
  3. ஆலங்குளம் வட்டம்
  4. கடையநல்லூர் வட்டம்
  5. வீரகேரளம்புதூர் வட்டம்
  6. தென்காசி வட்டம்
  7. செங்கோட்டை வட்டம்
  8. திருவேங்கடம் வட்டம்

தூத்துக்குடி மாவட்டம்

தொகு

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கோவில்பட்டி என 3 வருவாய் கோட்டங்களும், 10 வருவாய் வட்டங்களும் மற்றும் 480 வருவாய் கிராமங்களும் கொண்டது.

  1. எட்டயபுரம் வட்டம்
  2. கோவில்பட்டி வட்டம்
  3. ஒட்டபிடாரம் வட்டம்
  4. சாத்தான்குளம் வட்டம்
  5. ஸ்ரீவைகுண்டம் வட்டம்
  6. திருசெந்தூர் வட்டம்
  7. தூத்துக்குடி வட்டம்
  8. விளாத்திக்குளம் வட்டம்
  9. ஏரல் வட்டம்
  10. கயத்தாறு வட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

தொகு

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும் மற்றும் 188 வருவாய் கிராமங்களும் கொண்டது.

  1. அகத்தீஸ்வரம் வட்டம்
  2. கல்குளம் வட்டம்
  3. விளவங்கோடு வட்டம்
  4. தோவாளை வட்டம்
  5. திருவட்டார் வட்டம்
  6. கிள்ளியூர் வட்டம்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Taluks of Tamilnadu
  2. Thiruvallur District Revenue Administration
  3. Taluks of Chennai District
  4. Chennai district likely to expand to 426sqkm mid-July 2018
  5. Chennai district doubles in size
  6. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  7. தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிப்பு - அரசாணை வெளியீடு
  8. செங்கல்பட்டு மாவட்டம் - வருவாய் நிர்வாகம்
  9. RANIPET DISTRICT Revenue Administration
  10. திருப்பத்தூர் மாவட்டம்-வருவாய் நிர்வாகம்
  11. Revenue District
  12. KALLAKURICHI DISTRICT Revenue Administration
  13. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு
  14. Cuddalore District Revenue Administration
  15. Krishnagiri District Revenue Administration
  16. Dharmapuri District Revenue Administration
  17. Salem District Revenue Administration
  18. Perambalur District Revenue Administration
  19. Ariyalur District Revenue Administration
  20. Erode District Revenue Administration
  21. [ https://namakkal.nic.in/revenue-administration/ Namakkal District Revenue Administration]
  22. தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018
  23. Tiruchirappalli District Revenue Administration
  24. Tanjore District Revenue Administration
  25. https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2018/06/2018062826.pdf
  26. Tiruvarur District Revenue Administration
  27. N ilgiris District Revenue Administration
  28. Coimbatore District Revenue Administration
  29. Tirupupur District Revenue Administration
  30. Karur District Revenue Administration
  31. Pudukkottai District Revenue Administration
  32. Theni District Revenue Administration
  33. Dindigul District Revenue Administration
  34. "Madurai District Revenue Administration". Archived from the original on 2019-04-12. பார்க்கப்பட்ட நாள் 2018-08-31.
  35. Sivaganga District Revenue Administration
  36. Ramanathapuram District Revenue Administration
  37. தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு
  38. Tenkashi District-Local Bodies Administration
  39. புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு